கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத நிலைபாடும் கட்சி ஐக்கியத்திற்கான முயற்சிகளும் பிளவுகளும்

ஏஎம்கே

கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத நிலைபாடும் கட்சி ஐக்கியத்திற்கான முயற்சிகளும் பிளவுகளும்

விலை : ரூ. 130

நூலாசிரியர்: ஏஎம்கே

வெளியீட்டாளர்: சமரன்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 166 

நூல் குறிப்பு:

இந்த நூலில் ஏ.எம்.கே. புதிய காலனியாதிக்க கட்டத்தில் தோன்றிய கலைப்புவாதம் பற்றி மார்க்சிய-லெனினியத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து வைத்துள்ளார். அதனடிப்படையில் "நான்கு துறைகளில் கலைப்புவாதம்" என்று மா-லெ தத்துவத்தை வளர்த்தெடுத்தார். 

கலைப்புவாத கருத்துகளுக்கு எதிர் புரட்சிகர காலங்களில் கட்சிக்குள் இருக்கும் புரட்சியில் நம்பிக்கை இழந்த  ஊசலாட்ட சக்திகள் பலியாகின்றனர், கட்சிக்குள் கடத்துகின்றனர். 

கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாதம் பற்றிய சிறப்பான மார்க்சிய ஆய்வு நூலான இது, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஆவணமாகும். மேலும் இந்த ஆவணம் ரஷ்யாவிலும் சீனாவிலும் முதலாளித்துவ மீட்சிக்கான காரணங்கள் பற்றிய ஆய்விற்கான அடிப்படைகளை வழங்கியுள்ளது.

சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் பிளவுக்கான காரணங்களையும், எம்.எல் இயக்கங்களின் பிளவுக்கான காரணங்களையும் தீர்வையும் இந்நூல் முன்வைக்கிறது. எம்.எல் இயக்கங்களுக்கிடையிலான ஐக்கியம் பற்றிய செயல்தந்திரம் வகுப்பதற்கு ஏ.எம்.கே.வின் இந்த ஆவணம் வழிகாட்டியாக திகழ்கிறது.

தொடர்புக்கு: +91 96003 49295