கார்ல் மார்க்ஸ் பற்றி லெனின் - இறுதிப் பகுதி 4

மார்க்சியத்தைப் பற்றிய விரிவுரையுடன் அமைந்த வாழக்கை வரலாற்று சுருக்கம்

கார்ல் மார்க்ஸ் பற்றி லெனின் - இறுதிப் பகுதி 4

முந்தையப் பகுதிகளை படிக்க: கார்ல் மார்க்ஸ் பற்றி லெனின்

கார்ல் மார்க்ஸ் பற்றி லெனின் - பகுதி 2

பகுதி -3

சோஷலிஸம்

மேலே சொன்னதிலிருந்து வெளிப்படையாவது இதுதான்: முற்றிலும் இன்றைய சமுதாயத்தின் பொருளாதார இயக்க விதியிலிருந்தே மார்க்ஸ், முதலாளித்துவச் சமுதாயம் சோஷலிஸ்டு சமுதாயமாக மாற்றமடைவது தவிர்க்க முடியாததாகும் என்ற முடிவுக்கு வருகிறார். உழைப்பு சமுதாயமயமாக்கப்படுவது பல்லாயிரக்கணக்கான வடிவங்களிலே முன்னைவிட அதிக வேகத்துடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது; மேலும் மார்க்ஸ் மறைந்தபின் கழிந்துள்ள இந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் பெருமளவான உற்பத்தியின் வளர்ச்சியிலும், முதலாளிகளின் கார்ட்டல்கள், சிண்டிக்கேட்டுகள். டிரஸ்டுகளின் வளர்ச்சியிலும், நிதி மூலதனத்தின் அளவுகளிலும் சக்தியிலும் ஏற்பட்டுள்ள பிரம்மாண்டமான அதிகரிப்பிலும் இது - அதாவது, உழைப்பு சமுதாயமயமாக்கப்படுவது - வெகு தெளிவாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது, தவிர்க்க முடியாதபடி சோஷலிஸம் வந்து சேருவதற்கு இதுதான் முதன்மையான பொருளாயத அடிப்படையாகும். இந்த மாற்றத்திற்கு அறிவுத் துறையிலும் ஒழுக்கநெறித் துறையிலும் விசைச் சக்தியாக விளங்குவதும், நேரடியாக இருந்து இம்மாற்றத்தை நிறைவேற்றும் செயலாளியாக விளங்குவதும், பாட்டாளி வர்க்கமே. இந்த வர்க்கத்துக்கு முதலாளித்துவமே பயிற்சியளிக்கிறது. முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கம் நடத்துகிற போராட்டம் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது; அந்த வடிவங்களின் உட்பொருள் வளமும் மேலும் மேலும் அதிகரிக்கிறது; தவிர்க்க முடியாத முறையிலே இந்தப் போராட்டம் அரசியல் ஆட்சியதிகாரத்தைப் பாட்டாளி வர்க்கம் கைப்பற்றுவதை ("பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை'') நோக்கமாகக் கொண்ட அரசியல் போராட்டமாகின்றது. உற்பத்தி சமுதாயமயமாக்கப்படுவதன் விளைவாக உற்பத்திச் சாதனங்கள் சமுதாயச் சொத்தாக மாற்றப்படுவது, ''பறிமுதல் செய்வோர்களின் சொத்தைப் பறிமுதல் செய்வது" நிகழ்ந்தே தீரும். உழைப்பின் உற்பத்தித் திறனில் மகத்தான அதிகரிப்பு, வேலை நேரத்தைக் குறைப்பது. துவக்கக்கால, சிதறிய நிலையிலேயுள்ள, சிற்றளவான உற்பத்தி அழிந்ததிலே மிஞ்சிக் கிடக்கிற மிச்சசொச்சங்களை நீக்கிவிட்டு கூட்டு முறையிலமைந்த, மேம்படுத்தப்பட்ட உழைப்பை நிலைநாட்டுவது—இவையெல்லாம் இந்த மாற்றத்தினால் நேரடியாக அடையும் விளைவுகளாகும். விவசாயத்துக்கும் தொழிலுக்குமிடையேயுள்ள ஒட்டுறவை முதலாளித்துவம் இறுதியாக வெட்டிவிடுகிறது. அதே சமயத்தில். முதலாளித்துவம் மேலும் வளர வளர இந்த ஒட்டுறவிற்குரிய புதிய அம்சங்களையும் தயாரிக்கிறது; உணர்வுபூர்வமாக விஞ்ஞானத்தை நடைமுறையில் செயல்படுத்துவது, கூட்டு முறையில் உழைப்பை இணைப்பது, உலகு மக்கள் தொகையை மறுவினியோகம் செய்வது (கிராமப்புறங்களின் ஒதுங்கிக்கிடக்கிற நிலைக்கும், தனிமைப்பட்டிருக்கிற நிலைக்கும், அநாகரிக நிலைக்கும், அதே சமயத்தில் பெரியபட்டணங்களில் பெருந்திரளான மக்கள் தொகை இயற்கைக்கு விரோதமாய்க் குவிந்து கிடக்கிற நிலைக்கும் இது ஒருங்கே முற்றுப் புள்ளி வைக்கும்) - இவற்றின் அடிப்படையில் தொழிலுக்கும் விவசாயத்துக்குமிடையே இணைப்புக்குரிய புதிய அம்சங்களை அது தயாரிக்கிறது. புதிய வடிவத்தில் அமைந்த குடும்பம், பெண்களின் நிலையிலும் இளந்தலைமுறையைப் பராமரித்து வளர்ப்பதிலும் புதிய நிலைமைகள்—இவற்றை முதலாளித்துவத்தின் உச்ச வடிவங்கள் தயாரித்துக் கொண்டிருக்கின்றன: பெண் மக்கள், குழந்தைகளின் உழைப்பு, தந்தை வழிக் குடும்பத்தை முதலாளித்துவம் உடைத்தெறிவது—இவையெல்லாம் நவீனகால சமுதாயத்தில் தவிர்க்க முடியாதபடி மிக பயங்கரமான, நாசகரமான, வெறுக்கத்தக்க வடிவங்களைப் பெறுகின்றன. இருந்த போதிலும், ...குடும்பத் துறைக்கு வெளியே, உற்பத்தி முறையில், பெண்களுக்கும், இளைஞர்களுக்கும். ஆண் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் ஒரு முக்கியமான பாத்திரத்தைத் தருவதின் மூலமாக நவீன இயந்திரத் தொழில் முந்தியதைவிட உயர்வான குடும்ப வடிவத்துக்கு, பால் உறவு வடிவத்துக்குப் புதிய பொருளாதார அடித்தளத்தை உண்டாக்குகிறது. பண்டைக்கால ரோமானிய, பண்டைக்கால கிரேக்க, அல்லது கிழக்கத்தியக் குடும்ப வடிவங்களைப் பரமமானவை, இறுதியானவை என்று கொள்வது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தமாகும் டியூட்டானிக் - கிறித்தவக் குடும்ப வடிவமும் பரமமானதென்றோ இறுதியானதென்றோ கருதுவதும். தவிரவும், மேலே சொன்ன குடும்ப வடிவங்களையெல்லாம் மொத்தமாக எடுத்துக் கொண்டு பார்த்தால் அவையெல்லாம் வரலாற்று வளர்ச்சியில் ஒன்றின்பின் ஒன்றாய்த் தோன்றிய ஒரு வரிசையாக அமைகின்றன. மேலும், கூட்டாகச் சேர்ந்து வேலை செய்யும் குழுவானது இரு பாலாராலும் எல்லா வயதினராலும் ஆனதென்னும் உண்மை தக்க நிலைமைகளில் மனிதத்துவ வளர்ச்சிக்கு நிச்சயமாய் ஒரு தோற்றுவாயாகிவிடும் என்பது தெளிவு. ஆனால் அதன் தன்னியல்பாய் வளர்ந்த கொடிய முதலாளித்துவ வடிவத்தில்- உற்பத்தி வேலை முறைக்கே தொழிலாளியே தவிர தொழிலாளிக்காக உற்பத்தி வேலை முறையில்லை என்ற முதலாளித்துவ வடிவத்தில்--அது ஊழலுக்கும் அடிமைத்தனத்துக்கும் கேடுகெட்ட அபாயகரமான தோற்றுவாயாகிவிடுகிறது.'' (மூலதனம், தொகுதி 1, 13ம் அத்தியாயத்தின் இறுதி.) ஆலை முறையில் நாம் பார்ப்பது "எதிர்காலத்தியக் கல்வியின் கரு, குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டிருக்கிற ஒவ்வொரு குழந்தை விஷயத்திலும் அந்தக் கல்வி பாட போதனை. உடற்பயிற்சி ஆகியவற்றோடு உற்பத்தியாற்றலுள்ள உழைப்பையும் இணைத்து வைக்கும் - உற்பத்தியின் வினைத் திறமையைக் கூடுதலாக்குவதற்குள்ள வழிகளில் அதுவும் ஒன்று என்பதற்காக மட்டுமல்ல, முழுவளர்ச்சி பெற்ற மனிதர்களை உண்டாக்குவதற்கும் அது ஒன்றுதான் வழி என்பதற்காக" (அதே நூல்). தேசிய இனம், அரசு என்ற பிரச்சினைகளையும் அதே வரலாற்று அடிப்படையில்தான் மார்க்ஸிய சோஷலிஸம் வைக்கிறது-சென்ற காலத்தை விளக்குவது என்ற அர்த்தத்தில் மட்டுமல்ல. எதிர்காலத்தை அச்சமின்றி முன்னறிந்து கூறி, அதனைச் சாதிப்பதற்குத் தைரியமான நடைமுறைப் பணி மேற்கொள்வது என்ற அர்த்தத்திலும். தேசங்கள் என்பவை சமுதாய வளர்ச்சியைச் சேர்ந்த முதலாளித்துவ சகாப்தத்தில் தவிர்க்க முடியாதபடி உண்டாகிற ஒரு விளை பொருள், ஒரு வடிவம் ஆகும். தொழிலாளி வர்க்கம், "தன்னையும் தேசத்துக்குள் ஒரு பகுதியாக்கிக் கொள்ளாமல்”, தானும் "தேசியத் தன்மை" பெறாமல் ("இந்தச் சொல்லின் முதலாளித்துவ அர்த்தத்தில் அல்ல''), அது பலம் பெற முடியவில்லை, பக்குவம் பெற முடியவில்லை, உருவாக முடியவில்லை. ஆனால் முதலாளித்துவத்தின் வளர்ச்சி மேலும் மேலும் தேசியத் தடைகளை உடைத்தெறிகிறது. தேசியத் தனி வாழ்வை அழிக்கிறது, தேசியப் பகைமைகளுக்குப் பதிலாக வர்க்கப் பகைமைகளை ஏற்படுத்துகிறது. ஆகவே, வளர்ச்சியுற்ற முதலாளித்துவ நாடுகளில், "தொழிலாளிகளுக்குத் தேசம் ஒன்றும் கிடையாது” என்பது முழுக்க முழுக்க உண்மையாகும்; மேலும், குறைந்தபட்சம் நாகரிகமடைந்துள்ள நாடுகளிலாவது இருக்கும்படியான தொழிலாளிகளின்" 'ஒன்றுபட்ட செய்கையானது"..... "பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்குத் தேவையான முதல் நிபந்தனைகளில் ஒன்றாகும்." (கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை) என்பதும் முழுக்க முழுக்க உண்மை. அரசு என்பது ஒழுங்கமைப்பு பெற்ற பலாத்காரம் ஆகும். சமுதாய வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமரசப்படுத்த முடியாத வர்க்கங்களாகச் சமுதாயம் பிளவுண்ட போது, வெளிப் பார்வைக்குச் சமுதாயத்துக்கு மேலே நின்று கொண்டும் ஓரளவுக்குச் சமுதாயத்திலிருந்து விலகியும் இருக்கிற "அதிகாரம்" இல்லாமல் சமுதாயம் வாழ முடியாத போது, அரசு தவிர்க்க முடியாதபடி தோன்றியது. அரசு என்பது, வர்க்க முரண்பாடுகளுக்குள்ளிருந்தே உதித்து, "மிகவும் வலிமை வாய்ந்த, பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிற வர்க்கத்தின் அரசாக ஆகிறது; அந்த வர்க்கம், அரசின் மூலமாக, அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கமாக ஆகிறது; இந்த வழியிலே ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை ஒடுக்கி வைத்துச் சுரண்டிக் கொண்டிருப்பதற்கு அது புதிய சாதனங்களைப் பெறுகிறது. இப்படித்தான் பண்டைக் காலத்திய அரசு, எல்லாவற்றிற்கும் மேலாக, அடிமைகளை ஒடுக்கி வைத்திருப்பதற்கமைந்த அடிமையுடைமையாளரின் அரசாக இருந்தது; அதேபோலத்தான் நிலப்பிரபுத்துவ அரசு என்பதும் பண்ணையடிமைகளாகிய விவசாயிகளையும் ஒடுக்கி வைத்திருப்பதற்கமைந்த பிரபுவம்சத்தினரின் அரசாக இருந்தது; அதே போலத்தான், நவீனகாலப் பிரதிநிதித்துவ அரசும் கூலியுழைப்பை மூலதனம் சுரண்டுவதற்கமைந்த கருவியாகும்." (எங்கெல்ஸ் எழுதிய குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலைப் பார்க்க. இந்த நூலில் எங்கெல்ஸ், தம்முடைய கருத்துக்களையும் மார்க்ஸின் கருத்துக்களையும் விளக்குகிறார்.) முதலாளித்துவ அரசின் மிகமிகச் சுதந்திரமான, மிகமிக முற்போக்கான வடிவம் என்றுள்ள ஜனநாயகக் குடியரசுகூட இந்த உண்மையை எந்த விதத்திலும் அழிக்க வில்லை. ஆனால் வெறுமனே அதன் வடிவத்தை மாற்றுகிறது. (அரசாங்கத்துக்கும் பங்கு மார்க்கெட்டுக்கும். உள்ள தொடர்பு: அரசாங்க அலுவலர்களிடையேயும் பத்திரிகைக்காரர்களிடையேயும் - நேர்முகமாகவும் மறைமுகமாகவும் இருக்கிற ஊழல் முதலியன). வர்க்கங்களை ஒழிப்பதில் கொண்டு போய்விடுவதின் மூலமாக சோஷலிஸம் அரசை ஒழிப்பதிலும் கொண்டுபோய் விடும். டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலில், '"எந்த முதல் செய்கையிலே அரசானது உண்மையிலே சமுதாயம் முழுவதின் பிரதிநிதியாக முன்வருகிறதோ - அதாவது, சமுதாயத்தின் சார்பில் உற்பத்திச் சாதனங்களைப் பறிமுதல் செய்கிறதோ - அதே முதல் செய்கைதான் அரசு என்ற முறையில் அது சுதந்திரமாகச் செய்யும் கடைசிச் செய்கையுமாகும். ஒரு துறைக்குப் பின் ஒரு துறையாக, சமுதாய உறவுகளில் அரசாட்சி தலையிடுவது அனாவசியம் என்று ஆகிக் கொண்டு வந்து, பிறகு தானாகவே அற்றுப்போகிறது. மனிதர்களை ஆளுவது என்பது போய் அதன் இடத்தில் பொருள் விவகாரங்களை நிர்வகிப்பது உற்பத்தி இயக்கப்போக்குகளை நடத்துவது என்பது ஏற்படுகிறது. அரசு 'ஒழிக்கப்படுவதில்லை', அது தானாகவே 'உலர்ந்து உதிர்ந்து போகிறது.''' "உற்பத்தியாளர்களின் சுதந்திரமான, சமமான சங்கம் என்ற அடிப்படையில் உற்பத்தியை ஒழுங்கமைத்திடும் சமுதாயம் அரசு இயந்திரம் முழுவதையும் அப்போது அது இருக்க வேண்டிய இடத்தில், அதாவது பண்டைக் காலப் பொருட்களை வைத்திருக்கும் காட்சிசாலையில், கைராட்டை, வெண்கலக் கோடாலி ஆகியவற்றின் பக்கத்தில் கொண்டுபோய் வைத்துவிடும்.'' (எங்கெல்ஸ் எழுதிய குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்.)

கடைசியாக: பறிமுதல் செய்வோர்களின் சொத்தைப் பறிமுதல் செய்கிற காலப்பகுதியில் தொடர்ந்து இருந்து வரப்போகிற சிறு விவசாயிகளின்பால் மார்க்ஸிய சோஷலிஸம் காட்டும் அணுகுமுறை சம்பந்தப்பட்ட வரையில் மார்க்ஸின் கருத்துக்களை வெளியிடும்படியான எங்கெல்ஸின் ஒரு பிரகடனத்தை நாம் குறிப்பிட வேண்டும்: "...அரசதிகாரம் எங்கள் கையில் இருக்கும் காலத்தில் நாங்கள் சிறு விவசாயிகளின் சொத்தைப் பலவந்தமாகப் பறிமுதல் செய்வதைப் பற்றிச் (நஷ்ட ஈடு கொடுத்துச் செய்வதா, கொடாமலே செய்வதா என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை) சிந்திக்கவும் மாட்டோம்; பெரிய நிலச்சுவான்தார்களின் விஷயத்தில்தான் நாங்கள் அப்படிச் செய்து தீரவேண்டும். சிறு விவசாயி சம்பந்தமாக நமது பணி என்ன வென்றால், முதலில், அவனது தனியாள் உற்பத்தியையும் தனியுடைமையையும் கூட்டுறவு உற்பத்தியாகவும் கூட்டுறவு உடைமையாகவும் மாற்றுவதுதான்; இதைப் பலாத்காரமாகச் செய்யாமல், உதாரணத்தைக் கொண்டும், இந்த நோக்கத்துக்காகச் சமுதாய உதவியைத் தந்தும் செய்து வைப்போம். அதன் பிறகு சிறு விவசாயிக்கு இன்றைக்குக் கூட வெளிப்படையாகத் தெரித்திருக்க வேண்டிய எதிர்கால அனுகூலங்களைக் காட்டுவதற்கு நிச்சயமாக நம்மிடம் நிறைய வழிவகைகள் இருக்கத்தான் போகின்றன.'' (பிரான்ஸிலும் ஜெர்மனியிலும் விவசாயப் பிரச்சினை என்ற எங்கெல்ஸின் நூல், பக்கம் 17. அலெக்ஸேயெவா பதிப்பு: ருஷ்ய மொழிபெயர்ப்பில் பிழைகள் உள்ளன. அசல் பிரதி Neue Zeit என்ற பத்திரிகையில் உள்ளது).

பாட்டாளிகளது வர்க்கப் போராட்டத்தின் போர்த்தந்திரம்

நடைமுறைப் புரட்சி நடவடிக்கைகளின் சூழ்நிலைமைகளைப் புரிந்து கொள்ளவோ, அதன் முக்கியத்துவத்தை மதிப்பிடவோ முந்தையப் பொருள்முதல்வாதம் திறனற்றிருந்தது; அதன் பிரதான குறைபாடுகளில் இதுவும் ஒன்றாகும். இந்தக் குறைபாட்டை மார்க்ஸ் 1844-45ம் ஆண்டுகளிலே ஆராய்ந்து விளக்கிவிட்டார். ஆகவே அவர் தத்துவ சம்பந்தமான தமது வேலையோடு கூடவே, பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் பற்றிய போர்த்தந்திரப் பிரச்சினைகளிலே தமது வாழ்க்கை நெடுகிலும் அயராத கவனம் செலுத்தி வந்தார். மார்க்ஸின் எல்லா நூல்களிலும், குறிப்பாக 1913ம் ஆண்டில் வெளியிடப்பட்ட மார்க்ஸ், எங்கெல்ஸ் கடிதப் போக்குவரத்தின் நான்கு தொகுதிகளிலும், இது பற்றி ஏராளமான விஷயாதாரங்கள் உள்ளன. இவ்விஷயாதாரங்களைத் திரட்டுவதும், தொகுப்பதும், ஆராய்வதும், பரிசீலிப்பதும் போதிய அளவில் செய்யப்படாமலே இருந்து வருகிறது. ஆகவே, இங்கே நாம் சில மிகமிகப் பொதுவான, மிகமிகச் சுருக்கமான குறிப்புகளைச் சொல்வதோடு நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கும். இந்த அம்சத்தைத் தன்னகத்தே கொண்டிராத பொருள்முதல்வாதம் உறுதியற்றதாய், ஒருதலைப்பட்சமானதாய், உயிரற்றதாய் இருக்கும் என்று மார்க்ஸ் முழு நியாயத்தோடு கருதினார் என்பதை வலியுறுத்துகிறோம். மார்க்ஸ் தமது பொருள்முதல்வாத - இயக்க இயல் உலகக் கண்ணோட்டத்தின் எல்லா ஆதாரக் கூறுகளோடும் கறாராகப் பொருந்தும்படியாகத்தான் பாட்டாளி வர்க்கப் போர்த்தந்திரத்தின் பிரதான கடமையை வரையறுத்தார். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் எல்லா வர்க்கங்களையும் விதிவிலக்கின்றி எடுத்துக் கொண்டு அவ்வர்க்கங்களிடையேயுள்ள பரஸ்பர உறவுகளின் மொத்தத் தொகையை யதார்த்த ரீதியிலே கருத்தில் கொள்வது- அதன் விளைவாக அந்தச் சமுதாயத்தின் யதார்த்த வளர்ச்சிக் கட்டத்தையும் அந்தச் சமுதாயத்துக்கும் இதர சமுதாயங்களுக்கும் இடையேயுள்ள பரஸ்பர உறவுகளையும் கருத்தில் கொள்வது- இது ஒன்றுதான் முன்னணி வர்க்கத்தின் சரியான போர்த்தந்திரத்துக்கு அடிப்படையாக இருக்க முடியும். அதே சமயத்தில், எல்லா வர்க்கங்களையும், எல்லா நாடுகளையும் நிலையமைதியில் பார்க்காமல் இயக்க நிலையில் பார்க்கிறோம்; அதாவது, அவற்றை அசையாத நிலையிலே பார்க்காமல் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையிலே பார்க்கிறோம் (இந்த இயக்கத்தின் விதிகளை நிர்ணயிப்பவை ஒவ்வொரு வர்க்கத்தின் பொருளாதார வாழ்வுநிலைமைகள்தான்). பிறகு, இயக்கத்தைப் பார்க்கும் போதும் சென்ற காலத்தைப் பற்றிய பார்வையுடன் மட்டும் அதைப் பார்க்காமல் எதிர்காலத்தைப் பற்றிய பார்வையுடனும் இயக்கத்தைப் பார்க்கிறோம். அதே சமயத்தில், அப்படிப் பார்க்கையில், மெதுவாக நடைபெறுகிற மாறுதல்களை மட்டும் பார்க்கிற "பரிணாமவாதிகளின்'' விஞ்ஞானக்கேடான கருத்தோட்டத்துக்கு இணங்க நாம் இயக்கத்தைப் பார்ப்பதில்லை; அதற்குப் பதிலாக, இயக்க இயல் வகையில் அதை நாம் பார்க்கிறோம்: இத்தகைய பிரம்மாண்டமான வளர்ச்சிகளிலே இருபது ஆண்டுகள் என்பது ஒரு நாளுக்கு மேல் இல்லை. இருந்தாலும், பின்னால் இருபது ஆண்டுகளைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள நாட்களும் வரக் கூடும்'' என்று மார்க்ஸ் எங்கெல்ஸுக்கு எழுதினார் (கடிதப் போக்குவரத்து, தொகுதி 3. 127ம் பக்கம்.) வளர்ச்சியின் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு கணத்திலும் பாட்டாளி வர்க்கப் போர்த்தந்திரம், யதார்த்த ரீதியிலே, தவிர்க்க முடியாததாயுள்ள மனித வரலாற்றின் இயக்க இயலைக் கணக்கில் எடுத்துக் கொண்டாக வேண்டும்: ஒரு புறம், அரசியல் தேக்கம் உள்ள அல்லது மந்தமான, '"அமைதியானதாகச் சொல்லப்படும் வளர்ச்சி நிலவும் காலப்பகுதிகளை, முன்னணி வர்க்கத்தின் உணர்வையும் பலத்தையும் போர்த்திறனையும் வளர்ப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; மற்றெரு புறம், இப்படிப் பயன்படுத்திக் கொள்ளும் வேலை அனைத்தையும் இந்த வர்க்கத்தினுடைய இயக்கத்தின் "இறுதி இலட்சியத்தை" அடைவதற்காக, 'இருபது ஆண்டுகளைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள" மகத்தான நாட்களில் மகத்தான பணிகளை நடைமுறையில் நிறைவேற்றி வைப்பதற்குரிய திறனை அந்த வர்க்கத்தினிடையே உண்டாக்கி வைப்பதற்காக நடத்திக் கொண்டு போக வேண்டும். இந்தப் பிரச்சினை சம்பந்தமாக மார்க்ஸின் இரண்டு வாதங்கள் குறிப்பான முக்கியத்துவம் வாய்ந்தவை: அவற்றில் ஒன்று மெய்யறிவின் வறுமை என்ற நூலிலே உள்ளது; அது பாட்டாளி வர்க்கத்தின் பொருளாதாரப் போராட்டம், பொருளாதார நிறுவனங்கள் சம்பந்தமானது; மற்றொருவாதம் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் இருக்கிறது; இது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் பணிகள் சம்பந்தமானது. முதல் வாதம் பின்வருமாறு: "பெருமளவான உற்பத்தி, ஒருவரை ஒருவர் அறிந்திராத மக்களைத் திரளாக ஓர் இடத்தில் குவிக்கிறது. போட்டி அவர்களின் நலன்களைப் பிரிக்கிறது. ஆனால், தங்கள் முதலாளிக்கு எதிராக அவர்களுக்கு இருக்கும் பொது நலனான கூலியைக் காப்பாற்றிக்கொள்வது என்பது, அவர்களை எதிர்ப்பு என்ற பொதுச்சிந்தனையிலே - இணைப்பிலே ஒன்றுபடுத்துகிறது.... - முதலில் தனித்தனியாக இருந்து வந்த இணைப்புக்கள் குழுக்களாக அவர்களை அமைக்கின்றன... எப்பொழுதுமே ஒன்றுபட்டு நிற்கிற மூலதனத்தின் எதிரே அவர்களுக்கு (அதாவது தொழிலாளிகளுக்கு இந்த இணைப்பை நிலைநிறுத்துவது கூலியை நிலைநிறுத்துவதைவிட அதிக அவசியமாகிவிடுகிறது.... இந்தப் போராட்டத்தில் - இது உண்மையிலே ஓர் உள்நாட்டுப் போர்தான் - வரப்போகும் போருக்குத் தேவையான எல்லா அம்சங்களும் ஒற்றுமைப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தக் கட்டத்தை எட்டிய மாத்திரத்தில் கூட்டணியானது அரசியல் தன்மை பெற்றுவிடுகிறது. இங்கேதான் பொருளாதாரப் போராட்டத்துக்கும், தொழிற்சங்க இயக்கத்துக்கும் வரப்போகும் சில பத்தாண்டுகளுக்கு வேண்டிய வேலைத்திட்டமும் போர்த்தந்திரமும் நமக்குக் கிடைக்கின்றன. பாட்டாளி வர்க்கம் "வரப்போகும் போருக்குத்" தனது சக்திகளைத் திரட்டிக் கொள்கிற நீண்ட காலப்பகுதி முழுவதற்கும் இவை போதும். இதன் பக்கத்திலேயே மார்க்ஸும் எங்கெல்ஸும் பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்தின் உதாரணத்தைப் பற்றித் தந்துள்ள பல மேற்கோள் குறிப்புகளை வைத்தாக வேண்டும். தொழில் துறையிலுள்ள ''செழுமை" எப்படி "தொழிலாளர்களை விலைக்கு வாங்குவதற்கான'' முயற்சிகளிலும் (கடிதப் போக்குவரத்து, தொகுதி 1. பக்கம் 136),7 அவர்களைப் போராட்டத்திலிருந்து திருப்புவதற்கான முயற்சிகளிலும் கொண்டுபோய் விடுகிறது; எப்படி இந்தச் செழுமை பொதுவாகவே "தொழிலாளர்களை உறுதி குலையச் செய்கிறது" (தொகுதி 2, பக்கம் 218); 38 எப்படி பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கம் ''முதலாளித்துவ மனோபாவமுள்ளதாக” ஆகிவிடுகிறது. "மற்றெல்லாவற்றையும்விட மிகமிக முதலாளித்துவத் தன்மை உள்ள இந்த தேசம்" (இங்கிலாந்து) "இறுதியிலே முதலாளி வர்க்கத்தோடு முதலாளித்துவ போக்குள்ள பிரபுவம்சத்தையும் முதலாளித்துவப் போக்குள்ள பாட்டாளி வர்க்கத்தையும் அமைத்துக் கொள்வதிலே குறியாயிருக்கிறது போல் தோன்றுகிறது'' (தொகுதி 2, பக்கம் 290);39 எப்படி அந்த வர்க்கத்தின் "புரட்சிகரமான ஊக்கம் ஒழுகியோடிவிடுகிறது (தொகுதி 3, பக்கம் 124); எப்படி "பிரிட்டிஷ் தொழிலாளர்கள் வெளித்தோற்றத்தில் தெரிகிற தங்களைப் பீடிக்கும் முதலாளித்துவத் தொத்து வியாதியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கு'' முன்பாக ஏறத்தாழ நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கும் (தொகுதி 3, பக்கம் 127); எப்படி பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்திடம் “சார்ட்டிஸ்டுகளின் வீரியம் இல்லை" (1866; தொகுதி 3. பக்கம் 305); எப்படி பிரிட்டிஷ் தொழிலாளர்களின் தலைவர்கள் "தீவிர முதலாளி வர்க்கத்தாருக்கும் தொழிலாளிக்கும்" இடைநிலையிலேயுள்ள ரகமாக வருகிறார்கள் (இது ஹோலியோக் என்பவரைக் குறித்துச் சொன்னது; தொகுதி 4, பக்கம் 209); பிரிட்டிஷ் ஏகபோகத்தின் காரணமாக, இந்த ஏகபோகம் இருக்கிற வரைக்கும், எப்படி "பிரிட்டிஷ் தொழிலாளி அசைந்து கொடுக்க மாட்டான்" (தொகுதி 4, பக்கம் 433); என்றெல்லாம் அந்த மேற்கோள்கள் குறிக்கின்றன. தொழிலாளர் இயக்கத்தின் பொதுவான போக்கு (அதன் விளைவும்கூட) சம்பந்தமாக, பொருளாதாரப் போராட்டத்தின் போர்த்தந்திரம் இங்கே மிகமிக விரிவான, முழுமையான, இயக்கவியல் முறையான, உண்மையாகவே புரட்சிகரமான நோக்குநிலையிலிருந்து கவனிக்கப்பட்டுள்ளது.

அரசியல் போராட்டத்தின் போர்த்தந்திரம் சம்பந்தமான அடிப்படை மார்க்ஸியக் கோட்பாட்டைக் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை வெளியிட்டது: ''உடனடியான இலட்சியங்களைச் சாதிப்பதற்காக, தொழிலாளி வர்க்கத்தின் தற்காலிக நலன்களை நிறைவேற்றுவதற்காக கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்கள்: ஆனாலும் கூட, நிகழ்கால இயக்கத்திலேயே அவர்கள் அந்த இயக்கத்தின் எதிர்காலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்திக் கவனித்துக் கொள்கிறார்கள்.'' அதனால்தான் 1848ம் ஆண்டில் போலந்தில் "விவசாயப் புரட்சிக்'' கட்சியை, “1846ல் நடந்த கிராக்கவ் எழுச்சியைத் தூண்டிய அந்தக் கட்சியை மார்க்ஸ் ஆதரித்தார். 1848லும், 1849லும் ஜெர்மனியில் அதிதீவிரமான புரட்சிகர ஜனநாயகத்தை மார்க்ஸ் ஆதரித்தார்; அப்போது போர்த்தந்திரத்தைக் குறித்துத் தாம் சொன்னதைப் பின்னால் அவர் என்றைக்கும் மறுத்துத் திரும்பப் பெறவேயில்லை. ஜெர்மானிய முதலாளி வர்க்கத்தை ''ஆரம்பத்திலிருந்தே மக்களுக்குத் துரோகம் செய்யும் எண்ணங் கொண்டிருந்ததும்" (விவசாயி மக்களுடன் ஒன்றாக இணைந்திருந்தால்தான் முதலாளி வர்க்கம் தனது பணிகளை முழுமையாகச் சாதித்துக் கொள்ள முடிந்திருக்கும்) "பழைய சமுதாயத்தின் முடிசூடிய பிரதிநிதிகளுடன் சமரசம் செய்து கொள்ளும் எண்ணங் கொண்டிருந்ததுமான "ஓர் அம்சமாகத்தான் மார்க்ஸ் கருதினார். முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சி சகாப்தத்தில் ஜெர்மன் முதலாளி வர்க்கம் வகித்த வர்க்க நிலை பற்றிய மார்க்ஸின் பகுப்பாராய்ச்சியின் சுருக்கத்தை இங்கே தருகிறோம்; இடையே ஒன்றைச் சொல்லலாம்: சமுதாயத்தை இயக்க நிலையிலே பரிசீலிக்கும் அது மாத்திரமல்ல, இயக்கத்தின் பின்னோக்கிச் செல்லும் பக்கத்திலிருந்து மட்டும் பரிசீலிக்காத பொருள்முதல் வாதத்திற்கு இந்தப் பகுப்பாராய்ச்சி ஓர் எடுத்துக்காட்டு ஆகும். 'தன்னிடத்திலும் நம்பிக்கை கிடையாது, மக்களிடத்திலும் நம்பிக்கை கிடையாது, மேல்நிலையிலுள்ளோரைக் கண்டு முணுமுணுப்பது, கீழ்நிலையிலுள்ளோரைக் கண்டு நடு நடுங்குவது.. உலகப் புயலைக் கண்டு பயப்படுவது.... எந்த விதத்திலும் ஊக்கம் கிடையாது, எல்லா விதங்களிலும் சிந்தனைத் திருட்டு,... முன்முயற்சியே கிடையாது... திடகாத்திரமான மக்களின் வாலிப இதயத்தின் துடிப்புகளைத் தனது சொந்தக் கிழட்டு நலன்களுக்காக வழிகாட்டித் தடம் புரளச் செய்யும் வேலை தனக்கு விதித்திருப்பதாகப் பாவித்துக் கொள்ளும் சாபத்தீடான கிழட்டுக் கட்டை...." (நியூ ரைஸிஷ் ஹைடுங், 1848; விடெராரிஷேர் நாக்லஸ், தொகுதி 3. பக்கம் 212 ஐப் பார்க்க.)" இருபது ஆண்டுகளுக்குப் பின்னால் எங்கெல்ஸுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் (கடிதப் போக்குவரத்து, தொகுதி 3, பக்கம் 224) 1848ம் ஆண்டுப் புரட்சி தோல்வியுற்றதற்குக் காரணம், சுதந்திரத்துக்காகப் போராடுவதைவிட அடிமைத்தனத்தோடு கூடிய சமாதானமே மேலென முதலாளி வர்க்கம் கருதியதுதான் என்று மார்க்ஸ் பிரகடனப்படுத்தினார். 1848-49ம் ஆண்டுகளின் புரட்சி சகாப்தம் முடிவுற்ற போது புரட்சி செய்வது போலப் போக்குக் காட்டும் ஒவ்வொரு முயற்சியையும் மார்க்ஸ் எதிர்த்தார் (ஷாப்பர், வில்லிஹ் என்பவர்களை எதிர்த்து மார்க்ஸ் செய்த போராட்டம்); மேலும், வெளிப் பார்வைக்கு "அமைதியானதாகத்" தோன்றும் வழியில் புதிய புரட்சிகளுக்குத் தயார் செய்ய வேண்டிய இந்தப் புதிய கட்டத்தில் வேலை செய்யத் திறமை பெற்றிருக்க வேண்டும் என்று மார்க்ஸ் வற்புறுத்தி வந்தார். இந்த வேலையை எந்த முறையிலே நடத்திக் கொண்டு போக வேண்டுமென்று மார்க்ஸ் விரும்பினார் என்பதைப் பிற்போக்கின் இருள் மண்டிய காலமான 1856ல் ஜெர்மனியிலிருந்த நிலைமையைப் பற்றி அவர் தந்த மதிப்பீடு காட்டுகிறது: "ஜெர்மனியின் நிலைமையெல்லாம் விவசாயப் போர் இரண்டாம் தடவையாக ஏற்பட்டுப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குப் பின்பலம் அளிக்க வாய்ப்பு ஏற்படுமா என்பதைத் தான் பொறுத்திருக்கிறது." (கடிதப் போக்குவரத்து, தொகுதி 2. பக்கம் 108.) ஜெர்மனியில் ஜனநாயக (முதலாளித்துவ) புரட்சி முடிவு பெறாத வரையில், விவசாயிகளின் ஜனநாயக ஆற்றலை வளர்ப்பதற்கான போர்த்தந்திரத்தில் சோஷலிஸ்ட் பாட்டாளி வர்க்கத்தின் கவனத்தை ஒன்றுகுவியச் செய்து வந்தார். லஸ்ஸாலினுடைய கண்ணோட்டம் "யதார்த்தத்திலே... தொழிலாளர் இயக்கம் முழுவதையும் பிரஷ்யா வுக்குக் காட்டிக்கொடுப்பதுதான்'' என்று மார்க்ஸ் கருதினார் (தொகுதி 3.பக்கம் 210). பிரஷ்யப் பெரு நிலப்பிரபுக்களுக்கும் தேசியவாதத்துக்கும் லஸ்னால் உடந்தையாக இருந்ததே இதற்குக் காரணம். பத்திரிகைகளுக்கு விடுவதற்கான ஒரு கூட்டறிக்கை விஷயமாக மார்க்ஸோடு கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் போது 1865ல் எங்கெல்ஸ் பின்வருமாறு எழுதினார்: "விவசாயமே மிகப் பெரும்பாலும் உள்ள ஒரு நாட்டில், மாபெரும் நிலப்பிரபுத்துவ வம்சத்தோரின் சாட்டையின்கீழ் கிராமப்புறப் பாட்டாளி வர்க்கம் தந்தைவழி முறையிலே சுரண்டப்படுவதைப் பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் இயந்திரத் தொழிலில் வேலை செய்யும் பாட்டாளி வர்க்கத்தின் பேரால் முதலாளி சமாதானமே மேலென முதலாளி வர்க்கம் கருதியதுதான் என்று மார்க்ஸ் பிரகடனப்படுத்தினார். 1848-49ம் ஆண்டுகளின் புரட்சி சகாப்தம் முடிவுற்ற போது புரட்சி செய்வது போலப் போக்குக் காட்டும் ஒவ்வொரு முயற்சியையும் மார்க்ஸ் எதிர்த்தார் (ஷாப்பர், வில்லிஹ் என்பவர்களை எதிர்த்து மார்க்ஸ் செய்த போராட்டம்); மேலும், வெளிப் பார்வைக்கு "அமைதியானதாகத்" தோன்றும் வழியில் புதிய புரட்சிகளுக்குத் தயார் செய்ய வேண்டிய இந்தப் புதிய கட்டத்தில் வேலை செய்யத் திறமை பெற்றிருக்க வேண்டும் என்று மார்க்ஸ் வற்புறுத்தி வந்தார். இந்த வேலையை எந்த முறையிலே நடத்திக் கொண்டு போக வேண்டுமென்று மார்க்ஸ் விரும்பினார் என்பதைப் பிற்போக்கின் இருள் மண்டிய காலமான 1856ல் ஜெர்மனியிலிருந்த நிலைமையைப் பற்றி அவர் தந்த மதிப்பீடு காட்டுகிறது: "ஜெர்மனியின் நிலைமையெல்லாம் விவசாயப் போர் இரண்டாம் தடவையாக ஏற்பட்டுப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குப் பின்பலம் அளிக்க வாய்ப்பு ஏற்படுமா என்பதைத் தான் பொறுத்திருக்கிறது." (கடிதப் போக்குவரத்து, தொகுதி 2. பக்கம் 108.) ஜெர்மனியில் ஜனநாயக (முதலாளித்துவ) புரட்சி முடிவு பெறாத வரையில், விவசாயிகளின் ஜனநாயக ஆற்றலை வளர்ப்பதற்கான போர்த்தந்திரத்தில் சோஷலிஸ்ட் பாட்டாளி வர்க்கத்தின் கவனத்தை ஒன்றுகுவியச் செய்து வந்தார். லஸ்ஸாலினுடைய கண்ணோட்டம் "யதார்த்தத்திலே... தொழிலாளர் இயக்கம் முழுவதையும் பிரஷ்யாவுக்குக் காட்டிக்கொடுப்பதுதான்'' என்று மார்க்ஸ் கருதினார் (தொகுதி 3. பக்கம் 210). பிரஷ்யப் பெரு நிலப்பிரபுக்களுக்கும் தேசியவாதத்துக்கும் லஸ்னால் உடந்தையாக இருந்ததே இதற்குக் காரணம். பத்திரிகைகளுக்கு விடுவதற்கான ஒரு கூட்டறிக்கை விஷயமாக மார்க்ஸோடு கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் போது 1865ல் எங்கெல்ஸ் பின்வருமாறு எழுதினார்: "விவசாயமே மிகப் பெரும்பாலும் உள்ள ஒரு நாட்டில், மாபெரும் நிலப்பிரபுத்துவ வம்சத்தோரின் சாட்டையின்கீழ் கிராமப்புறப் பாட்டாளி வர்க்கம் தந்தைவழி முறையிலே சுரண்டப்படுவதைப் பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் இயந்திரத் தொழிலில் வேலை செய்யும் பாட்டாளி வர்க்கத்தின் பேரால் முதலாளி வர்க்கத்தை மட்டும் தாக்கி வருவது நீசத்தனமாகும். (தொகுதி 3, பக்கம் 217). ஜெர்மனியில் முதலாளித்துவ- ஜனநாயகப் புரட்சியை நிறைவுபடுத்தும் சகாப்தம் முடிவுக்கு வந்து கொண்டிருந்த காலத்தில், இந்தப் புரட்சியை மேலே இருந்து ஏதாவதொரு வழியில் நிறைவுபடுத்துவதற்குப் பிரஷ்யாவையும் ஆஸ்திரியாவையும் சேர்ந்த சுரண்டும் வர்க்கங்கள் போராடிக் கொண்டிருந்த சகாப்தம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கையில், அதாவது 1884ம் ஆண்டிலிருந்து 1870ம் ஆண்டு வரை, பிஸ்மார்க்குடன் குலாவிக் கொண்டிருந்த லஸ்ஸாலை மார்க்ஸ் கண்டித்ததோடு மட்டுமல்லாமல், "ஆஸ்திரிய பக்திவாதத்தின்'' பக்கமாகவும் தனித்தன்மை வாதத்தை ஆதரிப்பதின் பக்கமாகவும் சாய்ந்து கொண்டிருந்த லீப்க்னெஹ்டையும் கண்டித்துத் திருத்தினார். பில் மார்க்கையும் ஆஸ்திரிய பக்திவாதிகளையும் எதிர்த்து ஒரே மாதிரியாக ஈவிரக்கமின்றிப் போர் புரிவதற்குரிய புரட்சிகரமான போர்த்தந்திரத்தை மார்க்ஸ் கோரினார்: "வெற்றி வீரனான" பிரஷ்ய நிலப்பிரபுத்துவத்துக்கு வேண்டிய மாதிரி அமைந்திராமல், அதற்குப் பதிலாகப் பிரஷ்ய ராணுவ வெற்றிகள் உண்டாக்கித் தந்த அடிப்படையிலே அவர்களை எதிர்த்து உடனடியாகப் புரட்சிப் போராட்டத்தை மீண்டும் நடத்துவதற்கேற்ற போர்த்தந்திரத்தையே மார்க்ஸ் கோரினார். (கடிதப் போக்குவரத்து, தொகுதி 3. பக்கங்கள் 134, 136, 147, 179, 204, 210, 215, 418, 437, 440- 441.) அகிலத்தின் 1870 செப்டம்பர் 9ம் தேதிய பெயர் பெற்ற அறிக்கையில், காலப் பொருத்தமற்ற எழுச்சியைச் செய்யக்கூடாது என்று பிரெஞ்சுப் பாட்டாளி வர்க்கத்தை மார்க்ஸ் எச்சரித்தார்; ஆனால், அவர் சொல்லியிருந்த போதிலும் 1871ல் எழுச்சி நடைபெற்ற போது "விண்ணைச் சாடுகின்ற" மக்களின் புரட்சிகரமான முன்முயற்சியை மார்க்ஸ் உற்சாகத்தோடு கொண்டாடி வரவேற்றார் (குகல்மனுக்கு மார்க்ஸ் எழுதிய கடிதம்). இந்த நிலைமையிலும் சரி. இதர பல நிலைமைகளிலும் சரி, மார்க்ஸிய இயக்கவியல் வகைப்பட்ட பொருள்முதல்வாதத்தின் நிலையில் நின்று பார்க்கும் போது, ஏற்கெனவே கைப்பற்றியிருந்த நிலையைக் கை விடுவதைவிட, போராடாமலே சரணாகதி அடைவதைவிட, புரட்சிகரமான செயல் தோல்வியடைவதானது பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் பொதுவான போக்குக்கும் இறுதி விளைவுக்கும் குறைந்த தீங்கேயாகும். அப்படிப்பட்ட சரணாகதி பாட்டாளி வர்க்கத்தின் உறுதியைக் குலைத்திருக்கும். அதன் போர்த்திறனைப் பலவீனப்படுத்தியிருக்கும். அரசியல் தேக்கம் நிலவி முதலாளித்துவச் சட்டக் கட்டுப்பாடு மேலோங்கியிருக்கும்படியான காலப்பகுதிகளில் சட்டபூர்வமான போராட்ட வழிவகைகளைப் பயன்படுத்துவதை மார்க்ஸ் பூர்ணமாக உணர்ந்து கொண்டு, தனிப்பட்ட சோஷலிஸ்டு - எதிர்ப்புச் சட்டம்  அமுலுக்கு வந்த பிறகு, 1877- 1878 ஆண்டுகளில் மோஸ்த் என்பவருடைய "புரட்சிகரமான சொல்லடுக்குகளைத்'' தீவிரமாகக் கண்டித்தார்; ஆனால், அதைவிடத் தீவிரமாயில்லாவிட்டாலும் அதற்கு எந்த விதத்திலும் குறைச்சலில்லாத தீவிரத்துடன் அதிகார பூர்வமான சமூக-ஜனநாயகக் கட்சியில் தற்காலிகமாக ஆதிக்கம் பெற்றிருந்த சந்தர்ப்பவாதத்தையும் மார்க்ஸ் கண்டித்தார்; ஏனெனில் சோஷலிஸ்டு- எதிர்ப்புச் சட்டத்துக்குப் பதிலளிக்கும் முறையில், அந்தக் கட்சி உடனே மனோதிடத்தையும், உறுதியையும், புரட்சிகரமான உணர்ச்சியையும், சட்டவிரோதமான போராட்டத்தில் இறங்குவதற்குத் தயாராயிருக்கும் போக்கையும் வெளிப்படுத்தவில்லை. (கடிதப் போக்குவரத்து, தொகுதி 4, பக்கங்கள் 397, 404, 418. 422, 424; சோர்கே என்பவருக்கு எழுதிய கடிதங்களையும் பார்க்க.)

1914 ஜூலை-நவம்பரில் எழுதப் பெற்றது

நூல் திரட்டு தொகுதி 26, பக்கங்கள் 43-81

(முற்றும்)