இயக்கவியல் பொருள்முதல்வாதம்
மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின்
விலை : ரூ.295
நூலாசிரியர்: மார்க்ஸ் - எங்கெல்ஸ் - லெனின்
வெளியீட்டாளர்: செந்தளம் பதிப்பகம்
பதிப்பு : 2022
பக்கங்கள்: 370
நூல் குறிப்பு:
இத்தொகுப்பின் நோக்கம். பருப்பொருளின் வளர்ச்சி, உணர்வு மற்றும் இருத்தலின் இடை உறவைப் பற்றிய இயக்கவியல் பகுப்பாய்வைத் தெளிவாக விளக்கிக் கூறித் தத்துவஞானத்தின் அடிப்படையான பிரச்சினைக்கு முரணில்லாத பொருள்முதல்வாதத் தீர்வைத் தருகின்ற கட்டுரைகளும் யதார்த்தத்தைத் துல்லியமாகப் பிரதிபலிப்பதற்கும் அதை அறிவதற்கும் மனித சிந்தனையின் தகுதியை அங்கீகரித்தலைப் பற்றிய கட்டுரைகளும் இத்தொகுப்பில் வெளியிடப்பட்டுள்ளன.
மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் எழுதிய - இயக்கவியல் பொருள்முதல்வாத நோக்கில் குறிப்பிடத்தக்க - அனைத்துப் படைப்புகளும் இந்நூலில் இடம் பெற்றிருப்பதாகக் கூற முடியாது; ஏனென்றால் அவை அனைத்தையும் ஒரு தனிப் புத்தகத்தில் வெளியிட இயலாது. மார்க்சிய-லெனினியத்தின் மூலச்சிறப்புள்ள நூல்களில் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைப் பற்றி எழுதப்பட்டிருக்கின்ற மிக முக்கியமான கட்டுரைகளை இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
இத்தொகுப்பு நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டது: முதல் பகுதியில் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் எழுதியவையும் இரண்டாம் பகுதியில் லெனின் எழுதியவையும் இடம் பெற்றிருக்கின்றன.
தொடர்புக்கு: +91 96003 49295