இந்துத்துவ பாசிசத்தின் கைக்கூலியாக உச்சநீதிமன்றம்
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு
விலை : ரூ.40
நூலாசிரியர்: சமரன்
வெளியீட்டாளர்: சமரன்
பதிப்பு : 2022
பக்கங்கள்: 34
நூல் குறிப்பு:
இந்திய நாட்டின் சட்டமன்றம், பாராளுமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் போலீஸ், ராணுவம் என அனைத்துமே இந்த கட்டமைப்பின் பெரும்பான்மை மதத்தை காக்கவல்ல கூட்டாளிகளாக உள்ளது என்பதையும் 1992 டிசம்பரில் நடத்திய கரசேவை சங்க்பரிவார பண்டார கும்பல்களின் அப்பட்டமான கபட நாடகம் என்பதையும் இந்நூல் தெட்டத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
ஏகாதிபத்திய நிதியாதிக்க கும்பல்களின் போர் வெறியும், பாசிசமும் தீவிரமடைந்து வருவதால், 'மதம்' பிடித்து அலையும் ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பல்கள், காலனிய நாடுகள் மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளிலுள்ள 'மதங்களை' கருவியாகப் பயன்படுத்தி மத மோதல்களைக் கட்டியமைக்கின்றன. தமது காலனியாதிக்கத்தை நிலை நிறுத்தவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டங்களை திசை திருப்பவும் இவ்வாறு செய்கின்றன. இதன் ஒரு பகுதியாகவே, பாபர் மசூதி-ராமர் கோவில் பிரச்சினையைக் காண வேண்டும்.
இப்பிரச்சினை பழைய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்தது போலவே, தற்போதைய புதிய காலனியாதிக்கத்திற்கும் சேவை செய்கிறது. எனவே சாதி, மத, தேசிய இனப் பகைமைகளின் அரசியல் பொருளாதார அடிப்படையான புதிய காலனியத்தை எதிர்த்தப் போராட்டமும் பாசிசத்தை எதிர்த்தப் போராட்டமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாததாகும்.
தொடர்புக்கு: +91 96003 49295