கவிதை: திராவிட மாடல் புல்டோசர்...

ஞாலன்

கவிதை: திராவிட மாடல் புல்டோசர்...

அதே தான்
அதே புல்டோசர் தான்
அங்கே காவி நிறத்தில்
இங்கே கருப்பு நிறத்தில்
ஆனால் அதே தான்
அதே புல்டோசர் தான்!

 

ஏழைகள் மீது
ஏறி விளையாடுவதில்
புல்டோசர்களுக்கு
என்ன வேற்றுமை வந்துவிட போகிறது?

 

ராமனை வைத்து ஓட்டும்
வடக்கத்தி புல்டோசர்
தெற்கே திராவிட திரிபாக
திமிறி வருகிறது...
ஆனால் அதே புல்டோசர்தான்!

 

அனகாபுத்தூரில்
கண்ணீர் குடித்து விட்டு
காட்டுப்பள்ளியில்
அதானிக்கு பன்னீர் தெளிக்கிறது
ஆனால் அதே புல்டோசர்தான்!

 

 

கூவ தரைகளையும்
ஏரி கரைகளையும்
அரித்து தின்ற
ஜேப்பியார் பச்சமுத்துக்களின் மேல்
ஏறாத புல்டோசர்
அனகாபுத்தூர் என்றால்
அதற்கு ஆனந்த கும்மாளம் தான்!

 

வெளிநாட்டு அந்நியனுக்கும்
வேண்டப்பட்ட அதானிக்கும்
தொண்டு செய்து களிப்பதற்கு
தமிழ்நிலத்து குடிசைகளை
வாரி அள்ளி தூர வீச
இதோ வேகமாக வருகிறது
திராவிட மாடல் புல்டோசர்!

 

-        ஞாலன்