நூல் அறிமுகம்: பனிப்போர் என்றால் என்ன ?

சமரன்

நூல் அறிமுகம்: பனிப்போர் என்றால் என்ன ?

பனிப்போர் என்பது ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையில் நடக்கும் மறுபங்கீட்டிற்கான போரையே குறிக்கிறது. இது புதிய காலனிய வடிவிலான யுத்தவடிவம் ஆகும். உலக மறுபங்கீடு மற்றும் மேலாதிக்கத்திற்காக ஏகாதிபத்திய நாடுகள் தமது சார்பு மற்றும் ஒடுக்கப்பட்ட காலனிய நாட்டு ஆளும் வர்க்கங்களை பதிலிப்போரில் ஈடுபடுத்தும் மறைமுக யுத்தமாகும். ஒரு ஏகாதிபத்திய முகாம் தனது காலனிய / சார்பு நாட்டு ஆளும் வர்க்கத்தை பதிலிப்போரில் ஈடுபடுத்தும்போது, போட்டி முகாம் நேரடியான யுத்தத்தில் ஈடுபடுகிறது. அது பிராந்தியப் போர் எனும் வடிவில் துவங்கி வளர்கிறது. அது ஒரு நீண்ட எதிர்புரட்சிகர பிராந்திய யுத்தமாக நீடிக்கிறது. இது உலகப்போரின் துவக்கமாகவும் அதற்கான தயாரிப்புக் கட்டமாகவும் உள்ளது. அப்போர் உலகப் போராக வெடிக்கலாம். அல்லது பிராந்தியப் போராகவே நீடித்து முடிவிற்கு வரலாம். முதல் பனிப்போர் இவ்வாறே ஆப்கன், லிபியா, இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் 20 ஆண்டுகளாக நீடித்தது. தற்போது உக்ரைன் யுத்தம் 2 ஆண்டுகளாக நீடிக்கிறது. ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையில் நடக்கும் அமைதி வழியிலான புதியகாலனிய மறுபங்கீடு அதாவது சந்தைக்கான போட்டியை பனிப்போர் என சொல்வது தவறாகும். பனிப்போர் என்பது இராணுவ வடிவிலான யுத்தத்தையே குறிக்கிறது. சந்தைக்கான அமைதி வழியிலான போட்டி ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் எப்போதும் அதாவது ஏகாதிபத்தியங்கள் நீடிக்கும் வரை இருக்கும் என்பதால் அதை பனிப்போர் என சொல்வது தவறாகும். சோசலிச நாட்டிற்கும் ஏகாதிபத்திய நாட்டிற்கும் இடையில் நடக்கும் போர் சோசலிச முகாமை காப்பதற்கான நீதி யுத்தமாகும். ஆனால் பனிப்போர் என்பது ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான அநீதி யுத்தமாகும். எனவே சோசலிசத்தை காப்பதற்கான நீதி யுத்தத்தை பனிப்போர் என சொல்வது முதலாளித்துவ கருத்தாகும். சோஷலிசத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான தத்துவ போர் மற்றும் ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான வர்த்தகப் போரை பனிப்போர் என்று கூறுவதும் முதலாளித்துவ கருத்தேயாகும்.

பனிப்போர் என்பது ஏஎம்கே 2018 -ம் ஆண்டு முன்வைத்த கருத்தாகும். அதையே நாம் உயர்த்திப் பிடிக்கிறோம். அதாவது ஏஎம்கே மறைவிற்குப் பிறகு நாம் உருவாக்கிய நிலைபாடு அல்ல. ஆனால் தோழர் பிரபா "உங்கள் நிலைபாட்டிற்கு ஏஎம்கேவைத் துணைக்கு அழைக்காதீர்கள்" என்கிறார். இது உண்மைக்கு மாறானதாகும். அமெரிக்க, ரசிய, சீன ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையில் பனிப்போர் துவங்கிவிட்டது என்று 2018ம் ஆண்டு மே தின பிரசுரத்தில் தோழர் ஏஎம்கே முன்வைத்துள்ளார். அப்போது பிரபா கேள்வி எழுப்பவில்லை. ஏஎம்கே மறைவிற்குப் பிறகு மனோகரன் வெனிசுலா பிரச்சினையில் பனிப்போர் இல்லை என்றும், சீனாவைச் சார்ந்து நின்று அமெரிக்காவை எதிர்த்து பேச வேண்டும் என்றும் கூறியபோது, அப்போதும் பிரபா இது குறித்து கேள்வி எழுப்பவில்லை. மாறாக மனோகரனை எதிர்த்தப் போராட்டத்தில் உறுதியுடன் நின்று போராடினார். ஆனால் தற்போது 'பனிப்போர்' என்பது மா-லெ கருத்தல்ல என்கிறார். இதன் மூலம் மனோகரனின் பனிப்போர் குறித்த திருத்தல்வாத கருத்தையே தற்போது முன்வைக்கிறார். 

'பனிப்போர்' பற்றி 2018 மஜஇக மேதின பிரசுரத்தில் பனிப்போர் துவங்கிவிட்டது எனும் தலைப்பில் ஏஎம்கே கூறுவதாவது:

"அமெரிக்க ஏகாதிபத்தியம் பலமாக இருந்தாலும் இராணுவ ரீதியில் பொருளாதார ரீதியில் சரிந்து வருகிறது. அதன் ஆண்டு வர்த்தகப் பற்றாக்குறை 568 பில்லியன் டாலர்களாகும். வீழ்ந்து வரும் அமெரிக்காவிற்குப் போட்டியாக ரசிய, சீன ஏகாதிபத்திய நாடுகள் வளர்ந்து வருகின்றன. அமெரிக்கா சீனா மீது வர்த்தக போரைத் துவக்கியுள்ளது. தவிர்க்க முடியாமல் இரண்டு ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையில் செல்வாக்கு மண்டலங்களுக்காகப் போராடுகின்றன. இதுவே 2-வது பனிப்போரின் அடிப்படையாகும்" என்கிறார் ஏஎம்கே.

ஆனால் தோழர் பிரபா பனிப்போர் இல்லை எனவும் இது அமைதியான காலகட்டம் எனவும் கூறுகிறார். மட்டுமின்றி ஏகாதிபத்திய நாடுகள் இரு முகாம்களாக பிரிந்திருக்கவில்லை எனவும், பல் துருவ ஒழுங்கமைப்பு எனவும் கூறுகிறார்.

ஒற்றை துருவ ஒழுங்கமைப்பு என்பது ஒரு ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கத்தைக் குறிக்கிறது. பல்துருவ ஒழுங்கமைப்பு என்பது ஒன்றுக்கு மேற்பட்ட ஏகாதிபத்திய நாடுகளின் உலக மேலாதிக்கத்தைக் குறிக்கிறது. எனவே சீன-ரசிய ஏகாதிபத்திய நாடுகள் முன்வைக்கும் பல்துருவ ஒழுங்கமைப்பு என்பது ஒன்றும் முற்போக்கானது அல்ல; ஒற்றை துருவ மேலாதிக்கத்திற்கு மாற்றும் அல்ல. அது அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு எதிராக தங்களது மேலாதிக்கத்தை நிறுவுவதே ஆகும்.

பிரபா, ஏகாதிபத்திய நாடுகள் இரு முகாம்களாகப் பிரிந்திருக்கவில்லை என்கிறார். அவ்வாறு கூறுவது ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளை மூடி மறைப்பதாகும் என்கிறார். ஆனால் அவரே அமெரிக்கா தலைமையில் ஒற்றைத் துருவ உலக மேலாதிக்கம் உருவாகியிருந்தது என்கிறார். உண்மையில் இவ்வாறு கூறுவதுதான் ஏகாதிபத்திய முரண்களை மூடி மறைப்பதாகும். காவுத்ஸ்கியின் அதீத ஏகாதிபத்திய திருத்தல்வாத கருத்தாகும். நமது அமைப்பு அமெரிக்கா உலக மேலாதிக்கத்திற்கு முயற்சி செய்கிறது என்றுதான் கூறியுள்ளதே ஒழிய, உருவாகிவிட்டது என்று கூறவில்லை. அமெரிக்கா தலைமையில் ஒற்றை துருவ உலக அரசு உருவாகிவிட்டது; எனவே தனிநாட்டில் புரட்சி சாத்தியமில்லை என்று நேபாளப் புரட்சியைக் காட்டிக் கொடுத்த பிரசண்டாவின் நிலைபாடு காவுத்ஸ்கியின் அதீத ஏகாதிபத்திய திருத்தல்வாத நிலைபாடு என்று நாம் பிரசண்டாவின் கலைப்பு வாதம் பற்றிய நூலில் விமர்சித்து எழுதியுள்ளோம். சீன-இரசிய முகாம் போட்டிக்கு வராதவரை அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய முகாமிற்கும் முரண்பாடுகள் நிலவியே வந்தன.

பனிப்போர் துவங்கியுள்ளது குறித்தும், இந்த பனிப்போர் அமெரிக்க முகாம், சீன-இரசிய முகாம்களுக்கிடையில் துவங்கியுள்ளது குறித்தும் 2018 மேதின பிரசுரத்தில் (மஜஇக) ஏஎம்கே. குறிப்பிட்டுள்ளார் என முன்பே பார்த்தோம். இது குறித்து 2015 மேதின பிரசுரத்திலும் (மஜஇக) கூறப்பட்டுள்ளது. அதில் ஏஎம்கே கூறுவதாவது: "உலகை மறுபங்கீடு செய்வதற்காக அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய அணிக்கும், ரசிய-சீன ஏகாதிபத்திய அணிக்கும் இடையிலான போட்டி தீவிரமடைகின்றது". 2015-க்கு முன்பாகவே, 2008ம் ஆண்டு அமெரிக்க அணிக்கும் ஷாங்காய் அணிக்கும் (சீன-இரசிய) இடையிலான செல்வாக்கு மண்டலங்களுக்கான போட்டிக்களமாக இலங்கையை மாற்ற அனுமதியோம்! என்ற முழக்கத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தோம்.

எனவே பனிப்போர் துவங்கியுள்ளது என்பதும், இரு ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையில் துவங்கியுள்ளது என்பதும் ஏ எம் கே முன்வைத்த நிலைப்பாடாகும். தோழர் இருக்கும்போது இதுகுறித்து பிரபா கேள்வி எழுப்பவில்லை. ஆனால் அவரின் மறைவிற்குப் பிறகு கேள்வி எழுப்புகிறார்.

பனிப்போர் என்பது ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான மறுபங்கீட்டிற்கான போராகும். அமெரிக்காவிற்கும் சோசலிச ரசியாவிற்கும் இடையிலோ அல்லது சோசலிச ரசியாவிற்கும் ஜெர்மனி ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலோ இருந்த அரசியல் முரண்பாட்டைப் பனிப்போர் என்று கூறிய முதலாளித்துவ வாதிகளின் கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லை. முதலாவது பனிப்போர் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் நடந்தது. இது குறித்தும் ஏஎம்கே. கூறியுள்ளார்.பனிப்போர் என்றால் என்ன ?

பனிப்போர் என்பது ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான மறுபங்கீட்டிற்கான போராகும். அமெரிக்காவிற்கும் சோசலிச ரசியாவிற்கும் இடையிலோ அல்லது சோசலிச ரaசியாவிற்கும் ஜெர்மனி ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலோ இருந்த அரசியல் முரண்பாட்டைப் பனிப்போர் என்று கூறிய முதலாளித்துவ வாதிகளின் கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லை. முதலாவது பனிப்போர் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் நடந்தது. இது குறித்தும் ஏஎம்கே. கூறியுள்ளார்.

தொடர்ந்து விரிவாக படிக்கவும்

“பனிப்போர் - பாசிசம்: அரசியல் மற்றும் செயல்தந்திரத் துறையில் கலைப்புவாதம்”  நூலில்...

- சமரன்

நூலினை பெற தொடர்பு கொள்ளவும்: 

90953 65292

சென்னை புத்தக காட்சியிலும் (அரங்கு எண் 535 - புது உலகம்) கிடைக்கிறது.