சீனா ஏகாதிபத்திய நாடா?
என்.பி. டர்னர் - தமிழில்: ஆதிவராகன்
விலை : ரூ.240
நூலாசிரியர்: என்.பி. டர்னர் - தமிழில்: ஆதிவராகன்
வெளியீட்டாளர்: செந்தளம் பதிப்பகம்
பதிப்பு : 2019
பக்கங்கள்: 294
நூல் குறிப்பு:
இந்நூல் மார்க்சிய-லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் சீனா எப்படி ஒரு முதலாளித்து நாடாக மாறி இன்று ஒரு ஏகாதிபத்திய நாடாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் உலகை மறுபங்கீடு செய்துகொள்ள போட்டிபோடும் நாடாக வளர்ந்துள்ளது என்பதை அரசியல் பொருளாதார ரீதியாக விரிவாக ஆய்வு செய்து முன்வைத்துள்ளார். அத்துடன் லெனினின் ஏகாதிபத்தியக் கோட்பாட்டு காலாவதியாகவில்லை என்பதை பொருளாதார, அரசியல் ரீதியிலும் நடைமுறை அனுபவங்களிலிருந்தும் தனது நிலைப்பாட்டை பின்வருமாறு முன்வைக்கிறது.
- தற்கால சீன முதலாளித்துவ பொருளாதாரத்தின் அளவு மற்றும் அதன் பண்புகள் பற்றியும்;
- சீனாவின் மூலதன ஏற்றுமதி மிகப் பெரும் அளவிலும் மிக வேகமாகவும் ஆப்பிரிக்கா கண்டம் முதல் உலகின் பல பகுதிகளுக்கு செல்லுதல்;
- சீனாவின் அந்நிய முதலிடுகளை காக்க சீனா தனது இராணுவத்தை உலக அளவில் விரிவாக்குதல்;
- சீனாவுக்கும் பிற ஏகாதிபத்திய நாடுகளுக்கும் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ஆபத்தான மோதல்கள் வளர்வது;
போன்ற நிகழ்வு போக்குகளை விருப்பு வெறுப்பு இன்றி ஆராய்ந்து முன்வைத்துள்ளார். இன்று உலகம் ஒரு கெட்ட போரிடும் நிலைமையை சந்தித்துக் கொண்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு போர்களால் பல நாடுகள் பல லட்சம் மக்களை பலியிட்டுள்ளது.
எனவே இன்று உலகம் சந்தித்து வரும் ஆக்கிரமிப்பு போர்களை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி, அல்லது எதிர் கொண்டுள்ள பனிப்போர் அல்லது நேரடியான போர் எதுவானாலும் சரி இப்போர்கள் குறித்து ஒரு சரியான லெனினிய போர்த்தந்திரங்களையும் செயல்தந்திரங்களயும் வகுப்பதற்கு இந்த புத்தகம் பயனுள்ளதாக அமையும்.
தொடர்புக்கு: +91 96003 49295