தத்துவம்: ஒரு வரலாற்று சுருக்கம்

ஐ.கிளியாபிஷ் - தமிழில்: சந்திரன்

தத்துவம்: ஒரு வரலாற்று சுருக்கம்

விலை : ரூ.85

நூலாசிரியர்: ஐ.கிளியாபிஷ் - தமிழில்: சந்திரன்

வெளியீட்டாளர்: செந்தளம் பதிப்பகம்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 100 

நூல் குறிப்பு:

"தத்துவம் பாட்டாளி வர்க்கத்தினரிடம் தன்னுடைய பொருளாயத ஆயுதத்தைக் கண்டுபிடித்தது. (மக்களின்) விடுதலைக்குத் தலையாக இருப்பது தத்துவம், அதற்கு இதயமாக இருப்பது பாட்டாளி வர்க்கம்". 

இன்றைய சூழலில் கொள்கைகள், பிரச்சினைகளின் காரணத்தைத் தேடி அறியும் முயற்சிகள், அதற்கான சரியான ஆய்வு முறைகள் ஆகியவற்றிலிருந்து தன்னைத் தொலைவில் நிறுத்தி கொள்வதும், அப்பட்டமான காரியவாதமும், உடனடி தேவைகளை நிறைவு செய்துகொள்வதே போதுமானது என்கிற கருத்தும் மக்களின் பொதுக்கருத்தாக மாற்றப்பட்டிருக்கிறது. இதில் மேலும் கவலைக்குரியது இந்தியாவின் பெரும்பான்மையான, சட்டபூர்வ மார்க்சிஸ்ட்கள் கொள்கைகள், சித்தாந்த வரையறுப்புகள் என்பவற்றையே கசப்பானதாகக் காண்பதுதான். 

ஆனால் நிலவுகின்ற துன்பத் துயரங்களின் காரணங்களை விளங்கிக் கொள்ளவும், அவற்றை மாற்றவும், அதற்காகப் புரட்சிகரக் கருத்தாக்கங்களை உருவாக்கவும், மக்களின் நடைமுறைகளையும் மதிப்பீடுகளையும் மாற்றியமைக்க வேண்டிய நீண்ட, கடினமான பணி மக்களை நேசிப்பவர்களின் முன்நிற்கிறது.

இத்தகைய சூழ்நிலைகளில் ஒரு சரியான அரசியல் நிலைப்பாடு, கருத்து ஆகியவற்றை வந்தடைவதற்கு ஒரு தெளிவான தத்துவம் அவசியமாகிறது. அந்தத் தேவையைச் சிறிய அளவிலாவது  இந்நூல் நிறைவு செய்யும் என்கிற நம்பிக்கையில்தான் இந்நூல் கொண்டுவரப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: +91 96003 49295