நேபாளப் புரட்சி: பிரசண்டா கும்பலின் நவீன- திரிபுவாத, கலைப்புவாத துரோகத்தால் வீழ்ந்தது
ஏஎம்கே
விலை : ரூ. 110
நூலாசிரியர்: ஏஎம்கே
வெளியீட்டாளர்: சமரன்
பதிப்பு : 2022
பக்கங்கள்: 134
நூல் குறிப்பு:
ஏ.எம்.கே.வின் "நேபாளப் புரட்சி பிரசண்டா கும்பலின் நவீன- திரிபுவாத, கலைப்புவாத துரோகத்தால் வீழ்ந்தது" என்ற இந்த ஆய்வு நூல் மற்றுமொரு குறிப்பிடத்தக்க சர்வதேசிய ஆவணமாகும். ஏனெனில் தனிநாட்டில் புரட்சி சாத்தியம் என்ற லெனினியத்தை புதிய காலனியக் கட்டத்தில் நிறுவி. காவுத்ஸ்கியின் அதீத ஏகாதிபத்திய கோட்பாட்டிலிருந்து உருவான பிரச்சந்தாவின் கலைப்புவாதத்தை மறுக்கிறது.
மேலும் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் நிலவுடைமை எதிர்ப்பையும் இரண்டு கட்டமாகப் பிரிப்பது என்ற பேரில் ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கைவிடுவதை தவறு என்கிறது. புரட்சியை கைவிட்டு, இடைக்கால அரசாங்கத்தில் பங்கேற்பதாகக் கூறி தரகுமுதலாளித்துவப் பாராளுமன்றக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதை மறுக்கிறது. புரட்சிகர எழுச்சிப் பாதை, மற்றும் நீண்ட மக்கள் யுத்தப் பாதை என்ற இரண்டையும் இணைப்பது கதம்பவாதச் செயல்தந்திரம் என்கிறது. புதிய ஜனநாயகப் புரட்சியும், சோசலிசப் புரட்சியும் ஒரு சங்கிலியின் இரண்டு கரணைகள் என்பதை நிறுவுகிறது.
ஏகாதிபத்தியங்களுக்கிடையில் உள்ள முரண்பாடுகளைப் பயன்படுத்துவது என்ற பேரில் தொண்டு நிறுவனங்களைக் கட்சிக்குள் அனுமதித்து, நேபாளக் மாவோயிஸ்ட் கட்சி கலைப்புவாதக் கட்சியாக மாறியதை அம்பலப்படுத்துகிறது. நேபாளத்தில் புரட்சி தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் பற்றிய ஏ.எம்.கே.வின் இந்த ஆய்வு இந்தியா போன்ற புதிய காலனிய நாடுகளில் நடத்தப்பட வேண்டிய புதிய ஜனநாயகப் புரட்சிக்கான அவரது மாபெரும் பங்களிப்பாகும்.
தொடர்புக்கு: +91 96003 49295