கரும்பு விவசாயிகளை கைது செய்த திராவிடமாடல் தி.மு.க அரசு!
செந்தளம் செய்திப்பிரிவு
கரும்பு விவசாயிகளை கைது செய்த திராவிடமாடல் தி.மு.க அரசு!
ஸ்டாலின் அரசே விவசாயிகளை ஏமாற்றாதே!ஒடுக்குமுறையை ஏவாதே!
கிட்டதட்ட 7000 விவசாயிகளை ஏமாற்றி பெரும் மோசடியில் ஈடுபட்ட திரு ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு எதிரான போராட்டம் கடந்த அ.தி.மு.க ஆட்சியிலிருந்து நடந்து வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் இருக்கிறது இந்த ஆரூரான் சர்க்கரை ஆலை.
அதிமுக ஆட்சியின் போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆலை அரசுடைமை ஆக்கப்பட்டு பிரச்சனை தீர்க்கப்படும் என்று சொன்ன ஸ்டாலின், தான் ஆட்சிக்கு வந்ததும் ஆலையை மதுபாண தொழில் செய்யும் கால்ஸ் நிறுவன தனது கட்சிக்காரர் கைக்கு கொண்டு சேர்த்ததுதான் நடந்தது.(திரைமறைவில் இது கணிமொழியால் வாங்கப்பட்டது.கனிமொழியின் சொத்தாகும்)
திமுக ஆட்சிக்கு வந்ததுமே கால்ஸ் நிறுவனம்அடிமாட்டு விலைக்கும் மோசமான விலைக்கு ஆரூரான் சர்க்கரை ஆலையை கைப்பற்றியது.சுமார் 1000 கோடி மதிப்புள்ள சொத்தினை வெறும் 140 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
ஆலையை அரசே ஏற்று நடத்தும் என்ற பொய்யான வாக்குறுதியை தந்து விவசாயிகளை ஏமாற்றி ஓட்டு வாங்கிய திமுக ஸ்டாலின் அரசை கண்டித்தும், கால்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக அவசர அவசரமாக கரும்பு பதிவு உத்தரவு கொடுத்ததை எதிர்த்தும், சிபில் பிரச்சினையிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும் எனவும் 2022ஆண்டிலிருந்து தொடர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர் .
ஆருரான் கரும்பாலை மொலாசஸிலிருந்து சாராயம் மட்டுமே தயாரிப்பது என்ற நோக்கில் மாற்றப்பட்டது.எரிசாராய தயாரிப்பிற்காக மொலாசஸ் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரிகளையும் மறித்து விவசாயிகள் சிலமாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நானும் டெல்டாக்காரன்தான் என்று பேசிக்கொண்டு டெல்டா விவசாயிகளை குரல்வளையை நெறிக்கும் ஸ்டாலினுக்கு எதிராக டெல்டா விவசாயிகள் கொதித்துப்போயுள்ளனர்.இந்நிலையில்
திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை முழுவதையும் புதிய நிர்வாகம் வட்டியுடன் வழங்க வேண்டும்.
தங்களின் பெயரில் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்து, சிபில் ஸ்கோர் பிரச்சினையில் இருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும்,
திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், சாராயம் தயாரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் இன்று மதியம் ஜனவரி 28 மாநாட்டிற்காக தஞ்சாவூரிலிருந்து கும்பகோணத்திற்கு வாகனத்தில் சென்றார் ஸ்டாலின். அப்போது கரும்பு விவசாயிகள், சாலையோரம் வந்து நின்று கருப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பை ஸ்டாலினுக்கு தெரிவித்தனர்.
இவ்வாறு கருப்பு கொடிகாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட 8 விவசாயிகளை திராவிடமாடல் தி.மு.க கைது செய்திருக்கிறது.
தி.மு.க அரசின் விவசாயிகளுக்கு எதிரான போக்கினை கண்டிப்போம்!திருமண்டங்குடி கரும்பு விவசாயிகளுக்காக அனைவரும் குரல்கொடுப்போம்!
- செந்தளம் செய்திப் பிரிவு