நம்பிக்கை மையங்களை மூடும் முடிவை கைவிடு!
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் போராட்ட தீர்மானங்கள்
அன்பிற்கினிய தோழர்களுக்கு வணக்கம்,
நேற்று (12-7-23) திருவண்ணாமலை மாவட்ட சங்கத்தின் போராட்ட தாயரிப்பு கூட்டம் நடைபெற்றது .
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன...
1) *TANSACS - நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஏற்றுகொண்டபடி* அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
2) *மறுசீரமைப்பு* என்ற பெயரில் நம்பிக்கை மையங்களை மூட மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையை *பொது மக்கள் நலன் கருதி திரும்ப பெற வேண்டும்* என தீர்மானிக்கப்பட்டது.
3) நம்பிக்கை மையங்களை மூடும் முடிவை மத்திய அரசு *கைவிட கோரி தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்* என தீர்மானிக்கப்பட்டது.
4) 19&20 -7-23 தேதிகளில் சென்னையில் அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கும் நிகழ்விற்கு *திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு பேர்* கலந்துகொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
5) *26-7-23 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்* நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
6) 17-8-23 அன்று சென்னை TANSACS- அலுவலகத்தில் நடைபெறும் *பெருந்திரள் முறையீடு போராட்டத்தில்* பேருந்தில் செல்வது என தீர்மானிக்கப்பட்டது.
7) 15 ஆம் தேதிக்குள் மாநில மையம் நிர்ணயித்துள்ள *தலா ரூ.200 தொகையை* வழங்கிட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
8) திருவண்ணாமலை நகரில் நகர்புற சுகாதார மையம், காசநோய் மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையங்களை மூடும் முடிவை பொதுமக்களின் நலன் கருதி கைவிட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட பொருளாளர் இலட்சுமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சேரலாதன் கலந்து கொண்டு 9-7-23 அன்று கரூரில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட மூன்று கட்ட போராட்ட தீர்மானங்களை விளக்கி பேசினார். இறுதியாக கோபி அனைவருக்கும் நன்றி கூறினார்.
மாவட்ட மையம்
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம்
- சேரன் வாஞ்சிநாதன்
(முகநூலில்)