கட்சி கட்டுவது குறித்து

லெனின் - சென்யுன்

கட்சி கட்டுவது குறித்து

விலை : ரூ.75

நூலாசிரியர்: லெனின் - சென்யுன்

வெளியீட்டாளர்: சமரன்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 90 

நூல் குறிப்பு:

"புரட்சிகர தத்துவம் ஒன்றில்லாமல் புரட்சிகர நடைமுறை இருக்க முடியாது" என்ற லெனின் கூற்றை தட்டையாக புரிந்து கொண்டனர்; பரந்து விரிந்த நடைமுறை பணியை முடமாக்கிக் கொண்டனர்; ஆழ-அகலமான தத்துவப் பணியை குறுக்கிக் கொண்டனர்; இதன் விளைவாக புரட்சிகர அரசியற் கல்வி ஏட்டளவில் கூட துளிர்விட தயக்கம் கொண்டது. 

அனேக அன்பர்களுக்கு, புரட்சிதான் தீர்வு என்று தெரியும் ஆனால் புரட்சிகர கட்சி எது என்று தெரியாது; மக்கள் ஜனநாயகம்தான் மாற்று என்று தெரியும் ஆனால் மக்களை புரட்சிரமாக மாற்றத் தெரியாது. கட்சியே, அரசியலையும் நடைமுறையையும் இணைக்கவல்லது. லெனினிய வழிப்பட்ட புரட்சிகர கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டுவது என்பது அவசர அவசிய பணியாக மாறிவிட்ட சூழலில் தோழர் லெனின் மற்றும் தோழர் சென்யுன் கட்டுரைகளை சிறு தொகுப்பாக சமரன் வெளியிட்டுள்ளது.

இந்நூலில் எங்கிருந்து துவங்குவது, நமது ஸ்தாபன கடமைகள்  பற்றி ஒரு தோழருக்குக் கடிதம் ஆகிய லெனினுடைய கட்டுரைகள் பயங்கரவாதம், பொருளாதாரவாதம் மற்றும் கதம்பவாதப் போக்குகளை எதிர்த்து ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படிக் கட்டப்பட வேண்டும் என விளக்குகிறது.

தொடர்புக்கு: +91 96003 49295