கவிதை: நேர்பட நின்ற வ.உ.சி...!
துரை.சண்முகம்
நவம்பர் 18 - வ.உ.சி. நினைவு நாள்.
சுதேசி
என்பது
சொந்தத்
தொழில் அல்ல.
சுதந்திர உணர்ச்சி!
சுயமரியாதை!
என,
துணிந்து காட்டியவர்
வ.உ.சி.
தேசத்தின்
மானம்
கப்பலேறிய போது
தன்மானக் கப்பலில்
தேசத்தின்
விடுதலை உணர்ச்சியை
ஏற்றிய வீரர்.
தொழிலாளர் இயக்கப்
போராளி..
தமிழ் ஆய்ந்த படைப்பாளி..
வழக்குரைஞர்..
தேச விடுதலைப் போரின்
மாசிலா
தென்னகத்து முன்னறிஞர்.
அடக்குமுறை
ஆயுள்தண்டனை
செக்கிழுத்த கொடுமை
வாழ்வழித்த வறுமை..
அனைத்தையும்
தாங்கி நின்று,
போராட்ட
வாழ்வளித்த
பெருமை
வ.உ.சி.!
பல
கிழக்கிந்தியக் கம்பெனிகள்
நாலாபுறமும்
நாட்டையே
கிழிக்கும்
இந்தத் தருணத்தில்...
நெஞ்சில்
தைக்க
வேண்டிய
உயிர்மை.
நேர்பட
நின்ற
வ.உ.சி...!
- துரை.சண்முகம்
https://www.facebook.com/100080904177819/posts/869067245800073/?rdid=u7Ngeupx3MZaXJXx