சினிமா விமர்சனம்: The Circle

சே மணிசேகரன்

சினிமா விமர்சனம்: The Circle

'சினிமா என்பது ஒரு போர்வாள்',என்பது இயக்குநர் சத்யஜித்ரே அவர்களின் எண்ணத்தின் வாயிலாக விளைந்த வார்த்தை.அதை மெய்ப்பிக்கும் விதமாக படங்களை எடுத்து வருபவர்தான், 'ஜாபர் பனாஹி ',அவர்கள்.

'சட்டம் அநீதியாக இருக்கிறதென்று தெரிந்தால், அதை மீறுவதே சமூகப் பொறுப்பு',என சொன்னவர் மார்ட்டின் லூதர் கிங்.மனதில் வலிமை உள்ளவன் மட்டும்தான் இப்படி சொல்ல முடியும்.பின்பற்ற முடியும்.

ஆம்.ஈரான் நாடு போடும் கடுமையான சட்டங்களை எல்லாம் தனது படைப்பின் மூலம் தோல் உரித்து உலகிற்கு காட்டுபவர்தான் இயக்குநர் ஜாபர் பனாஹி அவர்கள்.அதனால்,அவர் பல முறை கைது செய்யப்பட்டிருக்கிறார்.வீட்டுச் சிறையாக்கப்பட்டிருக்கிறார்.இருந்தும் அவர் அமைதியாக இருந்து விடுவதில்லை.

20 வருடங்கள் படமே இயக்கக் கூடாது தடை விதிக்கப் போதும் கைபேசியிலேயே காருக்குள்ளேயே ஒரு படத்தையும் எடுத்து உலகத் திரைப்பட ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி ஈரான் நாட்டு அரசாங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.பல விருதுகளையும் பெற்றார்.

'off side',திரைப்படம்:பெண்கள் விளையாட்டுப் போட்டிகளை காண அந் நாட்டில் தடை உண்டு.அதையும் தனது திரைப்படம் வாயிலாக ஈரான் நாட்டின் சட்டதை அறைந்தார்.இந்தப் படத்தைப் பற்றி முன்பு சற்று விரிவாக எழுதியுள்ளேன்.

'The Circle',ஈரான் நாட்டில் தடை செய்யப்பட்ட படம்.ஆனால், உலக மக்களால் கொண்டாடப்படும் திரைப்படம்.வித்தியாசமான திரைக்கதை அமைப்பைக் கொண்ட திரைப்படம்.

பல விருதுகளைப் பெற்ற திரைப்படம்.2000 ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவில் Golden Lion விருதைப் பெற்ற திரைப்படம்.

படத்தின் சிறப்பு என்னவென்றால்,முதல் கதாபாத்திரமானது இன்னொரு கதாபாத்திரத்தை Connect பண்ணியவுடன் முதல் கதாபாத்திரம் மறைந்து விடும்.உதாரணமாக,தொடர் ஓட்டம் மாதிரி.ஒருவர் பாதி தூரம் ஓடி குச்சியை இன்னொருவரிடம் கொடுத்தப்பிறகு நின்று விடுவர்.குச்சியை வாங்கியவர் தொடர்ந்து ஓடி அடுத்து உள்ளவரிடம் கொடுத்து ஓட வைப்பது......இதுதான்,இக் கதையின் விரிவாக்க சுருக்கம்.

முதல் காட்சியிலேயே சொல்லி விடுகிறார்கள்,ஈரான் நாட்டில் பெண் குழந்தை பிறந்தால் குடும்பம் கவலைக்குள்ளாகிறார்கள் என்பதை.

அந்நாட்டில் ஆண் துணையில்லாமல் பெண்கள் எங்கும் சென்று விடமுடியாது.

பெண்களுக்கான இந்த அடக்கு முறைகளை எல்லாம் ஈரான் நாட்டு சட்டத்தின் செவிட்டில் அறைகிற மாதிரி சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜாஃபர் பனாஹி அவர்கள்.

முதலில்,சிறையிலிருந்து தப்பி ஓடிவந்திருக்கும் மூன்று பெண்களின் பிரச்னைகளை எல்லாம் காட்சி வழியே சொல்லிக் கொண்டே வந்து, திருமணம் ஆகாமல் கர்ப்பம் ஆகியுள்ள ஒரு பெண்ணின் பிரச்னையைத் தொட்டு, அந்தப் பெண் மூலமாக, பெற்ற பெண் குழந்தையை தனியே விட்டுச் செல்லும் அப் பெண்ணிண் பிரச்னையை அணுகி,மகிழ்விக்கும் பெண்ணின்(Call girl)பிரச்னையோடு முடித்திருப்பார்கள்.

அந்த Call girl போலீஸைப் பார்த்து நன்றாகத்தான் கேட்பாள்,"என்னையை கேட்கறீயே என்னையை கூட்டுக்கிட்டு வந்தானே அவனை எதுவும் கேக்க மாட்டியா?"

Pregnant girl character,பெண் குழந்தையை தனியே விட்டுச் செல்லும் கதாபாத்திரம் -ஆகிய இந்த இரண்டு கதாபாத்திரம் மட்டும்தான் தொழில்முறை நடிகர்கள்.மற்றவர்கள் எல்லாம் தொழில் சாரா நடிகர்கள்தான்.

ஜாபர் பனாஹியைப் போன்று நெஞ்சுரமும் நேர்மைத் திறனும் கொண்ட படைப்பாளிகள்தான் எல்லா நாட்டிற்குமே தேவை.

படம் 2000-ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆனது.

தயாரிப்பு,படத்தொகுப்பு,இயக்கம்:ஜாபர் பனாஹி.

This film available in you tube!

மீள்பதிவு.

சே மணிசேகரன்

https://www.facebook.com/share/1KhVWymBHB/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு