'ஒரே நாடு, ஒரேசந்தை'

ஏகாதிபத்திய தேவைக்காக மாற்றியமைக்கப்படும் இந்திய விவசாயம்

'ஒரே நாடு, ஒரேசந்தை'

விலை : ரூ.40

நூலாசிரியர்: சமரன்

வெளியீட்டாளர்: சமரன்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 44 

நூல் குறிப்பு:

டங்கல் திட்டமே இந்தியா உள்ளிட்ட புதிய காலனிய நாடுகளின் விவசாயத்தை, பன்னாட்டு, உள்நாட்டு கார்பரேட்டுகளின் ஏகபோகத்திற்காக திறந்து விடவேண்டும் எனும் துரோகத்தைத் துவங்கி வைத்தது. இதில் நரசிம்மராவ் கும்பல் கையெழுத்திட்டதன் மூலம் இந்திய விவசாயிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் பெரும் துரோகம் இழைத்தது. மோடி கும்பலின் பாசிச வேளாண் சட்டங்கள் டங்கல் திட்டத்தின் இறுதி வடிவம் ஆகும். ஆகவே விவசாயிகளின் போராட்டம் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் நோக்கத்தோடு மட்டுமின்றி உலக வர்த்தக கழகம், உலக வங்கி, ஐ.எம்.எப் போன்ற புதிய காலனிய அடிமை நிறுவனங்களிலிருந்து இந்தியாவை வெளியேற நிர்ப்பந்திக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களாகவும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும், பட்டினியால் சாவதை விட போராடி விட்டு சாகிறோம் என்று முடிவெடுத்து களத்தில் நெருப்பாய் கணந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் போராட்டம் குறித்தும் சமரன் இதழில் வந்த இந்த கட்டுரைகளின் தொகுப்பு தெளிவாக்குகின்றது.

தொடர்புக்கு: +91 96003 49295