பனிப்போரின் யுத்த களமாக மாறும் தெற்காசியா

RECP - QUAD

பனிப்போரின் யுத்த களமாக மாறும் தெற்காசியா

விலை : ரூ.80

நூலாசிரியர்: சமரன்

வெளியீட்டாளர்: சமரன்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 88 

நூல் குறிப்பு:

ஏகாதிபத்தியங்களின் உலக மறுபங்கீட்டிற்கான பனிப்போர் மற்றும் தெற்காசிய பிராந்தியம் எவ்வாறு யுத்த களமாக மாற்றப்படுகிறது என்பது குறித்து சமரன் மாத இதழில் வெளிவந்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க-நேட்டோ முகாமிற்கும் சீன-இரசிய முகாமிற்கும் இடையிலான முரண்பாடுகள் மற்றும் புதிய காலனிய மறுபங்கீட்டிற்கான பனிப்போர் தீவிரம் பெற்று வருவதையும் தெற்காசிய பிராந்தியம் எவ்வாறு பனிப்போரின் யுத்தகளங்களாக மாற்றப்பட்டு வருகின்றன என்பதையும்; ஏகாதிபத்திய அடிவருடி மோடி கும்பல் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு எவ்வாறு சேவைச் செய்கிறது என்பதையும் தெளிவுப்படுத்துகிறது. 

ஏகாதிபத்தியங்கள் உலகில் நீடிக்கும் வரை யுத்தங்களும் நீடிக்கும் என்ற உண்மையைப் பாட்டாளி வர்க்க ஆசான்கள் லெனின், ஸ்டாலின், மாவோ தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். இதனை நிறுவும் இன்றைய உலக நிலைமைகளை இத்தொகுப்புகள் மார்க்சிய-லெனினிய வழியில் விளக்குகிறது.

தொடர்புக்கு: +91 96003 49295