500 பதிவுகளை கடந்த செந்தளம் வலைதளம்

செந்தளம் செய்திப்பிரிவு

500 பதிவுகளை கடந்த செந்தளம் வலைதளம்

அன்பார்ந்த வாசகர்களே!

உழைக்கும் வர்க்கத்தின் குரலாய் முழங்கும் செந்தளம் வலைதளம், (ஆரம்பிக்கப்பட்ட 9 மாதங்களுக்குள்) 500 கட்டுரைகளை உங்களின் பேராதரவோடு கடந்துள்ளது.

இதை சாத்தியமாக்க உதவிய தோழர்களுக்கும், மொழிபெயர்ப்பாளர்களுக்கும், தங்களுடைய கட்டுரைகளையும் முகநூல் பதிவுகளையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கிய அனைத்து தோழர்களுக்கும் பிற வலைதள நண்பர்களுக்கும், கட்டுரைகளை  சமூக வலைதளங்களில் பகிர்ந்த தோழர்களுக்கும், பல்வேறு தளங்களில் இயங்கும் வாசகர்களுக்கும் தோழமையுடன் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்! அன்பும் மகிழ்ச்சியும்! 

இதனை மென்மேலும் வளர்த்தெடுப்பதும், ஆதரிப்பதும் அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாகும். தளத்தை தொடர்ச்சியாக இயக்குவதற்கும் மேலும் செழுமைப்படுத்தி முன்னேறவும் உங்கள் ஆதரவு மிகமிக அவசியம்.

அனைவரும் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து நமது ஊடகத்தை வளர்க்க உதவுங்கள்.  வாசகர்கள் முடிந்த அளவுக்கு வலைதளத்தின் கட்டுரைகளை  பரப்பவும், பிறருக்கு பரிந்துரைக்கவும் வேண்டுகிறோம். உங்களின் கருத்துக்களையும், ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், விவாதங்களையும் பெரிதும் வரவேற்கிறோம்.

செந்தளம் வலைதளத்துடன் இணைந்து பயணிப்பதற்கு அனைவரும் பதிவு (subscribe) செய்ய வேண்டுகிறோம்.

- செந்தளம் செய்திப் பிரிவு