புதிய காலனியம்

பி.ஜே.ஜேம்ஸ் - தமிழில்: பாரதி

புதிய காலனியம்

விலை : ரூ.80

நூலாசிரியர்: பி.ஜே.ஜேம்ஸ் - தமிழில்: பாரதி

வெளியீட்டாளர்: செந்தளம் பதிப்பகம்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 102 

நூல் குறிப்பு:

புதிய தாராளக் கொள்கைகள் இந்திய மக்களுக்குக் கொண்டுவந்தது அடிமைத்தனம், வேலையின்மை, விலையுயர்வு, விவசாயிகளின் தற்கொலை, பட்டினிச்சாவுகள்தான். ஆனாலும் இந்துத்துவ மோடி ஆட்சியோ கடந்தகால அனுபவத்தைக் கூடக் கணக்கில் கொள்ளாமல் நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றி வருவதுடன், அந்நிய மூலதனத்தை அனைத்துத் துறையிலும் திறந்துவிட்டுத் தற்கொலை பாதையில் நாட்டைத் தள்ளுகிறது. இத்தகைய சூழலில் புதியகாலனிய அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ளவும், அமெரிக்காவின் புதிய காலனியத்தை எதிர்த்து அனைத்து மக்களையும் ஒரு சரியான பாதையில் அணிதிரட்டுவதற்கு இப்புத்தகம் ஒரு சிறந்த பங்காற்றும்.

மேலும், புதிய காலனிய அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் பழைய காலனியம் பற்றி அதாவது பொதுவாகக் காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றி புரிந்துகொள்ளுவது அவசியமாகும்.

தொடர்புக்கு: +91 96003 49295