பாஜகவிற்கு திமுக அணி என ஒன்றும் உள்ளது: வெல்கம் டூ 'திமுக மாடல்'!
பாஜகவிற்கு வணிகர் அணி, வழக்கறிஞர் அணி, நீதிபதி அணி என்பது போல திமுக அணி என ஒன்றும் உள்ளது போல தெரிகிறது - திருமுருகன் காந்தி
பாஜகவிற்கு வணிகர் அணி, வழக்கறிஞர் அணி, நீதிபதி அணி என்பது போல திமுக அணி என ஒன்றும் உள்ளது போல தெரிகிறது.
அர்ஜூன் சம்பத் செய்வதையெல்லாம், அமைச்சர் தலைமேல் சுமந்து செய்து கொண்டிருக்கிறார். மாணவச் செல்வங்களிடத்தில் அறிவியலுக்கு பதிலாக மூடநம்பிக்கைகளை வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கிறார் மாண்புமிகு அமைச்சர். இதுவரை காலமும் அறநிலையத்துறை அமைச்சர் என ஒருவர் இருப்பதே ஊருக்கு தெரியாமல் இருந்தது. அதை ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக்கி கொண்டிருக்கிறார் அமைச்சர்.
கூலிப்படையை வைத்து பெரியாரிஸ்டுகளை, முற்போக்காளர்களை கொலை செய்ய உதவி செய்வோம் என பகிரங்கமாக செய்தி வெளியிட்ட அர்ஜூன் சம்பத்திற்கு திமுக அரசு காவல்துறை பாதுகாப்புடன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியளித்துள்ளது.
2024 தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் அனுமதி வாங்கிக்கொடுத்த தெருமுனைக் கூட்டத்தில் பேசியதற்காக அறச்சீற்றமென்று பொங்கி வழிந்த பெரியாரிஸ்டுகள் வழக்கம் போல அமைதி காப்பார்கள்.
இது திராவிட மாடல் அல்ல.
வெல்கம் டூ 'திமுக மாடல்'!
- திருமுருகன் காந்தி (முகநூலில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு