தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்ட மசோதா-2026

செந்தளம் செய்திப் பிரிவு

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்ட மசோதா-2026

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்)சட்ட மசோதா - 2026 (Tamil Nadu Private Universities Amendment Bill, 2026) தமிழ்நாடு சட்டமன்றத்தின் கூட்டத்தொடர் இறுதிநாளில், 2026 செப்டம்பர் 8 அன்று தவெக அரசால் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டது. இது குறித்த சர்ச்சைக்குரிய விவாதங்களும் எதிர்ப்புகளும் கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியிலும் எழுந்துள்ளன. பெரும்பான்மையான ஆசிரியர் சங்கங்கள், "இது கல்வியைத் தனியார்மயமாக்கும் செயல்; கார்ப்பரேட் நலன்களுக்கானது" என்று தங்களின் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். 2019-ஆம் ஆண்டின் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கங்களை மாற்றி அமைத்து, முதலமைச்சர் விஜய் தனது கார்ப்பரேட் நண்பர்களுக்காகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தச் சட்டத் திருத்தத்தின் முதன்மை நோக்கங்கள்:

1.   கார்ப்பரேட் முதலீடுகளை ஊக்குவித்தல்: தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்க ஏற்கனவே 2019-ஆம் ஆண்டு சட்டத்தில் இருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, உயர்கல்வித் துறையில் உள்கட்டமைப்பு மற்றும் கார்ப்பரேட் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது என்று தனியார்மயத்தை அரசு பகிரங்கமாக அறிவிக்கிறது.

2. நிலத் தேவை குறைப்பு (Land requirement) 2019 ஆம் ஆண்டு சட்டத்தின்படி   மாநிலத்தில் எந்தப் பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் தொடங்கினாலும் குறைந்தபட்சம் 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் (Contiguous Land) கட்டாயமாக இருந்தது.   ஆனால் இந்த புதிய திருத்த மசோதா 2026 -ல் நிலத் தேவை இடத்திற்குத் தகுந்தாற்போல் குறைக்கப்பட்டுள்ளது;  பெருநகர சென்னை மாநகராட்சிப் போன்ற பகுதிகளில் 12 ஏக்கர்,   இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் 18 ஏக்கர், ஏனைய பகுதிகளில் 25 ஏக்கர் எனத் தனியாருக்கு உயர்கல்வியைத் தாரைவார்க்க நிலத் தேவை  1/4 பங்கிற்கும் குறைவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

3. நிரந்தர வைப்பு நிதி குறைப்பு (Permanent Endowment Fund): முந்தைய விதியின்படி, பல்கலைக்கழகத்தைத் தொடங்க நிறுவனங்கள் நிரந்தர வைப்பு நிதியாக ₹50 கோடி வைத்திருக்க வேண்டும் என்றிருந்த நிலையை பாதியாகக் குறைத்து, ₹25 கோடியாக மாற்றியுள்ளனர்.  ஒரு பள்ளிக்கூடம் கட்டும் அளவிலான நிலம் மற்றும் வைப்பு நிதியைக் கொண்டு பல்கலைக்கழகம் அமைக்க முடியும் என்றால், உயர்கல்வியின் தரம் எப்படி இருக்கும், அது யாருக்கான கல்வியாக இருக்கும் என்ற கேள்விகள் எழுகின்றன. அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளான கல்வி மற்றும் சுகாதாரத்தை வழங்கும் தன் பொறுப்பிலிருந்து அரசு விலகி, அதைத் தனியார்மயமாக்குகிறது.   தமிழ்நாட்டு மக்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக, குட்டீஸ்களின் மாமாவாக சினிமா வசனங்கள் பேசி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், தற்போது தனது 100 நாள் ஆட்சிக்குள்ளேயே கார்ப்பரேட்களின் நண்பனாக, ஏகாதிபத்தியங்களின் கைப்பாவையாக மாறித் தமிழக மக்களின் வரிப்பணத்தைப் பிடுங்கித் தனியாருக்குத் தாரைவார்க்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை!   

தமிழக தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரில் உள்ளாட்சி மற்றும் நகர வளர்ச்சி, நிதி, வரி மற்றும் நிர்வாகம், உயர்கல்வி மற்றும் தொழில்துறை சார்ந்து நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இருப்பினும், இந்தத் தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதாவுக்கு மட்டும் கூடுதல் விளக்கங்களைக் கோரி ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார்.   

அரசுத் தரப்பு விளக்கம்: நகர்ப்புறங்களில் உயர்தரக் கல்வி நிறுவனங்களைக் கொண்டுவரவும், தொழில்துறைக்கு அருகிலேயே மாணவர்கள் பயில வாய்ப்பளிக்கவும் 100 ஏக்கர் என்ற நிபந்தனை தடையாக இருந்ததால் இந்தத் தளர்வு தேவை என அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.   இருப்பினும், 25 ஏக்கருக்கும் குறைவான இடத்தில் பல்கலைக்கழகங்கள், அதுவும் தொழில்துறை சார்ந்த கல்வி நிறுவனங்களை அமைப்பது கல்வியை வணிகமயமாக்கும் மற்றும் கார்ப்பரேட் மயமாக்கும் நிகழ்வே ஆகும். மென்பொருள் நிறுவனங்களைப் போலக் குறுகிய இடத்தில் பல அடுக்குக் கட்டிடங்களை எழுப்பி, ஏகாதிபத்திய அந்நியக் கல்வி நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதே இதன்பின்னணியில் உள்ளது. இது தரமான உள்கட்டமைப்பு இல்லாமை, அந்நியக் கல்வி மோகம் போன்றவற்றை உருவாக்கி, பணக்காரர்களுக்கு மட்டுமே கல்வி என்ற அவலநிலையை ஏற்படுத்தும். ஏழைகளுக்கு உயர்கல்வி எட்டாக்கனியாகவே மாறும்.   

புதிய கல்விக் கொள்கை, UGC - 2025 திருத்த மசோதா, VBSA - 2025 (Viksit Bharat Shiksha Adhishthan Bill, 2025) மசோதா போன்ற மத்திய அரசின் கொள்கைகளையே பிரதிபலிக்கும் வகையில் தவெக அரசின் இந்த உயர்கல்விச் சட்டத் திருத்த மசோதா அமைந்துள்ளது. எனவே, கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள், மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் எனப் பொதுமக்கள் அனைவரும் உயர்கல்வியின் தனியார் தாராளமயமாக்கலை எதிர்த்தும் உடனடியாக இந்த தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்)சட்ட மசோதாவை  திரும்ப பெற வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

- செந்தளம் செய்திப் பிரிவு

============================================================

பின் இணைப்பு

(கீழுள்ள பின் இணைப்பு செய்திக் கட்டுரையானது, பத்திரிக்கையாளர் பாரதி தம்பியின் காணொளியின் சுருக்க வடிவம் ஆகும். இது அவரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. தகவலுக்காகவும் விவாதத்திற்காகவும் இங்கே இணைத்து பதிவிடுகிறோம். - செந்தளம் செய்திப்பிரிவு)

அன்பார்ந்த தமிழக மக்களே,

 ஒட்டுமொத்த தமிழ்நாட்டுடைய மாணவர்களின் எதிர்காலத்தையும் அடியோட பாதிக்கக்கூடிய பிரச்சனை நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நடந்திருக்கு. 

ஒருபக்கம்,மிசா, சர்க்காரிய கமிஷன் இதெல்லாம் பேசிய  தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்,அதே நாள்ல தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்ட திருத்த மசோதாவையும் நிறைவேற்றி இருக்கார்.

  இதுவரைக்கும் ஒரு கல்லூரி பல்கலைக்கழகமாக மாற குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.அதுதான் சட்ட விதி. ஆனா இந்த புதிய சட்ட திருத்த மசோதா படி சென்னை மாதிரியான நகரங்களில் 12 ஏக்கர் இருந்தாலே போதும், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 18 ஏக்கர் இருந்தாலே போதும், மற்ற ஊரகப் பகுதிகளில் 25 ஏக்கர் இருந்தாலே போதும்.

இப்போ நம்ம ஊர்களில் சர்வசாதாரணமாக எல்லா கல்லூரிகளிலும் 15 ஏக்கர் முதல் 20 ஏக்கர் நிலம் இருக்கிறது

திரும்பி திசை எங்கும் கல்லூரிகள் தான் இடத்தை வளர்த்து போட்டு வச்சிருக்காங்க. அப்படியென்றால் அந்த புதிய சட்ட திருத்த மசோதாவின்படி தமிழ்நாட்டுபெயர் பெற்ற  அத்தனை கல்லூரிகளும் இனிமே  தனியார் பல்கலைக்கழகமாக மாறிவிடும். 

திருச்சியில இருக்கிற பிஷப் கீபர் காலேஜ், நேஷனல் காலேஜ், செயின்ட் ஜோசப் காலேஜ், சென்னையில இருக்கிற லயோலா காலேஜ்உள்ளிட்ட தனியார், மதநிறுவனங்கள் மற்றும்டிரஸ்டுகள் நடத்தும் கல்வி நிறுவனங்கள்  100 ஏக்கர் என்ற ஒரு கட்டுப்பாடு இருந்ததுனாலதான் அவர்கள் இதுவரைக்கும் பல்கலைக்கழகம் என்ற தகுதி பெறாமல் இருந்தார்கள். இப்பொழுது, புதுசா இந்த சட்ட திருத்த மசோதா வந்தபின் மிக எளிமையாக

பல்கலைக்கழகமாக மாறிவிடும்.

 ஒரு கல்லூரி பல்கலைக்கழகமாக மாறுவதில் என்ன பிரச்சனை? அது நல்லது தானே அப்படின்னு முதல் பார்வைக்கு தோன்றும். உண்மையிலேயே மிகப்பெரிய பிரச்சனை இருக்கு. அதுவும் மிக மிக முக்கியமான பிரச்சனை எந்த தனியார் பல்கலைக்கழகத்திலேயும் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. இதுதான் இருக்கிறதிலேயே மிகப்பெரிய ஆபத்தானது. ஒரு தனியார் பல்கலைக்கழகம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை என்று யாரும் எந்த நீதி மன்றத்திற்கும் செல்ல முடியாது. அது நீதமன்ற வரம்புக்குள்ளே வராது. இதுவரையிலும் இருக்கக்கூடிய தனியார் பல்கலைக்கழகங்களிலேயே இட ஒதுக்கீட்டை யாரும் நடைமுறை படுத்துவது இல்லை. அது அவங்களுடைய சுதந்திரம். கட்டாயம் கிடையாது. அப்படி இருக்கும்போது இருக்கக்கூடிய எல்லா பெயர் பெற்ற கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கான வழிவகையை அரசாங்கமே ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அப்படியென்றால் அடுத்த ஒரு சில ஆண்டுகளில்  எல்லா கல்லூரிகளும் தனியார் பல்கலைக்கழகங்களாக மாறிவிட வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் டூ முடிக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் எங்க போய் படிப்பார்கள் கோயம்புத்தூர்ல இருக்கிற PSG கல்லூரியில் எப்படியாவது சேரவேண்டும் என்று பல மாணவர்கள் நினைக்கிறார்கள். இதுபோல பல புகழ்பெற்ற கல்லூரிகளை மனசுல வச்சுக்கிட்டுதான் பிளஸ் டூ தேர்வையே ஒவ்வொரு மாணவனும்எழுதுகிறான்.

 அவன் நல்ல கட் ஆஃப் 297 , 298 எடுத்தாலும் தனியார் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றிவிட்டால் அந்த பக்கமே போக முடியாத ஒரு நிலமையை உருவாக்கிட்டது இந்த அரசு . எவ்வளவு கட் ஆஃப் எடுத்து என்ன புண்ணியம்? எதுக்குமே பயன்படாதே.  இத்தனை லட்சம் மாணவர்களும் எங்க போய் படிப்பது? வேறுவழியில்ல எல்லாரும் அரசு கல்லூரிகளை நோக்கித்தான் ஓடுவார்கள் . 

 பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் தான்   கட்டாயம் இட ஒதுக்கீட்டை நடைமுறை  ஆகணும். மற்றபடிதனியார் பல்கலைக்கழகங்களில் இருக்கக்கூடிய கலை அறிவியல் படிப்புகளில்மற்றும் பொறியியல் படிப்புகளில் இட ஒதுக்கீட்டை நடைமுறை படுத்துவது கட்டாயம் கிடையாது. 

லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் ஒரே வாய்பான அரசு பொறியியல் கல்லூரிகளை நோக்கி தான்  குவிவாங்க. அரசு பொறியியல் கல்லூரிகள் சொற்ப எண்ணிக்கையில் தான் இருக்கு.  இவ்வளவு கூட்டத்தை அது தாங்காது, 

மிக அதிக மதிப்பெண்பெற்றவர்களுக்கு மட்டும்தான் அங்கு இடம் கிடைக்கும்.

 மீதி பேருக்கு இடம் கிடைக்காது. அப்பொழுது அவர்கள்  அரசு கலை அறிவியல் கல்லூரிகளை நோக்கி  குவிவாங்க. பணம் படைச்சவங்க மட்டும்தான் இந்த தனியார் பல்கலைக்கழகங்களை நோக்கி போக முடியும். இதுதான் எதார்த்தம். 

 இந்த தனியார் பல்கலைக்கழகங்களை பொறுத்தவரையில் கட்டணங்களை அவர்கங்களே பண்ணிக்கலாம். ஒரு அரசு கல்லூரியில் கட்டணங்களை அரசு தான் முடிவு பண்ண முடியும். ஆனா, தனியார் பல்கலைக்கழகங்களை பொறுத்தவரையிலும் எல்லாவற்றையும் அவங்களே முடிவு செய்து கொள்வார்கள் அவங்க வைக்கிறது தான் சட்டம். ஏற்கனவே ரிசர்வேஷன் கிடையாது. இப்போ பீஸ் பொறுத்தவரையிலும் அவங்க வைக்கிறது தான் சட்டம். பாமரமக்கள் யாராவது உள்ள போக முடியுமா? யார் அங்கு போக முடியும்? யாரிடம் பணம் இருக்கோ, யாரிடம் வசதி வாய்ப்பு இருக்கோ, அவர்கள் மட்டும்தான் அங்கு போவாங்க. 

 பணம்படைத்தவன்  இங்கே படிக்கலாம். பணமில்லாதவன் நீ என்னதான் எவ்வளவு உழைத்து படித்தாலும் இந்த பக்கம் போக முடியாது. அரசு கல்லூரிகளை நோக்கினால் அரசு கல்லூரிகள் எண்ணிக்கையில் சொற்பமாக இருக்கு. அதனால் ஒருவன் எவ்வளவு கட் ஆஃப் எடுத்தாலும், போக வேண்டியது கலை அறிவியல் கல்லூரிதான்

  ஏற்கனவே நீட்  தேர்வை வச்சு மருத்துவக் கல்லூரி வாசலில் கூட நுழைய விடாமல் இவ்வளவு பெரிய பஞ்சாயத்தை இத்தனை வருஷமா பண்ணி வச்சிட்டு இருக்கிறார்கள். 

 ஒன்றிய பாஜாக அரசு ஒரு கவன்சில் அமைச்சிருக்கு அந்த கவுன்சில் உடைய வழிகாட்டுதலின் படி தான் நாங்கள்செய்கிறோம் என்று இந்த மசோதாவிலேயே த வெ க அரசு குறிப்பிடுகிறது. பா ஜ க வை எங்கள் கொள்கை எதிரி என்று கூறிக்கொண்டு அந்த கொள்கை எதிரி முன்மொழியக் கூடிய இம் மக்கள் விரோத மசோதாவை  ஊர் உலகத்துக்கே தெரியாம யார்கிட்டயும் சொல்லாம அந்த பக்கம் சர்க்காரிய கமிஷன் மிசா எல்லாரையும் திசை திருப்பி விட்டு  சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது தாவேக அரசு. இதுவும் பா ஜ கவுடைய  மோடி மஸ்தான் வேலைதான். 

நாடாளுமன்றத்தில்  மிகப்பெரிய மசோதாக்கள் எல்லாம் ஏதாவது ஒரு கலேபரத்தை ஏற்படுத்திவிட்டு எல்லாருடைய கவனத்தையும் அந்த பக்கம் திசை திருப்பிவிட்டு அன்றைய நாள்ல தான் முக்கியமான மசோதா எல்லாத்தையும் நிறைவேற்றுவதுதான் பாஜகவின் நடைமுறை அதேதான் இங்கும் நடக்கிறது.

  இந்திய அரசு இனங்களை குறைத்தல் மற்றும் ஒழுங்குமுறை நீக்கத்திற்கான இரண்டாம் கட்ட பணிக்குழுவை அமைத்துள்ளது தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கான குறைந்தபட்ச நிலத் தேவையை நீக்குவது குறித்தும் உயர்கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கான குறைந்தபட்ச அறக்கட்டளை நிதி தேவைகளை அகற்றுவது குறித்தும் மாநில தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டங்களின் தொடர்புடைய வகை முறைகளை திருத்தம் செய்யக் கூறப்பட்ட பணிக் குழு பரிந்துரைத்துள்ளது 

 ஒன்றிய அரசினுடைய பணிக்குழு இவர்களுக்கு பரிந்துரைத்துள்ளது அதை ஏற்றுக்கொண்டுதான் இந்த சட்ட மசோதாவை இவங்க நிறைவேற்றி இருக்கிறார்கள்.

 இது தொடர்பான விவாதங்கள் வரும்போது இந்த மசோதா முதன்முறையாக தவெக அரசு கொண்டு வந்தது கிடையாது இது முன்னாடியே இருந்த திமுக அரசு கொண்டு வந்த மசோதாவை தான்  நாங்க செயல்படுத்துறோம் அவ்வளவுதான்  போன்ற சில வாதங்கள்  சென்று கொண்டிருக்கின்றன.

 இதில் அடிப்படை உண்மை இருக்கதான்  செய்கிறது. 2025 வது வருஷம் அக்டோபர் மாசம் அப்போதிருந்த  திமுக அரசு இதே போல தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதாவை கொண்டுவர முயற்சி பண்ணினார்கள். இதே மாதிரியான மோசமான அம்சங்கள் அதுல இடம் பிடித்திருந்தது அதனால மிகக்கடுமையான எதிர்ப்பு வந்தது. முக்கியமா கூட்டணியில அங்கமைச்ச வகித்த இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அந்த சட்ட திருத்த மசோதாவை அவ்வளவு தீவிரமா எதிர்த்தார்கள். அதன் காரணமா அந்த மசோதாவை திமுக அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. அதை அவர்கள் கொண்டுவர முயற்சி பண்ணியதே மிக மிக மோசமான விஷயம்தான். அதனாலதான் கூட்டணி கட்சிகள் எல்லாம் எதிர்த்தார்கள் அதனாலதான் அவங்க திரும்பவும் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் இன்றைக்கு அதே சட்ட திருத்த மசோதாவை எந்தவிதமான சத்தமும் இல்லாம அமைதியா த வெ க அரசு நிறைவேற்றி இருக்கிறது கூட்டணியிக் கட்சிகளா இருக்கக்கூடியவர்கள் அதை மௌனமா வேடிக்கை பார்க்கிறாங்கள் சிபிஐ கட்சியிலிருந்து மட்டும் இதை கண்டிச்சு ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கார்கள்.

 விசிகாவோ மற்றவர்களோ யாரும் இந்த அறிக்கையை வெளியிடவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சமீபத்தி பேட்டி ஒன்றில் திமுக கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியே வருவதற்கு யார் திமுக தான் முழுக்க முழுக்க காரணம் அப்படின்னு ஆவேசமா பேசிட்டு இருக்காரு.

 விஜய் எப்படி மிசா சர்க்காரியா கமிஷன் அப்படின்னு 30, 40 வருஷத்துக்கு முன்னாடி உள்ள விஷயங்களை பேசி திசை திருப்பி மக்களை அந்த பக்கம் கொண்டு போறாரோ அதேபோல் திருமாவளவன்  நடப்பில் உள்ள விவரங்களை  கண்டும் காணாமல் இவர் திமுக கூட்டணியிலிருந்து ஏன் தெரியுமா வந்தோம் அப்படின்னு பழைய விஷயங்களை திரும்பத் திரும்ப பேசிட்டு இருக்காரு. இங்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட  மாணவர்கள் பாதிக்கப்பட போகிறார்கள். அதாவது 18% எஸ்சி இட ஒதுக்கீடு  வெறும் பேப்பரில் தான் இருக்கப் போகிறது கல்லூரிகளில் இட ஒதுக்கீடே இல்லை எல்லாம் தனியார் பல்கலைக்கழகமாக மாறிடும் அப்படியென்றால் அதனுடைய அர்த்தம் தான் என்ன?  இட ஒதுக்கீடு இருந்து என்ன பயன்? திருமாவளவன் அவர்கள்  மத்திய தொகுப்புல ஓபிசி இட ஒதுக்கீடு இல்லை என்பதை வெளிப்படுத்தி அதற்காக போராடிய ஒரு தலைவர் ஆனா இன்றைக்கு கண்ணு முன்னாடி எஸ்சி இட ஒதுக்கீடு பறி போகுது ஓபிசி இட ஒதுக்கீடு பறி போகுது இட ஒதுக்கீடு பறி போகுது ஓபிசி இட ஒதுக்கீடு பறிபோகுது எஸ்சி இட ஒதுக்கீடு பரிபோகுது எல்லாம் போகப்போகுது இப்ப சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்திருக்காங்க அடுத்த ஒரு சில ஆண்டுகளில் இவர்கள் நடைமுறைப்படும். எந்த ஒரு தனியார் கல்லூரிக்கும் கல்லூரியாவே நீடிப்பதை விட பல்கலைக்கழகமா நீடிப்பது தான் அவங்களுக்கு லாபகரமானது ஏன்னென்றால் கட்டணத்தை அவர்கள் நிர்ணயிக்கலாம்  அரசு ரொம்ப ஈஸியா எல்லாரும் பணம் சம்பாதிக்கிறதுக்கு வழி சொல்லிக் கொடுத்திருக்குது. எல்லாரும் கண்டிப்பா மாறத்தான் போறாங்க அப்படி இருக்கும்போது இத்தனை லட்சம் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு பறிபோகப் போகிறது. அதை பத்தி பேசுவதை விட்டுட்டு திமுக கூட்டணி ஏன் வந்தோம் போனோம்னு அதையே பேசுறதுனால யாருக்கு என்ன பயன் முதலமைச்சர் விஜயும் த வெ க அரசும் ரொம்ப சூட்சுமமா செயல்பட்டு எல்லாருடைய கவனத்தையும் அந்த பக்கம் திசை திருப்பி விட்டுட்டு இவ்வளவு மோசமான ஒரு மசோதாவை நிறைவேற்றி விட்டார்கள். எதிர்வரும் காலங்களில் தவெக இளைஞர்கள் மிகக் கடுமையாக இதன் மூலமா பாதிக்கப்படுவார்கள். இன்றைக்கு பள்ளிக்கூடங்களில் தான் தவெகவுக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறது. சின்ன சின்ன பள்ளிக்கூட பிள்ளைகள் கூட தவெக

தவெக கேன்னு கும்மாளமிடுகிறார்கள். அவங்க எல்லாம் நாளைக்கு பள்ளி கல்வி முடிச்சிட்டு கல்லூரி சேர போகும்போது அவர்களை இது கண்டிப்பாக பாதிக்கும்   அப்புறம் பழையநிலை போல ஐடிஐ படிச்சிட்டு பாலிடெக்னிக் படிச்சிட்டு எங்கயாவது பிட்டர் ஏசி மெக்கானிக் வெல்டர்ன்னு சின்ன சின்ன வேலைகளுக்கு மட்டும்தான் நம்ம போகவேண்டி வரும். இத்தனை காலம் முறையா படிச்சு கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமா முன்னேற்றி கொண்டு வந்ததை இட ஒதுக்கீட்டின் மூலமா ஒரு இடத்திலிருந்து அடுத்த நிலைக்குமாற்றி கொடுத்த ஒரு விஷயத்தை இந்த தவெக அரசு  தட்டி தூக்கி போட்டு போகிறது.

இதுவரையில் பாஜக  தமிழ்நாட்டில் எப்படியாவது இந்த கல்வி  விஷயத்துக்குள்ள உள்ளே நுழைய என்னென்ன வழிகளிலயோ முயற்சி பண்ணினார்கள். ஆனால் அவங்களால அது முடியவில்லை. இந்த தவெக வந்து ரொம்ப எளிமையாக அதை  செய்து கொடுக்குது எந்தவித சண்டை சச்சரவும் இல்லாம யாருடைய கவனத்தையும் இதுல குவிக்காம ரொம்ப சாதாரணமாக செய்துவிட்டு போறாங்க இது எவ்வளவு பெரிய கேடு?

தமிழ்நாட்டினுடைய எதிர்காலத்தையே படுமோசமா பாதிக்கப்படக்கூடியது ஓபிசி பிரிவிலிருந்து ஒரு வந்த ஒரு மாணவன் நல்ல ஒரு கல்லூரியில் போய் படிக்க முடியாது ஒரு பெயர்பெற்ற கல்லூரில் போய் படிக்க முடியாது எஸ்சி பிரிவிலிருந்து வந்த ஒரு மாணவன் ஒரு மதிப்புமிக்க கல்வி நிறுவனத்தில் போய் சேர்ந்து படிக்க முடியாது அப்படி போன்ற ஒரு நிலைமை உருவாகியுள்ளது இதைவிட கேடு இந்த தமிழ்நாட்டுக்கு வேறு ஏதும் அல்ல.

 திமுகவும் இந்த விஷயத்துல தீவிரமா எதிர் வினையாற்றிது போல தெரியவில்லை. இந்தப் பிரச்சினயின் தீவிர தன்மை அடுத்தடுத்த நாட்களில் பல பேருக்கு புரியலாம்.