போலி ஜனநாயகன் ஆட்சியில் அடுத்தடுத்து அரங்கேறும் காவல் சித்தரவதை கொலைகள்!
செந்தளம் செய்திப்பிரிவு
தூத்துக்குடியில் அமுதா நகரை சேர்ந்த 24 வயதான அருணாச்சலம் என்ற இளைஞர், கடந்த 17 ந்தேதி சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக தூத்துக்குடி தெற்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்த 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து விட்டதாகக் கூறிமருத்துவமணையில் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் போலீசார் சேர்த்தனர்.
போலீசார் அடித்ததில் முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட பலமான காயம், போலீசார் தாக்கியதில் மூளையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக அருணாச்சலம் உயிரிழந்தார்.
இறப்பதற்கு முன்பு தன்னை போலிசார் தாக்கியது பற்றி அருணாச்சலம் மரண வாக்குமூலம் கொடுக்கும் காணொளி போலீசாரின் கொடூரத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
சிலநாட்களுக்கு முன் சபரிவர்மன் என்பவரை சிறையில் அடித்து போலீசார் கொலை செய்த சுவடு மாறுவதற்குள் அருணாச்சலத்தை அடித்து கொலை செய்துள்ளது போலீஸ்.
இந்நிலையில் எது நடந்தாலும் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே பேசுவது என்று கங்கனம் கட்டியிருக்கும், கழிசடையான- அரசியல் அநாமதேயம் வைகோ எல்லா ஆட்சியிலும்தான் லாக்கப் டெத் நக்கிறது என்று கூறி லாக்கப் டெத் இயல்பான ஒன்றாக பேசியிருப்பது மக்களிடம் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
செந்தளம் செய்திப்பிரிவு