ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கான போராட்ட அறிவிப்பு கடிதம்
சேரன் வாஞ்சிநாதன்

*கடித எண்:042/TNACAEWA/2023 Dated:5-4-23*
பெறுதல்,
1) *அரசு முதன்மை செயலாளர் அவர்கள்,*
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை,
தலைமை செயலகம்,
சென்னை -9
2) *திட்ட இயக்குனர் அவர்கள்,*
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம்,
எழும்பூர், சென்னை -8
3) *திட்ட இயக்குனர் அவர்கள்,*
தேசிய சுகாதார குழுமம் ( NHM)
DMS வாளகம்,தேனாம்பேட்டை,
சென்னை -6
4) *இயக்குனர் அவர்கள்*,
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புதுறை இயக்குனரகம்,
DMS வாளகம்,
தேனாம் பேட்டை,
சென்னை - 6
மதிப்பிற்குரிய அய்யா வணக்கம்,
*பொருள்:தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் வழங்கிட கோரி 13-4-23 அன்று சென்னை TANSACS- அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்துவது குறித்து:-*
*பார்வை: File No:A- 11011/12/2022/NACO (HR) Dated:3-8-2022 & 21-10-2022*
பார்வையில் உள்ளபடி தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு NACP (V ) திட்டத்தின் படி 10% ஊதிய மாற்றத்தை (Pay revision) தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் அறித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் ( TANSACS) அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை,அரசு மருத்துவமனை மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி (ESI) மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் 10 % ஊதிய மாற்றத்தை 2022-நவம்பர் மாதம் அமல்படுத்தி உள்ளார்கள்.
*ஆனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் 400 நம்பிக்கை மையங்களில் பணிபுரியும் 800 ஆலோசகர் ,ஆய்வக நுட்புனர்களுக்கு 10% ஊதிய மாற்றம் இதுவரை அமல்படுத்தவில்லை*.
*ஒரே திட்டத்தின் கீழ் ஒரே வகையான பணிகளை செய்யும் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றத்தில் பாரபட்சமான அணுகுமுறையை கடைப்பிடிப்பது* ஊழியர்கள் மத்தியில் மன உளச்சளையும்,மன வேதனையும் ஏற்படுத்தி வருகிறது. இப்பிரச்சனை குறித்து நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் தீர்வு ஏற்படவில்லை.
எனவே எங்கள் சங்கத்தின் மாநில செயற்குழுவின் முடிவின்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு NACO - வின் ஆணைப்படி 10% ஊதிய மாற்றத்தை அமல்படுத்திட வலியுறுத்தி...
*நோயாளிகளின் அன்றாட மருத்துவ சேவையில் பாதிப்பு ஏற்படாத வகையில்*
13-4-23 அன்று சென்னை TANSACS- தலைமை அலுவலகத்தில் மாநில,மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ளும் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்த *திட்டமிட்டுள்ளோம்* என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி
நம்பிக்கையுடன்
(மு.ஜெயந்தி), மாநில தலைவர்
(மா.சேரலாதன்), மாநில பொதுச்செயலாளர்
நகல்:
1) *தொழிலாளர் ஆணையர் அவர்கள்*,
தொழிலாளர் ஆணையரகம்,
தேனாம்பேட்டை,
சென்னை -6
2) *மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அலுவலர் அவர்கள்*,
மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அலகு, அனைத்து மாவட்டங்கள்
3) *மாவட்ட திட்ட மேலாளர்/ மாவட்ட மேற்பார்வையளார் அவர்கள்*,
மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அலகு, அனைத்து மாவட்டங்கள்
- சேரன் வாஞ்சிநாதன்
(முகநூலில்)
Disclaimer: இந்த பகுதி பதிவரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு