ஏகாதிபத்தியம் உருவாக்கிய இனக் கொள்கை
ஆரிய திராவிட இனவாதம் குறித்து
விலை : ரூ.80
நூலாசிரியர்: ஏஎம்கே - மிஹயீல் நெஸ்தூர்ஹ் - எலிசபத் கோல்பர்ட்
வெளியீட்டாளர்: சமரன்
பதிப்பு : 2022
பக்கங்கள்: 86
நூல் குறிப்பு:
அனைத்து ஆளும் வர்க்க அணிகளும் ஆரியத்தையோ அல்லது திராவிடத்தையோ பேசிக் கொண்டு ஏகாதிபத்திய சேவையை மூடிமறைத்து மக்களை தங்களுக்குள் மோத விடுவது அவர்களின் தந்திரமாக உள்ளது. வரலாற்றில் இந்த இரு கும்பலும் ஏகாதிபத்திய பிரிட்டிஷ் எதிர்ப்பை கைவிட்டு, மண்டியிட்டு, அவர்களுக்குச் சேவை செய்து தங்களின் விசுவாசத்தை காட்டிக்கொண்டு, நாட்டையும் மக்களையும் காட்டிகொடுத்தனர். ஆரியம் பேசிய காங்கிரசு/ பிஜேபியும், திராவிடம் பேசிய நீதிக்கட்சியும் கடுமையான காலனியாதிக்கக் கொள்கைகளே மக்களின் பிரதான பிரச்சனை என்பதை மூடிமறைத்து, திசைதிருப்பி ஏகாதிபத்திய எதிர்ப்பை பின்னுக்குத் தள்ளி, பின் கட்டத்தில் கைவிட்டு, மத ரீதியாகவும், "இல்லாத" மரபின ரீதியாக மக்களை பிளவுபடுத்தி மோதவிட்டனர். அன்று மட்டுமில்லாமல் இன்றுவரை எதற்காக இந்த இரு கோட்பாடுகளையும் காலனியாத்திக்க வாதிகள் உருவாக்கினரோ, அதே விசயத்திற்காக இன்றும் ஏகாதிபத்தியச் சேவையிலும் அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் சேவகத்திலும் விசுவாசமாக ஊன்றி நின்று ஒரு அணி விட்ட இடத்திலிருந்து ஆட்சி அரியணை ஏறிய மற்றொரு அணி தொடர்ந்து ஓடுவதை அனைவராலும் அறிய முடியும்.
தொடர்புக்கு: +91 96003 49295