கவிதை: மாணவர் படையாய் திரள்வோம்! இளைஞர் சக்தியாய் எழுவோம்!
தீ நா - செந்தளம்
செங்கொடி ஏந்துவோம்!
சிந்தனை வளர்ப்போம்!
மக்கள் உரிமை காப்போம்!
மாணவர் படையாய் திரள்வோம்!
இளைஞர் சக்தியாய் எழுவோம்!
உழைக்கு வர்க்கத்திற்கு தோள் கொடுப்போம்!
வாக்குரிமை மக்கள் உரிமை!
வாழ்வுரிமை உழைப்போர் உரிமை!
பறிக்க வந்தால் பணிவோமா?
பாசிசத்தை விடுவோமா?
பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்துவோம்!
புதிய ஜனநாயக உரிமைகளுக்கு
போராடுவோம்!
இந்து ராஜ்ஜியத் திரைக்குப் பின்னே
கார்ப்பரேட் கொள்ளை லாபமடா!
சொந்த மக்களைச் சந்தேகிக்கும்
ஆட்சி, மக்கள் ஆட்சியாடா!?
தேர்தல் ஆணையம் எனும் பேரில்,
ஏவல் ஆணையம் வேண்டாமே!
பெரும் ஜனநாயகம் எனும் பேரில்
பாசிச ஆட்சி வேண்டாமே!
நடுவரைத் தேர்ந்தெடுக்கும் குழுவினிலே
நீதிபதிக்கு இடமில்லை!
நடுவரே ஆட்டக்காரர் ஆனபின்னே
நடக்குமா நேர்மைத் தேர்தல் பின்னே?
2023 தேர்தல் ஆணையச் சட்டத்தை
எதிர்த்திடுவோம்!
சுயேச்சை ஆணையம் அமைத்திடுவோம்!
சுதந்திரத் தேர்தலுக்கு போராடுவோம்!
மதத்தின் பெயரில் பிரிக்காதே!
மக்களின் உரிமையைப் பறிக்காதே!
கார்ப்பரேட் ஆதிக்கம் முறியட்டும்!
குடியுரிமைப் பறிப்பு முடியட்டும்!
CAA–NRC–SIR முக்கூட்டை முறியடிப்போம்!
CAA என்றார், NRC என்றார்,
இப்போது SIR என்று வந்தார்!
முகங்கள் மூன்றாயினும், மூளை ஒன்றாகும்!
குடியுரிமையை எனும் பேரில்
மக்களை குறிவைத்தார்!
ஏழை, சிறுபான்மை, புலம்பெயர் தொழிலாளி,
இயலாத ஆவணம் கேட்டு,
உழைப்போரை நாடோடியாக்குவார்!
13 கோடி வாக்குகளைப் பறித்தெடுத்தார்
உழைக்கும் மக்கள் உரிமையை விடுவோமா?
உழைக்கும் வர்க்க ஒற்றுமையை
அடகு வைப்போமா?
கோடிக் கணக்கில் மக்கள் குரலே!
கோணல் சட்டத்தால் வாக்கு பறிப்பே!
ஒற்றைக் கட்சி ஆட்சி வேண்டாம்!
ஒடுக்குமுறை ஆட்சி நீடிக்க வேண்டாம்!
மக்கள் சக்தியால் மாற்றம் படைப்போம்!
மோடி ஆட்சியைத் தூக்கியெறிவோம்!
தமிழக தவெக ஆட்சியே
மாணவர் போராட்டத்தை ஒடுக்காதே!
மக்கள் எழுச்சியைத் தடுக்காதே!
ஜனநாயக உரிமையை மறுக்காதே!
தமிழக அடக்குமுறை
ஆட்சியைக் கண்டிப்போம்!
மக்கள் அலையென எதிர்க்கொள்வோம்!
தவெக-திமுக-அதிமுக
வேறு வேறென்று நினைக்காதே!
முக்கூட்டு சிற்றாறுகள்
பாசிச பாஜக ஆட்சியின் சிற்றோடைகள்!
தமிழக அரசியல் களத்தினிலே,
முட்டும் மூனாறுகளுமே!
பாசிச சேவை எனும்போது,
ஒன்றாய் சேர்ந்து களந்திடுமே!
போராடும் மாணவர் - இளைஞர்களை
ஒடுக்கும் தவெக ஆட்சியே!
களத்தை காண மறுக்கும்
திமுக - அதிமுகவே!
இவர்கள், துரோகத்தை இனம் காண்போம்!
சமரசத்தை முறியடிப்போம்!
வாக்குரிமைப் போரில் விலகாதே!
மக்கள் போராட்டம் மறக்காதே!
சமரசப் பாதையில் செல்லாதே!
சந்தர்ப்ப அரசியலை ஏற்காதே!
உரிமைப் போரில் ஒன்றிணைவோம்!
ஜனநாயக உரிமை வென்றிடுவோம்!
தொழிற்சாலையில் உழைப்பவன் நீ,
வயல்வெளியில் வியர்ப்பவன் நீ,
சாதி, மதம், இனம் பிரிக்கும்
சாக்கடையை துறப்பவன் நீ.
வாக்குரிமை மட்டும் போதாது,
வாழ்வுரிமையும் சேர்த்து மீட்டெடுப்போம்!
வேலை, கல்வி, உணவு, மருத்துவம்
என்று அனைத்துரிமையும்
வென்றெடுப்போம்!
சிவந்த கொடியை உயர்த்திடுவோம்!
சிதறும் சக்திகளை இணைத்திடுவோம்!
தொழிலாளர் விவசாயி ஒன்றாவோம்!
ஜனநாயகச் சக்தியுடன் அணியாவோம்!
பாசிச எதிர்ப்பில் கைகோர்ப்போம்!
பாசிசத்தை வீழ்த்த திரண்டிடுவோம்!
பாசிசத்தைத் தூக்கியெறிவோம்!
யாருக்கு வேண்டும் வாக்குரிமை?
மக்களுக்கே! மக்களுக்கே!
யாருக்கு வேண்டும் ஜனநாயகம்?
மக்களுக்கே! மக்களுக்கே!
எந்தச் சிந்தனை வழிகாட்டும்?
மார்க்சிய–லெனினிய–மாவோ
சிந்தனையே!சிந்தனையே!
- தீ நா - செந்தளம்