யுத்ததந்திரமும் செயல்தந்திரமும்

ஜே.வி.ஸ்டாலின்

யுத்ததந்திரமும் செயல்தந்திரமும்

விலை : ரூ.40

நூலாசிரியர்: ஜே.வி.ஸ்டாலின்

வெளியீட்டாளர்: செந்தளம் பதிப்பகம்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 32 

நூல் குறிப்பு:

அரசியல் யுத்ததந்திரமும் செயல்தந்திரமும் தொழிலாளி வர்க்க இயக்கத்தைப் பற்றியன. ஆனால் தொழிலாளி வர்க்க இயக்கமோ தன்னுள் இரு அம்சங்களைக் கொண்டுள்ளது; ஒன்று, புறவயமான அம்சம் (Objective aspect): அதாவது தன் நிகழ்வான அம்சம் (Spontaneous aspect) மற்றது, அகவயமான அம்சம் (Subjective aspect): அதாவது உணர்வு பூர்வமான அம்சம் (Conscious aspect). புறவயமானதும் தன்நிகழ்வானதுமான அம்சம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் உணர்வுபூர்வமான நெறிமுறைப்படுத்தும் சித்தத்தைச் சார்ந்திராது சுயேச்சையாக நடைபெறும் நிகழ்ச்சிப்போக்குகளின் தொகுதி ஆகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி, முதலாளியத்தின் வளர்ச்சி, பழைய அரசாட்சி சிதைந்து அழிவது, பாட்டாளிவர்க்கமும் அதைச் சுற்றியுள்ள பிற வர்க்கங்களும் தாமாகக் கிளர்ந்தெழும் இயக்கங்கள்,  வர்க்கங்களுக்கிடையே நிகழும் மோதல்கள்-இவையாவும் பாட்டாளி வர்க்கத்தின் சித்தத்தைச் சார்ந்திராமல் தாமாக உருவாகி வளரும் நிகழ்வுகள். இதுதான் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் புறவய அம்சம். யுத்ததந்திரத்திற்கு இந்நிகழ்ச்சிப்போக்குகள் பற்றி எவ்விதமான பொறுப்புமில்லை. ஏனெனில் அவற்றை யுத்ததந்திரத்தால் நிறுத்தவும் முடியாது. மாற்றவும் முடியாது. இந்நிகழச்சிப் போக்குகளை கணக்கிலெடுத்துக் கொள்வதும் அவற்றை ஆதாரமாகக் கொள்வதும்தான் யுத்ததந்திரத்தால் ஆகக்  கூடியது. புறவய அம்சம், மார்க்சியத் தத்துவத்தாலும் மார்க்சிய செயல் திட்டத்தாலும் ஆய்வு செய்யப்படவேண்டிய துறையாகும்.

தொடர்புக்கு: +91 96003 49295