பாடல்: ஏஎம்கே நினைவை ஏந்தி... புரட்சி தீபம் ஏற்றுவாம்…
மக்கள் கலைமன்றம்

புரட்சியாளர் ஏஎம்கே
நினைவை நெஞ்சில் ஏந்துவோம்…
ஏஎம்கே நினைவை ஏந்தி
புரட்சி தீபம் ஏற்றுவாம்…
(புரட்சியாளர் ஏஎம்கே)
இடது வலது விலகல் போக்கை
லெப்ட் ரைட் வாங்கினார்…
இருளை நீக்கி மார்க்ஸியத்தின்
ஒளியை இங்கு ஏற்றினார்…
புரட்சிக்காக தியாகம் செய்து
எந்திரம் போல் உழைத்திட்டார்...
போர் தந்திரங்கள் தீட்டி - செயல்
தந்திரங்கள் வகுத்திட்டார்…
(புரட்சியாளர் ஏஎம்கே)
கலைப்புவாத களைகளை- கதிர்
அரிவாள் கொண்டு வெட்டினார்…
எஃகு கோட்டை கட்சியாக
போல்ஷ்விக்கை கட்டினார் ...
மார்க்ஸியத்தின் வழியில் நின்று
போர் முரசு கொட்டினார்…
வர்க்கப் போரில் ஊன்றி நின்று
புரட்சித் தீயை மூட்டினார்...
(புரட்சியாளர் ஏஎம்கே)
உழைக்கும் மக்கள் தலைநிமிர
தலைமறைவாய் வாழ்ந்திட்டார்...
உரிமையற்ற தலைமுறைக்கு
தலைமை தாங்கி செயல்பட்டார்...
சமரன் மூலம் மக்களுக்கு
வர்க்க உணர்வை ஊட்டினார்…
சமரசமே இல்லாமல் சமர்புரிந்து காட்டினார்...
(புரட்சியாளர் ஏஎம்கே)
சாதித் தீண்டாமை கொடுமை
இழிவு கண்டு சிவந்திட்டார்…
இந்தியாவை ஆய்வு செய்து
காரணங்கள் அறிந்திட்டார்…
நிலவுடைமை ஒழிப்பு ஒன்றே
தீர்வு என்று கூறினார்…
நிலவுகின்ற அரசமைப்பை
எதிர்த்து நின்று சீறினார்…
(புரட்சியாளர் ஏஎம்கே)
புதிய காலனி ஆதிக்கத்தை
புரட்டி எடுத்து போடவே…
புயலாக புறப்பட்டார்
புதுவழியில் ஏஎம்கே...
இந்திய புரட்சி வானில்
விடிவெள்ளி ஏஎம்கே…
உலகிற்கே வழிகாட்டி
ஜொலிக்கின்றார் ஏஎம்கே...
(புரட்சியாளர் ஏஎம்கே)
நித்தம் நித்தம் யுத்தம் செய்து
மக்கள் ரத்தம் குடித்திடும்…
ஏகாதிபத்திய ஓநாய்களின்
முகத்திரையை கிழித்திட்டார்…
உள்நாட்டு யுத்தக் கொள்கை
சூத்திரத்தை தீட்டினார்…
உலக பாட்டாளி வர்க்கத் தலைமை
பாத்திரத்தை ஆற்றினார்…
(புரட்சியாளர் ஏஎம்கே)
பாதுகாப்போம் பாதுகாப்போம்
ஏஎம்கே கொள்கையை…
வெற்றி கொள்வோம் வெற்றி கொள்வோம்
மார்க்ஸியத்தின் வழியிலே…
(பாதுகாப்போம்)