கூர்த்தீட்டப்பட்ட கத்திகள் நாங்கள்...

செஞ்சாரல்

கூர்த்தீட்டப்பட்ட கத்திகள் நாங்கள்...

கூர்த்தீட்டப்பட்ட கத்திகள் நாங்கள்...

எங்கள் குரல்வளை ஒருபோதும் கயிறுகளின் கைகளில் இல்லை...

எங்கள் கழுத்துகளில் 

தூக்கு கயிறு சிக்கியே சாவுமே தவிர

எங்கள் உணர்வுகள்  இல்லை...

எங்கள் அலைகள் வேகம் குறைந்து இருக்கலாம்...

ஒருபோதும் உறைந்துவிடாது என்பதை 

உரித்தாக்குகின்றோம்...

எங்கள் உடல்களை செயலிழக்க செய்யமுடியுமே தவிர

எங்கள் உணர்வுகளை இல்லை...

ஒவ்வொரு நொடியும் நாங்கள் வளர்கின்றோம்...

அதனால் பாசிச கூட்டம்

எங்களை தொட்டாலும் ஆபத்துதான்...

தொடாமல் விட்டாலும் ஆபத்துதான்...

எங்களை உடைக்க உடைக்க

நாங்கள் உடைவதுமில்லை...

எங்களை அறுக்க அறுக்க நாங்கள்

கிழிவதுமில்லை...

ஏனெனில் ...

பாட்டாளிகள் எனக்கூறி ஒருபோதும்

ஓட்டாளிகளாக ஓட்டுப்பின்னே ஒருபோதும் ஓடமாட்டம்...

காட்டாறு போல பாசிச கரை உடைத்து

தேசமெங்கும் சமதர்மத்தை படைக்காமல் ஓயமாட்டோம்...

அணுகுண்டுகள் வந்தாலும் அரையடி அகன்று நிற்கமாட்டோம்...

எரிமலைகள் வந்தாலும் எதிர்க்க அஞ்சி ஒதுங்கி நிற்கமாட்டோம்...

புயலுக்கு பூசாயம் பூசமாட்டோம்...

பூவிற்கு புயலை எதிர்க்க போதிப்போம்...

வாழ்வதற்காக வளைந்து கொடுக்கமாட்டோம்...

வீழும் போதும் விதைகளுக்கு உரமாகமல் 

வீழமாட்டோம்...

தத்துவத்தில் விளைந்து நிற்போம்...

தேசமெங்கும் எழுந்து நிற்போம்...

அதனால் ரத்தங்களை சிந்துவோம் ...

வர்க்க யுத்தங்களை நடத்துவோம்...

இறுதியில் புதுமை சித்தங்களை 

புரட்சியினால் நிகழ்த்துவோம்...

அதனை  மக்கள் மனதில் நிறுத்துவோம்...

பகத்சிங் , ராஜகுரு , சுகதேவ் நினைவு நீடூழி வாழ்க...

- செஞ்சாரல்

https://www.facebook.com/100078055096852/posts/pfbid02xYP8ryJLQULUPDiXG3UzhsNR2ucFzJxB2nwXLN6tT4imv2jg7BpH1NdSqNpFmjzrl/?app=fbl