மார்க்சிய-லெனினிய அரசியல் கல்வி

சமரன் கட்டுரைகள் தொகுப்பு 1

மார்க்சிய-லெனினிய அரசியல் கல்வி

விலை : ரூ.65

நூலாசிரியர்: சமரன்

வெளியீட்டாளர்: சமரன்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 74 

நூல் குறிப்பு:

இதில் நான்கு கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று அரசியல் ரீதியாக, பாட்டாளி வர்க்க இயக்கத்தின் அடிப்படை கோட்பாடுகள் மற்றும் திட்டத்திற்கு தேவையான அடிப்படை சொற்றொடர்களை தெளிவாகவும், சாதாரண உழைக்கும் மக்களும்  புரிந்துக்கொள்ளும் வகையில் கேள்வி-பதில் வடிவில் சுருக்கமாகவும்  விளக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னுள்ள இரு கட்டுரைகள் வர்க்க அமைப்புகளின்  (சங்கங்களின்) தேவையையும்,  தொழிற்சங்கங்களின் செயற்பாடுகள் எப்படி அமைய வேண்டும் என்று விளக்குகிறது. தற்போது பெரும்பாலான தொழிற்சங்கங்கள் இரையாகியுள்ள பொருளாதாரவாத்தையும் மற்ற விலகல் போக்குகளையும் அம்பலப்படுத்தி, தத்துவார்த்த ரீதியில் சரியான அரசியல் வர்க்க  இயக்கங்களை எப்படி கட்டுவது என்பதை மார்க்சிய ஆசான்களின்  வழி நின்று விளக்குகிறது. தொழிலாளர்களும் விவசாயிகளும் வர்க்க அணிகளாக ஒன்று சேர்ந்து தங்களது வாழ்க்கையை தீர்மானிக்கும் அதிகாரத்தையும், அரசியலையும் கைப்பற்றுவதை நோக்கி எப்படி முன்னேறுவது என்பதை கற்றுக்கொடுக்கிறது. 

கடைசியாக, இரு பாகமாக உள்ள அரசியல் கட்டுரைகள்  இந்த முதலாளித்துவ சமுதாயத்தையும் அதன் உற்பத்தி மற்றும நெருக்கடிகளை புரிந்துகொள்ள உதவுகிறது. முதலாளித்துவ சமுதாயத்தில் மூலதன குவிப்பு, உற்பத்தி, உபரி, சுரண்டல், இலாபம், பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம் போன்ற அனைத்து அம்சங்களைப் பற்றிய பொருளாதார அரசியல் அறிவை பெற தெளிவாகவும் அறிவியல் பூர்வமாகவும் விளக்குகிறது. இதனால் தொழிலாளர்களும், விவசாயிகளும் மற்றும் அனைத்து ஒடுக்கப்பட்ட வர்க்கங்களும் இந்த நெருக்கடிகளையும் தனது இன்னல்களையும் புரிந்துக்கொண்டு யாரை, எப்படி, எதற்கு எதிர்த்து போராட வேண்டும் என்பதை உணர்ந்து தீவிரமாக செயல்பட்டு தங்கள் விதிகளை தாங்களே தீர்மானிக்கும் சக்தியாக வளர வழிவகுக்கும். 

தொடர்புக்கு: +91 96003 49295

9095365292