மத்திய கங்கைச் சமவெளியில் அரசு மற்றும் வருண அமைப்பின் உருவாக்கம் - ஒரு மானிடத் தொல்லியல் பார்வை

ஆர். எஸ்.சர்மா - தமிழில்: வான் முகிலன்

மத்திய கங்கைச் சமவெளியில் அரசு மற்றும் வருண அமைப்பின் உருவாக்கம்  - ஒரு மானிடத் தொல்லியல் பார்வை

விலை : ரூ.95

நூலாசிரியர்: ஆர். எஸ்.சர்மா - தமிழில்: வான் முகிலன்

வெளியீட்டாளர்: செந்தளம் பதிப்பகம்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 106 

நூல் குறிப்பு:

இந்தியாவில் குறிப்பாக மத்திய கங்கைச் சமவெளியில் அரசு மற்றும் வருண அமைப்பு எவ்வாறு உருவாகியது என்பதை தொல்லியல் ஆதாரங்களுடன் அவைகள் உருவாவதற்கான உண்மையான பொருளியல் காரணிகளை ஆய்வு செய்யும் நூல் இது.

பண்டைய இந்திய சமூக அமைப்பில் எப்போது தனியார் சொத்துடைமை தோற்றம் பெற்றது என்றால், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் காரணமாக குறிப்பாக  NBPW (Northern black polished ware)  இரண்டாம் கட்டத்தில் விவசாயத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டபோதுதான் தனிச்சொத்துடைமை தோற்றம் பெற்றது.

விவசாய உற்பத்தியில் இரும்பின் பயன்பாடு அதாவது இரும்பானது உற்பத்தியில் ஆற்றிய பாத்திரம் என்பது வேளாண்மயமாக்கலுக்கும், அதனைத் தொடர்ந்து கைவினைத் தொழில் வளர்ச்சிக்கும்; வர்த்தக நடவடிக்கைகளுக்கும், குடியேற்றப் பகுதிகளின் பரப்பளவு மிகவும் அபரிமிதமாக அதிகரிக்கவும் வழிவகுத்தது.  

இதன் பின்னர் ஏற்பட்ட மிகைஉற்பத்திதான் தனிச்சொத்துடைமையை தோற்றுவித்தது. இந்த தனிச்சொத்துடைமை தான் சமனற்ற பங்கீட்டை சமூகத்தில் உருவாக்கியது. இவையே படிநிலையாக்கப்பட்ட வருண சமுதாயத்தின் உருவாக்கத்திற்கான அடிப்படையாகும். தனிச் சொத்துடமையின் தோற்றத்திற்குப் பிறகுதான் தொழில்களின் அடிப்படையில் வருணங்கள் உருவாயின. விவசாயம் மற்றும் தனிச்சொத்தின் அதிகரிப்பிற்கு பிறகு சத்திரிய வருணம் தோன்றிய பின்னர்தான் அரசு ஸ்தாபிக்கப்பட்டது. தனிச்சொத்தின் தோற்றத்தோடு வருணங்களின் உருவாக்கம் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது என ஆர்.எஸ்.சர்மா கூறுகிறார். 

தொடர்புக்கு: +91 96003 49295