கட்சி பற்றி

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி பேராயத்தின் தீர்மானங்கள்

கட்சி பற்றி

விலை : ரூ. 50

நூலாசிரியர்: சமரன்

வெளியீட்டாளர்: சமரன்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 60 

நூல் குறிப்பு:

கட்சியின் தலைமை முறை விஞ்ஞான ரீதியில் அமையும்படி, தத்துவப் பணியையும் நடைமுறைப் பணியையும் நிறைவேற்றுவதற்காக லெனினால் முன்வைக்கப்பட்ட அமைப்பு வடிவங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு இந்நூல் பயன்படும். போல்ஷ்விக் கட்சியின் வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களில் மாறுபட்ட நிலைமைகளுக்கு உகந்த அமைப்பு வடிவங்கள் தரப்பட்டன. அனைத்து அமைப்பு வடிவங்களும் தத்துவப்பணி, நடைமுறை பணி இரண்டையும் விஞ்ஞான பூர்வமான வேலைப் பிரிவினையின் அடிப்படையில் அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும், இரண்டு பணிகளும் சமமாக கருதப்பட வேண்டும் எனவும் லெனின் கூறுகிறார்.

ஆனால் தத்துவப் பணி, நடைமுறைப் பணி இரண்டையும் சமமாக கருதாமல்,  தத்துவப் பணியை மேலானதாகவும் நடைமுறைப் பணியை கீழானதாகவும் (அ) நடைமுறைப் பணியை மேலானதாகவும் தத்துவப் பணியை கீழானதாகவும் கருதும் போக்கு மா-லெ குழுக்களிடையே பரவலாக காணப்படுகிறது. பெரும்பாலான மா-லெ குழுக்களும், சி.பி.ஐ., சி.பி.எம் போன்ற திருத்தல்வாத கட்சிகளும் அரசியல்-தத்துவ உள்ளடக்கத்தை கைவிட்டு, வடிவத்திற்கு முக்கியத்துவம் தந்து முதலாளித்துவ அமைப்புகளாக சீரழிந்துவிட்டன. 

இத்தகைய சூழலில் தலைமை முறை பற்றிய லெனினியத்தை கற்பதற்கும் ஒரு விஞ்ஞான பூர்வமான மா-லெ கட்சியை நிறுவுவதற்கும் இந்நூல் பயன்படும் என்பது திண்ணம்.

தொடர்புக்கு: +91 96003 49295