மார்க்சியமும் மொழியியலும்

வி.ஐ.லெனின், ஜே.வி.ஸ்டாலின் - தமிழில்: பாரதி

மார்க்சியமும் மொழியியலும்

விலை : ரூ.70

நூலாசிரியர்: வி.ஐ.லெனின், ஜே.வி.ஸ்டாலின் - தமிழில்: பாரதி

வெளியீட்டாளர்: செந்தளம் பதிப்பகம்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 96 

நூல் குறிப்பு:

மொழி என்பது அடிக்கட்டுமான அமைப்பைச் சார்ந்து எழுகிற மேற்கட்டுமானத்தின் பகுதி அல்ல. அதாவது அடிக்கட்டுமானம் மொழியைப் படைப்பதில்லை. ஏனெனில் மொழி சமூகம் முழுவதற்கும் பொதுவானது. மொழி சமூகம் உருவாகும் போதே உருவாகிறது; சமூகம் அழியும்போது மொழியும் அழிகிறது. இதன் மூலம், மொழியானது அனைத்து வர்க்கங்களுக்கும் பொதுவானது என்பதை அறியலாம். ஆதலால் அடிக்கட்டுமானத்தில் ஏற்படுகின்ற மாற்றம் மொழியின் அடிப்படைகளை மாற்றுவதில்லை; மாறாக மொழியின்  சொற்தொகுதி மற்றும் இலக்கண அமைப்புகளில் மட்டுமே  சிற்சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. வேளாண்மயமாக்கல் காலகட்டத்தில் உருவான திருக்குறளுக்கும், களப்பிரர் ஆட்சி காலகட்டத்தில் உருவான ஐம்பெருங் காப்பியங்களுக்கும் இடையில் இலக்கண அமைப்பு மற்றும் சொற்தொகுதியில் மட்டுமே மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும், மொழியின் அடிப்படையில் மாற்றம் ஏதும் நிகழவிலை என்பதையும் நாம் காணலாம். திருக்குறள் வெண்பாவாலும், ஐம்பெருங்காப்பியங்கள் தாழிசை, துறை மற்றும் விருத்தம் போன்ற பாவினங்களாலும் எழுதப்பட்டது;அவ்வளவே. பழைய மரபுக் கவிதைகளுக்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கத்துடன் தமிழ் இலக்கியத்தில் பெரும்பாய்ச்சல் நிகழ்த்திய பாரதியின் புதுக்கவிதைகளுக்கும், இன்றைய ஹைக்கூ கவிதைகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கூட உதாரணமாகக் கொள்ளலாம். இதையே தோழர் ஸ்டாலின், அக்டோபர் புரட்சிக்கு முன்பும் பின்பும் மொழியின் அடிப்படைகளில் மாற்றம் ஏதும் நிகழவில்லை என்பதை இந்நூலில் குறிப்பிடுகிறார். 

தொடர்புக்கு: +91 96003 49295