மாநில அமைப்புக் கமிட்டியின் (எஸ்.ஓ.சி.) "கட்டமைப்பு நெருக்கடி-மக்கள் அதிகாரம்" வலது சந்தர்ப்பவாதமே

ஏஎம்கே

மாநில அமைப்புக் கமிட்டியின் (எஸ்.ஓ.சி.) "கட்டமைப்பு நெருக்கடி-மக்கள் அதிகாரம்" வலது சந்தர்ப்பவாதமே

விலை : ரூ. 60

நூலாசிரியர்: ஏஎம்கே

வெளியீட்டாளர்: சமரன்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 70 

நூல் குறிப்பு:

இ.க.க (மா.லெ) மாநில அமைப்புக் கமிட்டியினர் (எஸ்.ஓ.சி.), கட்டமைப்பு நெருக்கடியும் புதிய செயல்தந்திரமும் என்ற பேரில் அறிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்கள். இந்த அறிக்கையில் "ஆளும் வர்க்கங்கள் ஆளத் தகுதியிழந்துவிட்ட நிலையில், அரசின் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் திவாலாகி, தோற்றுப்போய், நிலைகுலைந்து, எதிர்நிலை சக்திகளாக மாறிவிட்ட நிலையில் அவற்றைத் தாக்கித் தகர்த்துவிட்டு அதிகாரம் அனைத்தையும் மக்களே கைப்பற்றி, மாற்று அரசியல் கட்டுமானங்களைக் கட்டமைப்போம்! மக்கள் அதிகாரத்துக்கான இயக்கத்தைக் கட்டமைப்போம்" என்று வரையறுத்தார்கள். இந்த முழக்கத்தின் அடிப்படையிலேயே எல்லா செயல்தந்திரத்தையும் வகுத்து செயல்பட்படுகிறார்கள். இன்று பாசிசத்தையும் அதன் அடிப்படையிலேயே வரையறுத்தார்கள். இதை வலது சந்தர்ப்பவாதம் என்று விமர்சித்தே ஏ.எம்.கே. எழுதியுள்ளார்.  

இன்று வலது சந்தர்ப்பவாதம் மேலோங்கி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில் அதை முறியடிப்பதற்கு இது போன்றதொரு மார்க்சிய-லெனினிய அடிப்படையிலான ஆய்வு ஆவணங்கள் அவசியமாகும்.

தொடர்புக்கு: +91 96003 49295