நெருங்கும் பா.ஜ.க உருகும் தி.மு.க! தொகுதி மறுவரையரை மசோதாவிற்கு தி.மு.க ஆதரவு..??

செந்தளம் செய்திப்பிரிவு

நெருங்கும் பா.ஜ.க உருகும் தி.மு.க!  தொகுதி மறுவரையரை மசோதாவிற்கு தி.மு.க ஆதரவு..??

பா.ஜ.க ஆசியுடன் தி.மு.க- அ.தி.மு.க இணைந்து ஆட்சியமைக்க போட்ட சதித்திட்டங்களையும் அதற்காக நடந்த கூத்துகளையும் அனைவரும் அறிவோம்!

கூட்டணியிலிருந்து காங்கிரசு வெளியேறவும் காங்கிரசுகாரர்களை ரோட்டில் ஓடவிட்டு அடித்தனர் தி.மு.கவினர். இந்தியா கூட்டணி கூட்டத்தை புறக்கணித்தது மட்டுமின்றி டெல்லியில் காங்கிரசை கண்டித்து பேனர்களையும் தி.மு.க வைத்தது.

தொடர்ந்து பா.ஜ.கவை நோக்கிய அதன் நகர்வும் வேகமெடுத்தது.

செந்தில் பாலாஜியும் அவரது சகோதரரும் பா.ஜ.கவால் காப்பாற்றப்பட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கிற்கு பயந்து வெளிநாடு தப்பி ஓடிய எ.வ.வேலுவையும் பா.ஜ.க அரசின் அட்டார்ணி ஜெனரலாக  இருந்த காவி வழக்கறிஞர் முகுல்ரோத்தகியை வைத்து காப்பற்றியது பா.ஜ.க. முகுல்ரோத்தகி தி.மு.கவிற்கு ஆதரவாக நின்று தமிழ்நாடு அரசிற்கு நீதிமன்றத்திலேயே மிரட்டலும் விடுத்தார். சொல்வதெனில், பா.ஜ.க திமுகவின் திரைமறைவு பேச்சுவார்த்தைகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளன.

சில நாட்களுக்கு முன்னால் தி.மு.கவின் முன்னால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா போன்றவர்கள் டெல்லியில் அமைச்சர்களாக அமர்வார்கள். திமுக எம்பிக்கள் டெல்லியில் அமைச்சர்களாக பொறுப்பேற்கும் நிலை வரும்" என்று வெளிப்படையாக பேசியதெல்லாம் தி.மு.க பா.ஜ.க உறவு எந்த அளவிற்கு பலப்பட்டுள்ளது என்பதற்கான அறிவிப்புதான்.

தொகுதிமறு வயைரை மாசோதா மீண்டும் தாக்கல்

மோடி அரசு தொகுதி மறுவரையறை மசோதா- பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் கொண்டுவர இருக்கிறது. மசோதா வெற்றி பெறுவதற்கான எம்.பிக்களின் ஆதரவு எண்ணிக்கையையும் உறுதிபடுத்திக் கொண்டுள்ளது.திரிணாமுல் காங்கிரசை உடைத்து 20 எம்பிக்களை தன் பக்கம் கொண்டுவந்து விட்டது. மேலும் தி.மு.கவையும் சரிகட்டியுள்ளது.

சென்னை வந்த மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது “நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா கொண்டுவரப்படும். கடந்த முறை இந்த மசோதா நிறைவேற்ற முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ்தான். இந்த முறை பலம் அதிகமாக உள்ளது,  மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள் என்டிஏவுக்கு ஆதரவளித்துள்ளார்கள். நிச்சயமாக இந்த முறை இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும்.என்று அத்வாலே கூறியதுடன், தற்போது திமுக காங்கிரஸ் ஒன்றாக இல்லை. இந்தியா கூட்டணியை விட்டு திமுக வெளியேறிவிட்டது, ஆகையால் காங்கிரஸின் முடிவுகளுக்கு திமுக ஒத்துழைப்பு தராது என நம்புகிறேன். இந்த மசோதாவுக்கு ஆதரவு தருவது தொடர்பாக பாஜக தலைவர்கள், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.திமுக இந்த மசோதாவுக்கு ஆதரவு தரலாம். அல்லது, மசோதாவை புறக்கணிப்பதன் மூலம் தங்களுக்கு சாதகமாக இருக்கலாம் என அத்வாலே பேசியிருக்கிறார்.

எனவே மசோதாவிற்கு ஆதரவளிப்பது அல்லது புறக்கணித்து ஆதரவளிப்பது எனும் நிலையை தி.மு.க எடுக்கப்போகிறது. அணிதா ராதாகிருஷ்ணன் கூறியவாறு, தி.மு.க எம்.பிக்களான திருச்சி சிவா போன்றவர்கள் பா.ஜ.க அமைச்சரவையில் அமைச்சராவதும் விரைவில் அரங்கேறலாம்.

"ஆரிய உதடுகள் உன்னது...திராவிட உதடுகள் என்னது...

ஆரியம் - திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே.."எனும் மோக ராகத்தை நமது செவிகள் விரைவில் கேட்கவிருக்கிறது!

செந்தளம் செய்திப்பிரிவு