ஓரடி முன்னால் ஈரடி பின்னால்

லெனின்

ஓரடி முன்னால் ஈரடி பின்னால்

விலை : ரூ.310

நூலாசிரியர்: லெனின்

வெளியீட்டாளர்: செந்தளம் பதிப்பகம்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 388 

நூல் குறிப்பு:

ஓரடி முன்னால், ஈரடி பின்னால்..... தனி நபர்களின் வாழ்வில் இது நிகழ்வதுண்டு. நாடுகளின் வரலாற்றிலும், கட்சிகளின் வளர்ச்சியிலும் இது நேர்வதுண்டு. புரட்சிகர சமூக-ஜனநாயகவாதம், பாட்டாளி வர்க்க அமைப்பு, கட்சிக் கட்டுப்பாடு ஆகியவற்றின் கோட்பாடுகளின் தவிர்க்க முடியாத பூரண வெற்றியை ஒரு கணமும் சந்தேகிப்பது குற்றம் மிகுந்த கோழைத்தனமாக இருக்கும். நாம் பெருமளவு வெற்றி ஈட்டியுள்ளோம். தோல்விகளைக் கண்டு மருளாமல், நாம் போராடிக் கொண்டே போக வேண்டும். வட்டக்குழு சண்டைகளின் அற்பமான வழி முறைகளை வெறுத்து ஒதுக்கி விட்டு, உறுதியோடு போராட வேண்டும். சகல ருஷ்ய சமூக-ஜனநாயகவாதிகளையும் ஒன்று சேர்க்கும் ஒரே கட்சி இணைப்பை அரும்பாடுபட்டு அடைந்துள்ளோம், இதை நாம் இயன்ற அளவு முயற்சித்து பேணிக்காக்க வேண்டும். இடையறாத, முறையான பணியின் மூலமாக, எல்லாக் கட்சி அங்கத்தினர்களும், குறிப்பாகத் தொழிலாளர்களும், கட்சி உறுப்பினரின் கடமைகளை உணர்ச்சி பூர்வமாகப் புரிந்து கொள்ளவும், இரண்டாவது காங்கிரசில் நடந்த போராட்டத்தைப் புரிந்துக் கொள்ளவும், நமது வேறுபாட்டின் அனைத்துக் காரணங்கள், அனைத்துக் கட்டங்கள், மற்றும் சந்தர்ப்பவாதத்தின் அப்பட்டமான அழிவையும் புரிந்து கொள்ளவும் ஆவன செய்ய முயன்று கொண்டே இருக்க வேண்டும். நமது வேலைத்திட்டம், நமது போர்த்தந்திரங்கள் ஆகிய துறைகளில் போலவே, ஸ்தாபனத் துறையிலும் சந்தர்ப்பவாதமானது பரிதாபகரமாக முதலாளித்துவ உளவியலுக்கு மண்டியிட்டு விடுகிறது, முதலாளித்துவ ஜனநாயகத்தின் கருத்தோட்டத்தை விமரிசனம் ஏதுமின்றி ஏற்றுக்  கொண்டு விடுகிறது, பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்ட  ஆயுதத்தை மழுங்கடிக்கிறது.

ஆட்சி அதிகாரத்திற்கான தனது போராட்டத்தில், பாட்டாளி வர்க்கத்துக்கு ஸ்தாபனத்தைத் தவிர வேறு ஆயுதம் ஏதும் கிடையாது. 

தொடர்புக்கு: +91 96003 49295