தமிழ்ச் சமூக வாழ்க்கை (கிபி.250 முதல் கி.பி.700 வரை)

ஆர். ஆலால சுந்தரம் - தமிழில்: ஆதிவராகன்

தமிழ்ச் சமூக வாழ்க்கை (கிபி.250 முதல் கி.பி.700 வரை)

விலை : ரூ.280

நூலாசிரியர்: ஆர். ஆலால சுந்தரம் - தமிழில்: ஆதிவராகன்

வெளியீட்டாளர்: செந்தளம் பதிப்பகம்

பதிப்பு : 2021

பக்கங்கள்: 318 

நூல் குறிப்பு:

இந்நூலின் ஆசிரியர் பின் சங்க காலமான கி.பி. 250 முதல் கி.பி. 750 வரையிலான தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்கிறார்.

ஒரு சமூகம் எந்த வரலாற்றுக் கட்டத்தில் இருந்தது என்பதை அறிய வேண்டுமானால், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, உற்பத்தி உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள், அதாவது உபரியின் பெருக்கம், சுரண்டும் வர்க்கம் எது சுரண்டப்படும் வர்க்கம் எது என்பதையும், அதற்கு தோதான மேற்கட்டுமானங்களான அரசு, மத சித்தாந்தத்தின் வளர்ச்சி ஆகியவை எந்த மட்டத்தில் இருந்தது என்பதையும் ஆய்வு செய்வதன் மூலம் முடிவுக்கு வரமுடியும். இந்நூலின் ஆசிரியரும் மேற்கண்ட அடிப்படையில் ஆய்வு செய்திருக்கிறார்.  அவர் இந்நூலில் அடிப்படையான சில கருத்தாக்கங்களை வைக்கிறார். சங்ககாலத்தில் இருந்த சமூக அமைப்பின் இறுதிக் கட்டத்தில் வேளாண் வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டது; வெளிநாட்டுடன் இருந்த வர்த்தகம் வீழ்ச்சி அடைந்தது; அரசுகள் நிலையாக அமையவில்லை ஆகிய காரணங்களால் நெருக்கடிக்குள்ளாகி வீழ்ந்தது என்கிறார்.

அதேபோல் பின் சங்க காலத்தின் இடைக் கட்டத்தில் மீண்டும் மறுமலர்ச்சி கண்டது என்கிறார். நிலத்தில் தனியுடமை திடப்பட்டது; உரிமையை வாரிசுகளுக்கு மாற்றவும், விற்கவும் உரிமை பெற்றது இக்காலத்தில்தான் என்கிறார்.  பள்ளிச் சந்தம், பிரம்மதேயம், தேவதானம் போன்ற நிலமானியமுறைகளைக் கொண்டு வந்ததும், பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டதும், ஊர், நாடு, சபை என்று அதிகாரத்தைப் பரவலாக்கியதும் இக்காலத்தில்தான் என்கிறார். இவையெல்லாம் சமூக மாற்றத்திற்கு வித்திட்டது என்றும் விளக்குகிறார். ஆகமங்கள் உருவானதும், பக்தி இயக்கம் மூலம், சிவன், விஷ்ணு போன்ற பெருந்தெய்வ வழிபாட்டு முறைகள் தோன்றியதும், பல்வேறு சாதிகள் உருவானதும், தீண்டாமை உருவானதும் பின்சங்க காலத்தில்தான் என்கிறார். பல்லவர்கள் காலத்தில் தோன்றிய மேற்கண்ட பல்வேறு மாற்றங்களை, பாண்டியர்களும், அதற்குப் பின் ஆட்சிக்கு வந்த சோழர்களும் எடுத்துக்கொண்டு விரிவுபடுத்தினார்கள். எல்லாச் சமூகம் போல் தமிழ்ச் சமூகமும் மாறிக்கொண்டும் வளர்ந்து கொண்டும் இருந்ததையும், குறிப்பாக பின் சங்க காலத்தில் நிலப்பிரபுத்துவம் உருவாகியதையும் இந்நூல் ஆய்வு செய்கிறது. 

தொடர்புக்கு: +91 96003 49295