ஆகஸ்ட் 10 அன்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி நடத்தும் நாடு தழுவிய போராட்டத்தை ஆதரிப்போம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து தாராள வர்த்தக ஒப்பந்தங்களை எதிர்த்தும், விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலையை சட்டமாக்க கோரியும்,விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும், தொழிலாளர் விரோத 4 சட்ட தொகுப்புகளை எதிர்த்தும், மினசாரத்துறையை தனியார்மயமாக்கும் மசோதா 2025, விதை மசோதா 2025 மற்றும் உணவு பாதுகாப்பு சட்டதிருத்த மசோதாவை எதிர்த்தும், கட்டாய நில அபகரிப்பு மற்றும் கார்ப்பரேட் நிலக்குவியலை எதிர்த்தும் ஆகஸ்ட் 10 அன்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி நாடுதழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது.
படிக்கவும்: விவசாயிகள் போராட்டமும் கோரிக்கைகளும் - தீர்வு என்ன?
நாடுதழுவிய அளவில் ஆகஸ்ட் 10 அன்றும், அதை தொடர்ந்து தொடர் போராட்டமும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி நடத்த திட்டமிட்டுள்ளது. அதை மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் ஆதரிப்பதுடன், அனைத்து மக்களையும், பிற ஜனநாயக இயக்கங்களையும் ஆதரிக்கவும் கோருகிறது.
கடந்த மோடி ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு இவ்வமைப்பு கொடூரமான பாசிச வேளாண் சட்டங்களை எதிர்த்து வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்களை அரசு பயங்கரவாதத்தை எதிர்த்து நடத்தி வெற்றியும் பெற்றது. மோடி ஆட்சி வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது. போராட்டத்துக்கு பணிந்தது.
அண்மையில் ஜந்தர் மந்தர் போராட்டமும் கூட மோடி ஆட்சியை பணிய வைத்தது. கல்வி அமைச்சர் பதவி விலகினார். ஆகஸ்ட் 10 விவசாயிகள் போராட்டத்தையும் காக்ரோச் கட்சி ஆதரிப்பதாக கூறியுள்ளது.
பெருந்திரளான வெகுசன இயக்கங்கள், போராட்டங்கள்தான் பாசிச ஆட்சியை பணிய வைக்கும், அதன் சில பற்களை பிடுங்கி எறியும் என்பதைத்தாம் இந்த சம்பவங்கள் நிரூக்கின்றன. மாறாக சட்டமனற, பாராளுமன்ற எல்லைக்குள் நடக்கும் போராட்டங்கள், தேர்தல்கள், ஆட்சி மாற்றங்களால் பாசிசத்தின் பற்களை பிடுங்க முடியாது என்பதே நிதர்சனம்.இந்த பாராளுமன்றவாத, சட்டமன்றவாத மாயைகளையும் இப்போராட்டங்கள் தகர்க்கும் வேலையை செய்தன.
அந்தவகையில்...எதிர்வரும் ஆகஸ்ட் 10 போராட்டத்தை ஆதரிக்கவேண்டியது நமது கடமையாகும். மோடி ஆட்சியை தூக்கியெறியவோ, அல்லது பலவீனப்படுத்தவோ அவை பயன்படும் என்பது எதார்த்தம்.
மோடி ஆட்சி நாட்டை கடும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிவிட்டது.மேலும் மோசமான பாசிச காட்டாட்சிக்கு வித்திடும் இந்த அறிவிக்கப்படாத பொருளாதார அவசரநிலையை எதிர்த்து போராடவேண்டியதும், மோடி ஆட்சியை சவக்குழிக்கு அனுப்பவேண்டியதும் நமது கடமையாகும்.
தமிழகத்தில் இடதுசாரிகளும் ஜனநாயக அமைப்புகளும் பெயரளவுக்கு செய்துவந்த பாஜக எதிர்ப்பு அரசியலும் கூட முனைமழுங்கிப் போயுள்ளதை நாம் பார்க்கமுடிகிறது. ஒட்டுமொத்த அரசியலும் தவெக எதிர் திமுக என்பதாக திட்டமிட்டு திசைதிருப்பப்படுகிறது. பாஜக எதிர்ப்பை கூர்தீட்டும் வகையில் நாம் ஆகஸ்ட் 10 போராட்டத்தை ஆதரிப்போம்! அணிதிரள்வோம்!
ஏகாதிபத்திய - பாசிச எதிர்ப்பியக்கத்தை முன்னெடுப்போம்!
=====================
# ஆகஸ்ட் 10 அன்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி நடத்தும் நாடு தழுவிய போராட்டத்தை ஆதரிப்போம் !
# அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து தாராள வர்த்தக ஒப்பந்தங்களை எதிர்த்தும்
* விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலையை சட்டமாக்க கோரியும்,
* விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும்
* தொழிலாளர் விரோத 4 சட்ட தொகுப்புகளை எதிர்த்தும்
* மினசாரத்துறையை தனியார்மயமாக்கும் மசோதா 2025, விதை மசோதா 2025 மற்றும் உணவு பாதுகாப்பு சட்டதிருத்த மசோதாவை எதிர்த்தும்
* கட்டாய நில அபகரிப்பு மற்றும் கார்ப்பரேட் நிலக்குவியலை எதிர்த்தும்..
ஐக்கிய விவசாயிகள் முன்னணி நடத்தும் அகில இந்திய போரட்டம் வெல்க !
# இந்தியா மீதான அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கத்தை வீழ்த்துவோம் !
# 2023 வன திருத்தச் சட்டம், மையப்படுத்தப்பட்ட கல்வி முறையை உருவாக்கும் VBSA மசோதா, தொகுதி மறுவரையறை சட்ட திருத்தம் உள்ளிட்ட பாசிச சட்டங்களை எதிர்ப்போம் !
# தொழிலாளர்கள்- விவசாயிகள்-மாணவர்கள் உள்ளிட்ட அடிப்படை வர்க்கங்களைக் கொண்டு பாட்டாளி வர்க்க தலைமையிலான பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை கட்டியமைப்போம் !
தோழமையுடன்
க.தெய்வசந்திரன், மாநில அமைப்பாளர்
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
09.08.2026