'நூரம்பர்க்' குடியுரிமைச் சட்டம்

புதிய காலனியத்தின் இந்துத்துவ வடிவம்

'நூரம்பர்க்' குடியுரிமைச் சட்டம்

விலை : ரூ. 90

நூலாசிரியர்: சமரன்

வெளியீட்டாளர்: சமரன்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 110 

நூல் குறிப்பு:

'நூரம்பர்க்' குடியுரிமைச் சட்டங்கள் குறித்து சமரன் மாத இதழில் வெளிவந்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

மோடி கும்பலின் குடியுரிமைச் சட்டங்கள் பற்றிய பிரச்சனை உண்மையில் ஒரு தேசிய இனப் பிரச்சனை ஆகும். ஆனால் இது ஒரு மதப் பிரச்சனையாக முன்னிறுத்தப்படுவதும், அதற்கு முதலாளித்துவ தேசியவாதிகள் பலியாவதும் இந்து ராஜ்ஜிய எதிர்ப்புப் போராட்டங்களை பலவீனப்படுத்தவே செய்யும். ஒரு தேசிய இனத்திற்குள்ளும், தேசிய இனங்களுக்கு இடையிலும் மக்கள் புலம் பெயர்வதற்கு காரணம் புதியகாலனி அரசியல் பொருளாதாரக் கொள்கைகளே ஆகும்.  

புதிய காலனியாதிக்கத்திற்குச் சேவை செய்யும் பாஜக ஆர்.எஸ்.எஸ் கும்பலின் இந்து ராஜ்ஜிய திட்டம் எவ்வாறு இது போன்ற பாசிச கருப்புச் சட்டங்கள் மூலம் நிறைவேற்றப்படுகின்றன என்பதையும்; ஆரிய - திராவிட இனவாத மாயைகள் பழைய காலனியத்திற்கு சேவை செய்தது போலவே புதிய காலனியத்திற்கும் எவ்வாறு சேவை செய்கின்றன என்பதையும் இத்தொகுப்பு மார்க்சியலெனினிய வழியிலும் ஏ.எம்.கே வழியிலும் நிறுவுகின்றது.

தொடர்புக்கு: +91 96003 49295