தமிழ்நாட்டை உத்திரப்பிரதேசம் போல கலவரக் காடாக மாற்ற தொடர்ந்து சதிகள் நடக்கின்றன

ஆனந்தன் - குணா

தமிழ்நாட்டை உத்திரப்பிரதேசம் போல கலவரக் காடாக மாற்ற தொடர்ந்து சதிகள் நடக்கின்றன

போன வாரம் தான் RN ரவி திருவண்ணாமலையில் முகாமிட்டு திருவண்ணாமலையில் அசைவ உணவகங்களை அகற்ற வேண்டும் என்று ஒரு பிரச்சனையை கிளப்பினார். 

இன்று(20.08.2023) திருவண்ணாமலையில் ஹிஜாப் பிரச்சனையை கிளம்புகிறார்கள். திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வு எழுத வந்தவரை, தேர்வு தொடங்கிய 10 நிமிடங்களில் ஹிஜாப்பை அகற்ற கூறியுள்ளனர்; அவர் ஹிஜாப்பை அகற்ற மறுத்ததால் தேர்வு அறையில் இருந்து அவரை வெளியேற்றியுள்ளனர்.. 

எப்படியாவது தமிழ்நாட்டில் மத வெறி அரசியலை கிளப்பி விட வேண்டும் என்று RSS சங்கிகள் முழுமூச்சாக வேலை செய்கிறார்கள்.. அதற்காக கிராமப்புற இளைஞர்களை குறிவைத்து தமிழ்நாடு முழுவதும் 'ஈஷா கிராமோத்சவம்' போட்டிகளை நடத்துகிறது சங்கி கும்பல். நேற்று(19.08.2023) மதுரையில் பத்திர பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி இப்போட்டிகளை தொடங்கி வைத்திருக்கிறார்.

விளையாட்டு, கலை விழாக்கள் என்ற பெயரில் மதக் கலவரங்களுக்கு ஆள் பிடிப்பது தான் RSS சங்கிகளின் நடைமுறை.. ஈஷாவின் பெயரில் அதை இங்கு செயல் படுத்துகிறார்கள். தமிழ்நாடு அரசு நிர்வாகமும் அமைச்சர்களும் RSS ஆள் சேர்க்க உறுதுணையாக செயல்படுகிறார்கள். 

திராவிட மாடல் ஆட்சி என்ற போர்வையில் தமிழ்நாட்டில் RSS சங்கிகளுக்காகத் தான் ஆட்சி நடக்கிறது என்பதற்கு மேலும் ஒரு சான்று இந்நிகழ்வு..

நம்மைப் போன்ற சாமானியர்கள் RSS- பாஜக பயங்கரவாத கும்பலை எதிர்த்துப் போராடா விட்டால் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி போன்ற சுயநல ஊழல் அரசியல்வாதிகளும் ரஜினிகாந்த் போன்ற திரை பிரபலங்களும்  தமிழ்நாட்டை RSS கலவர காட்டுமிராண்டிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு  தாங்கள் சேர்த்து வைத்துள்ள பல ஆயிரம் கோடிகளோடு செட்டிலாகி விடுவார்கள். 

எல்லா வேதனைகளையும் அனுபவிக்கப் போவது கோடிக்கணக்கான  சாமானிய மக்கள் தான். இப்படி நடந்து விடக்கூடாது  என்பதற்காகத் தான் போராடுகிறோம். 

RSS சதி கும்பலை எதிர்த்து போராடியதற்காக திமுக அரசால் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நந்தினி- நிரஞ்சனா இன்று 39 வது நாளாக சிறையில்  உள்ளனர்.

தமிழ்நாட்டை உத்திரப்பிரதேசம் போல கலவரக் காடாக மாற்ற தொடர்ந்து சதிகள் நடக்கின்றன. தமிழ்நாட்டு  மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டம்..

- ஆனந்தன், குணா

(முகநூலில்)

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02rnB4ow534Vg8kLopwTsfRkCrC5ybbqBxXPvT5zB99MEWe62AdQGZdT2QZ4ewHnnCl&id=100015114364035&mibextid=Nif5oz

Disclaimer: இந்த பகுதி பதிவாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு