ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு பிறந்த கோவிட்-19

பின்புலத்தில் சர்வதேச மருத்துவ அரசியல்

ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு பிறந்த கோவிட்-19

விலை : ரூ.95

நூலாசிரியர்: சமரன்

வெளியீட்டாளர்: சமரன்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 116 

நூல் குறிப்பு:

கொரோனா, எவ்வாறு ஏகாதிபத்திய நாடுகளின் வல்லரசுமுகமூடியை கிழித்து தொங்க விட்டுள்ளது. மோடி கும்பலின் 'டிஜிட்டல் இந்தியா'வின் வெற்று வாய்ச்சவடால்களை அம்பலப்படுத்தியுள்ளது. பொது சுகாதாரம், தடுப்பு மருத்துவம், சுகாதாரப் பணிகள் மருத்துவம், கல்வி மற்றும் ஆராய்ச்சியை அரசுகள் கைகழுவியதும், அத்துறைகளை தனியார்மயம், வணிகமயம் மற்றும் கார்ப்பரேட்மயமாக்கியதுமே உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவலுக்கும், மரணங்களுக்கும் முழுமுதற் காரணமாகும். மேலும் இந்த கொள்ளை நோயானது உலகமயம், தாராளமயம், தனியார்மயக் கொள்கைகள் படுதோல்வி அடைந்துவிட்டன என்பதையும்; கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த கட்டுக்கதைகளையும் சமரன் இதழில் வந்த இந்த கட்டுரைகளின் தொகுப்பு தெளிவாக்குகின்றது.

உலக முதலாளித்துவ பொது நெருக்கடி கொரோனாவிலிருந்து துவங்கவில்லை. உலக பொது நெருக்கடி மேலும் ஆழப்பட்டுள்ளது; அவ்வளவே. இது ஏகாதிபத்தியங்களுக்கிடையில் கூர்மையான முரண்பாடுகளை உண்டாக்குகிறது. அமெரிக்க-நேட்டோ, சீன-இரசிய ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையில் உலக மறுபங்கீட்டிற்கான பனிப்போரையும், காலனியாதிக்கத்தையும், பாசிசத்தையும் தீவிரப்படுத்தி வருகின்றது. கொரோனா கொள்ளை நோயால் இலட்சக் கணக்கில் மக்கள் செத்துமடியும் நேரத்திலும், செல்வாக்கு மண்டலங்களுக்காக ஏகாதிபத்திய நாடுகள் பனிப்போரில் ஈடுபட்டு வருகின்றன. ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடுகள் கூர்மையடையும் தீவிரத்திற்கேற்ப இந்தியா போன்ற காலனிய நாடுகள் மீதான காலனி ஆதிக்கமும் பாசிசமும் தீவிரம் பெறுகின்றன. உலகம் ஒரு யுத்த அபாயத்தையும்-பாசிச அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளது என்பதை மார்க்சிய-லெனினிய வழியில் நிறுவுகிறது.  

தொடர்புக்கு: +91 96003 49295