கவிதை: விவசாயத் தோழர்களே வெகுண்டெழுக

கதிரவன், செந்தளம்

கவிதை: விவசாயத் தோழர்களே வெகுண்டெழுக

விவசாயத் தோழர்களே வெகுண்டெழுக
வெடிகுண்டுத் திரிகளாய் முளைத்தெழுக

 

இந்நாட்டு வளங்களை
பன்னாட்டுக்கு பங்கு வைக்க
பாராளுமன்றத்தில் சட்டமா??

 

விதை மசோதா ஏனம்மா ?
வீதிக்கு வாருங்கள் வேகமா?

 

விதை நெல்ல புடுங்கி
வேட்டிய உருவி
வேட்டையாடுறான் பாரும்மா- நாம்
வேடிக்கை பார்ப்பது நியாயமா??

 

வீணர்களின்  சதி அறுக்க சங்கமிப்போம்
வர்க்கமா- உழைக்கும் வர்க்கமா

 

தொடரும்….

 

 - கதிரவன், செந்தளம்