அரசு ஊழியர்கள் மீது விடியல் அரசின் அடுத்த தாக்குதல்

cheran vanjinathan

அரசு ஊழியர்கள் மீது விடியல் அரசின் அடுத்த தாக்குதல்

காப்பீட்டு திட்டத்தில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் குறை தீர்க்கும் அலுவலரான ( Grievance redressal officer ) இணை இயக்குநர் (மருத்துவ பணிகள் ) அவர்களிடம்  30 நாட்களில் முறையீடு செய்ய வேண்டும்.

அம்முறையீட்டை ஆய்வு செய்து  30 நாட்களுக்குள் குறை தீர்க்கும் அலுவலர் தனது பரிந்துரையை... மாவட்ட ஆட்சியரின் தலைமையிலான மாவட்ட அளவிளான அதிகாரமளிக்கும் குழுவுக்கு சமர்பிக்க வேண்டும். மாவட்ட அதிகாரமளிக்கும் குழு முறையீடு தொடர்பாக இறுதி ஆணை வெளியிடும்.

என...  அரசாணை 160 தெரிவிக்கிறது.

---------------------------------------------------

அரசாணைக்கு புறம்பாக, அரசாணையை செல்லாததாக மாற்றும் வகையில்... பாதிக்கப்பட்ட அரசு ஊழியரின் முறையீட்டை குறை தீர்க்கும் அலுவலருக்கு, (JD Medical ) அனுப்புவதற்கு மாறாக... காப்பீட்டு நிறுவனத்திற்கு கருவூலக அலுவலர்கள் நேரடியாக அனுப்ப வேண்டும் என்று நிதி துறை செயலாளர் கடிதம் வெளியிட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட காப்பீட்டு நிறுவனமே முறையீட்டு கடிதம் தொடர்பாக... விசாரித்து முடிவு  எடுப்பார்கள் என நிதி துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

--------------------------------------------------

கருவூலக ஆணையாளரின் முன்மொழிவை ஏற்று நிதித் துறை செயலாளர் கடிதம் வெளியிட்டுள்ளார். ( அரசு கடித எண் 30465 / நிதி துறை (H1 ) / 2022 நாள் 17.9.22 )

பாதிக்கப்பட்ட அரசு ஊழியரின் முறையீட்டை இனி நேரடியாக காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும்,  காப்பீட்டு நிறுவனம் 30 நாட்களில் முடிவு எடுக்க வேண்டும் என்றும்., காப்பீட்டு நிறுவனம் முறையீட்டை நிராகரித்தால் தனியர் குறை தீர்க்கும் அலுவலரிடம் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் நிதித் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

--------------------------------------------------

விடியல் அரசால் வெளியிடப்பட்ட அரசாணை எண் 160 நிதித் துறை, நாள்: 30.6.21 ல் உள்ள, அரசு ஊழியர்கள் நலனை பாதுகாக்கும் அம்சங்களை செல்லாததாக்கும் பணி... விடியல் அரசின் நிதித் துறை செயலாளரின் கடிதம் மூலம் செய்யப்பட்டுள்ளது.

காப்பீட்டு திட்டத்தில் ஏற்படும் பிரச்சனை அனைத்தும்.. காப்பீட்டு நிறுவனம் செய்யும் மோசடியால் ஏற்படுகிறது.

--------------------------------------------------

கட்டணம் இல்லா சிகிச்சை என அரசு அறிவித்தது. ஆனால்... Package அடிப்படையில் தான் காப்பீட்டுத் தொகை வழங்க முடியும் என்று காப்பீட்டு நிறுவனம் வெளிப்படையாக செயல்படுகிறது.

--------------------------------------------------

கர்பப்பை அகற்றும் சிகிச்சைக்கு ரூ.50,000/- எனவும், கண் புரை அறுவை சிகிச்சைக்கு ரூ .30000/- எனவும்...  இரண்டு சிகிச்சைக்கு மட்டும் தமிழக அரசு Package அறிவித்துள்ளது.

கர்பப்பை அகற்றும் சிகிச்சைக்கு ரூ.50,000/- க்கு பதில் ரூ.40,000/- மும், கண்புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.30,000/- க்கு பதில் ரூ.21,000/- மட்டுமே காப்பீட்டு நிறுவனம் வழங்குகிறது.

காப்பீட்டு நிறுவனம் செய்யும் மோசடி தொடர்பாக ஏராளமான புகார்கள் அளித்தும், காப்பீட்டு நிறுவனத்தின் மீது மிகச் சிறிய நடவடிக்கை கூட நிதித் துறை செயலாளர் இன்று வரை எடுக்கவில்லை.

-------------------------------------------------------

பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் நேரடியாக காப்பீட்டு நிறுவனத்திடம் முறையீடு செய்ய வேண்டும். பணத்தை, திருடிய திருடனிடமே...  பணத்தை திருப்பி  வழங்கக் கோரி முறையீடு அளிக்க வேண்டும். திருடிய பணத்தை வழங்க இயலாது என்று திருடன் கூறிய பின்பு குறை தீர்க்கும் அலுவலரிடம் முறையிட வேண்டுமாம்.

இது தான் விடியல் அரசின் திராவிட மாடலா?

-------------------------------------------------------

காப்பீட்டுத் திட்டத்தில் வலுக்கட்டாயமாக அரசு ஊழியர்களை தமிழக அரசு இணைத்து விட்டுள்ளது. அரசு ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து காப்பீட்டு சந்தாவை கருவூலத்துறை பிடித்து காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்துகிறது.

சந்தா பிடித்தம் செய்யும் தமிழக அரசு..., காப்பீட்டு நிறுவனத்தால் பாதிப்பு என்றால்.. தலையிட வேண்டிய தமிழக அரசு...  தனது பொறுப்பை தட்டி கழிப்பது அயோக்கியத்தனம்.

-------------------------------------------------------

உயர் அலுவலர்கள் செய்யும் தவறான நடவடிக்கைகளை விடியல் அரசு கண்மூடித் தனமாக ஆதரித்தால்... பாதிப்பு உயர் அலுவலர்களுக்கு இல்லை. பாதிப்பு விடியல் அரசுக்கு என்பதை தமிழக முதல்வரான திமுக தலைவர் உணர வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு எதிராகவும், காப்பீட்டு நிறுவனத்தின் மோசடிக்கு ஆதரவாகவும் நிதித் துறை செயலாளர் வெளியிட்ட கடிதத்தை தமிழக முதல்வர் உடனே திரும்ப பெற உத்திரவிட வேண்டும்.

- cheran vanjinathan

(முகநூலிலிருந்து)

கட்டுரையாளரின்  முகநூல் பக்கத்திற்கு செல்ல கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்

https://www.facebook.com/100002299824467/posts/pfbid0cAsHuxinrXvsAPvgM7A3xHZEnaor5Q9LDfpNp1Az25ywDEaoToABVmdv5hMbxv1yl/?app=fbl

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு