மொழிக்கல்வியும் கருத்தாடலும்

ந. தெய்வசுந்தரம் - இந்து தமிழ்

மொழிக்கல்வியும் கருத்தாடலும்

“யாரிடம் எப்​படிப் பேசவேண்​டும் என்று தெரி​யாமல் பேசுகிறாய்!’’, “அவர் பேச்​சிலேயே எதை​யும் சாதித்​து​விடு​வார்!”, “நீங்​கள் என்​னிடம் உதவி கேட்​கிறீர்​களா? அல்​லது உத்​தரவு போடு​கிறீர்​களா?”, “உங்​களைக் குறை சொல்வதற்​காக நான் இதைச் சொல்​ல ​வர​வில்​லை” - இவை​போன்ற பல தொடர்​களை நாம் கேட்​டிருப்​போம். இங்கு ஒன்று தெளி​வாகத் தெரி​கிறது. பேசுபவருக்​குத் தமிழ் இலக்​கணத்​தில் நிறைய அறிவு இருக்​கலாம். ஆனால், நடை​முறை​யில் அவர் பயன்​படுத்​துகிற தொடர்​கள் அவரது பேச்​சின் நோக்​கத்தைச் சரி​யாக வெளிப்​படுத்தவில்லை.

மறு​புறம், கேட்​பவரும் பேசுபவரின் நோக்​கத்​தைச் சரி​யாகப் புரிந்​து​கொள்​ள இயலாமல் போகிறது. நம்​மைச் சுற்​றி​யுள்​ளவர்​களு​டன் நல்ல உறவு​களை உரு​வாக்​கித் தக்​க​வைத்​துக்​கொள்ள மிக​வும் உதவுவது நமது பேச்​சு​முறையே. ஒரு​வரின் சரி​யான பேச்​சு​முறை​யானது பகைவர்களை​யும் நண்​பர்​களாக மாற்​றியமைக்​கும்; அது​போன்று, தவறான பேச்​சு​முறை​யானது நண்​பர்​களை​யும் பகைவர்​களாக ஆக்​கி​விடும்.

மொழிக்​கல்வி: மாணவர்​களுக்​குப் பள்​ளி​களில் தமிழ்ச்​சொற்​கள், தொடரமைப்​பு​கள், அவற்​றின் இலக்​கணக் கூறுகள் ஆகிய​வற்​றைப்​ பற்​றி மட்​டுமே கற்​றுக்​கொடுத்​தால் போதாது. அவற்​றைப்பயன்​படுத்​தி, தன்​னைச் சுற்​றி​யுள்​ளவர்​களிடம் பலவகை​யான பேச்​சுச்​செயல்​களை எவ்​வாறு மேற்​கொள்​வது என்​ப​தைக் கற்​றுக்​கொடுக்​க வேண்​டும். பேச்​சுச் செயல்​களுக்​குக்​காகத்​தான் இலக்​கணக் கல்வி​யே த​விர, இலக்​கணப்​ பாடத்​தில் வெறும் மதிப்​பெண்​கள் பெறு​வதற்கு இல்​லை.

- ந. தெய்வசுந்தரம்

இந்து தமிழ்

https://www.hindutamil.in/news/opinion/columns/language-education-and-discourse

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு