காதலில் கட்டுப்பாடும் ஒழுக்கமும் தேவை

கார்ல் மார்க்ஸ்

காதலில் கட்டுப்பாடும் ஒழுக்கமும் தேவை

காதலில் கட்டுப்பாடும் ஒழுக்கமும் தேவை என்று  வலியுறுத்தி மார்க்ஸ் தன் மகளை காதலித்த பால்  லஃபார்க்கிற்கு எழுதிய கடிதம் :

கார்ல் மார்க்ஸ் பால் லஃபார்க்கிற்கு எழுதிய கடிதம்

லண்டன் 13 ஆகஸ்ட் 1866

அன்பிற்குரிய லஃபார்க்,

பின்வருவனவற்றைச் சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்.

எனது மகளுடனான உறவை நீங்கள் தொடர வேண்டும் என விரும்பினால் திருமணத்திற்கு முந்தைய காதல் உறவில் இருப்பதை நிறுத்த வேண்டும். உங்களிடமிருந்து எந்த வாக்குறுதியும் தெரிவிக்கப்படாததால் திருமணம் இன்னும் உறுதியாகவில்லை(நிச்சயதார்த்தம்) என்பது உங்களுக்கே தெரியும்;. முறைப்படி எனது மகளுடன் உங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டாலும் கூட உங்களது திருமண வாழ்வு நீண்ட காலத்திற்குரிய ஒன்றாக இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.ஏதோ புனித சடங்குகள் செய்வதற்கும், கடும் சோதனை காலத்தை எதிர்கொள்வதற்கும் தவிர்ககமுடியாதபடி பேரன்பிற்குரிய இரு காதலர்கள் ஒரே வீட்டில் மிக நீண்ட காலம் தங்குவது போல நீங்கள் மிக நெருக்கமாக இருப்பது நெறியற்றதாகவே இருந்து வருகிறது. ஒரு வாரத்தில் ஒரு யுகமே கடந்துவிட்டது போல நாளுக்கு நாள் உங்களது நடத்தையில் ஏற்படும் மாற்றத்தை கண்டபோது எனக்கு அதிர்ச்சி தான் ஏற்பட்டது. தங்களது அன்பிற்குரியவர்களிடம் தள்ளியிருந்து, மனவடக்கத்தோடும், கட்டுப்பாடுகளோடும் பழகும் காதலர்களிடமே உண்மையான காதலுணர்வு வெளிப்படுவதாக நான் கருதுகிறேன். கட்டுங்கடாத காமஉணர்வுகளை கொட்டுவதிலும், திருமணத்திற்கு முன்பு உறவில்  இருப்பதற்கு ஆசைப்படுவதிலும் நிச்சயமாக உண்மையான காதல் இருப்பதில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.அமெரிக்க ஐரோப்பியர்களுக்கே உரிய(கிரியோல்) இந்தப் பண்பை நீங்கள் நியாயப்படுத்தி வாதிட முயன்றால், எனது மகளுக்கும் உங்களுக்கும் இடையிலான கட்டற்ற சுபாவத்தில் தலையிட்டு புத்திமதி கூறி திருத்த வேண்டியது எனது கடமையாகிறது.இங்கிலாந்தில் எந்தளவிற்கான சுதந்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளதோ அதற்கு உட்பட்டு என் மகளுடன் இருக்கும் போது காதலிக்க முடியவில்லை என்றால் நீங்களாகவே தள்ளிச் சென்று தொலைவிலிருந்து காதலிப்பதே சரியாகும்(காதலிக்க முயலலாம்). நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.

லாராவுடனான உங்களின் காதலுறவை உறுதிசெய்வதற்கு முன்பாக உங்களது பொருளாதார நிலை பற்றி தெளிவான விளக்கம் கொடுத்தாக வேண்டும். உங்களது காதலுறவு பற்றி நான் நன்கு தெரிந்து வைத்துள்ளதாக என் மகள் நம்புகிறாள். உண்மை அதுவல்ல, அவள் தவறாக புரிந்துவைத்துள்ளாள். நீங்கள்தான் உங்கள் காதலுக்காக முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று நினைத்து வந்த காரணத்தால் நான் இது பற்றி ஏதும் பேசாதிருந்தேன். என் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் புரட்சிகர போராட்டத்திற்காக தான் தியாகம் செய்துள்ளேன் என்பது உங்களுக்கு தெரியும். இதற்காக நான் வருந்தவில்லை. ஒருவேளை என் புரட்சிகரப் பணி ஆரம்பத்திலிருந்து துவங்கும் என்றால் நிச்சயமாக புரட்சிகர பயணத்தை தொடர்வேன். ஆனால் அப்போது நான் திருமணம் செய்வது மட்டும் இல்லாதிருந்திருக்கும். என் மகளை வளர்ப்பது எனது கடமையாக இருக்கின்ற வரையில், எதன் காரணமாக அவள் தாயின் வாழ்க்கை வளமற்று போனதோ அதே காரணத்தால் அவளது வாழ்வும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள முயலுவேன். கூடுதலான பொறுப்பு எனக்கே உள்ளதால் எனது மகளுடனான உங்களது போக்கின் மீது எனது தோழமையான புத்திமதிகளின்றி, எனது நேரடியான தலையீடின்றி(இதில் என் பக்கம் குறை இருக்கவே செய்கிறது!) இந்த விசயம் தற்போதைய(முடிவெடுக்கிற) நிலையை நிச்சயமாக எட்டியிருக்காது. உங்களது தற்போதைய நிலைமைகள் தொடர்பாக எனக்கு வந்தடைந்த செய்திகள்(நானாக யாரிடமும் கேட்கவில்லை) எதுவும் நமபிக்கை ஏற்படுத்துவதாக இருக்கவில்லை. மேற்படி(கேட்டபோது), லிகி நகரில் நடந்த அசம்பாவிதம் பிரான்சில் உங்களுக்கான பணி வாய்பை பாழாக்கிவிட்டது என்றும், இங்கிலாந்தில் வாழ்வதற்கு இன்றியமையாத கருவியான ஆங்கில மொழியை இன்னமும் நீங்கள் கற்றுத் தேரவில்லை என்றும், நீங்கள் கல்வி கற்கும் மாணவராக இருந்து வருவதாகவே உங்களது நிலைமையை பற்றி பொதுப்படையாக தெரிந்து கொள்ள முடிந்தது. மேலும் உங்கள் பிழைப்புக்கான வாய்ப்புகள் முழுதும் மிகுந்த சிக்கலுக்குரியதாக இருப்பதாகவே தெரிகிறது. எதையாவது உடனடியாக செய்தே ஆகவேண்டும் என்ற பேரார்வமும், அதிகமான நல்ல நோக்கங்களும் இருந்தபோதிலும், கடினமாக உழைக்கும் சுபாவமுடையவராக நீங்கள் இல்லை என்பதே அறிந்த வரையில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளில், எனது மகளுடன் மண வாழ்க்கையை துவங்குவதற்கு உங்களுக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படும். உங்கள் குடும்பத்தை பற்றி ஒன்றுமே எனக்கு தெரியாது. சில வசதி வாய்ப்புகள் அவர்களிடம் இருப்பதாகவே தோன்றினாலும் இதை மட்டும் வைத்து அவர்கள் உங்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. உங்களது திருமண ஆசைகள்(திட்டமிடல்கள்) பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது கூட எனக்கு தெரியாது. மேற்சொன்ன அனைத்து விசயங்களிலும் திட்டவட்டமான தெளிவான விளக்கம் தரப்பட வேண்டும் என்பதை மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். மேலும், தன்னை ஒரு யதார்த்தவாதியாக அறிவித்து கொண்ட நீங்கள் எனது மகளின் எதிர்கால வாழ்க்கையை பற்றிய விசயங்களில் துளியும் கூட கருத்துமுதல்வாத அனுகுமுறையை நான் பின்பற்றமாட்டேன் என்பதை புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். யதார்த்தத்தை புரிந்து கொண்டு வாழும் உங்களைப் போன்ற ஆடவர்கள் கற்பனையான காதல் வசனங்களுக்கு இடந்தரலாகாது. கற்பனை வசனங்கள் மூலம் என் மகளின் வாழ்கையை பணையம் வைக்க முயலக்கூடாது.

இப்போதே திருமணம் செய்து கொள்ளும் நிலையில் நீங்கள் இல்லை என்பதைத் தான் தெளிவுபட கூற விரும்புகிறேன். இக்கடிதத்தின் மூலம் வேறு எதையும் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. எனது மகளும் உங்களது போக்கை மறுத்திருக்க வேண்டும். நானும் எதிர்க்கவே வேண்டும். என் மகளுக்கும் உங்களுக்குமான உறவின் ஆழத்தை அறிவதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்பதால் திருமணத்தை பற்றி சிந்திப்பதற்கு முன்பு நல்ல ஆண்மகனாக நீங்கள் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

இக்கடிதம் நம்மிருவருவரைத் தவிர எவருக்கும் தெரியாமல் இருப்பதையே நான் விரும்புகிறேன். உங்கள் பதிலை எதிர்பார்த்திருக்கும்.

என்றென்றும் உங்கள்

கார்ல் மார்க்ஸ்

_______________________________________________________

 LETTER FROM KARL MARX TO PAUL LAFARGUE

LONDON 13 AUGUST 1866

My dear Lafargue,

Allow me to make the following observations:

1. If you wish to continue your relations with my daughter, you will have to discard your manner of “paying court” to her. You are well aware that no engagement has been entered into, that as yet everything is provisional. And even if she were formally your betrothed, you should not forget that this concerns a long-term affair. An all too intimate deportment is the more unbecoming inasmuch as the two lovers will be living in the same place for a necessarily prolonged period of purgatory and of severe tests. I have observed with dismay your change of conduct from day to day over the geological epoch of a single week. To my mind, true love expresses itself in the lover’s restraint, modest bearing, even diffidence regarding the adored one, and certainly not in unconstrained passion and manifestations of premature familiarity. Should you plead in defence your Creole temperament, it becomes my duty to interpose my sound sense between your temperament and my daughter. If in her presence you are unable to love her in a manner that conforms with the latitude of London, you will have to resign yourself to loving her from a distance. I am sure you take my meaning.

2. Before definitely settling your relations with Laura I require a clear explanation of your economic position. My daughter believes that I am conversant with your affairs. She is mistaken. I have not raised this matter because, in my view, it was for you to take the initiative. You know that I have sacrificed my whole fortune to the revolutionary struggle. I do not regret it. On the contrary. Had I my career to start again, I should do the

 

same. But I would not marry. As far as lies in my power I intend to save my daughter from the reefs on which her mother’s life has been wrecked. Since this matter would never have reached its present stage without my direct intervention (a failing on my part!) and without the influence of my friendship for you on my daughter’s attitude, a heavy personal responsibility rests upon me. As regards your present circumstances, the information, which I did not seek out but which has reached me nevertheless, is by no means reassuring. But to proceed. Concerning your position in general, I know that you are still a student, that your career in France has been more or less ruined by the Liège incident, that you still lack the language, the indispensable implement for your acclimatisation in England, and that your prospects are at best entirely problematic. Observation has convinced me that you are not by nature diligent, despite bouts of feverish activity and good intentions. In these circumstances you will need help from others to set out in life with my daughter. Concerning your family I know nothing. Assuming that they enjoy a certain competence, that does not necessarily give proof that they are willing to make sacrifices for you. I do not even know how they view your plans for marriage. I repeat, I must have definite elucidation on all these matters. Moreover, you, as an avowed realist, will hardly expect that I should treat my daughter’s future as an idealist. You, a man so practical that you would abolish poetry altogether, cannot wish to wax poetical at the expense of my child.

3. To forestall any misinterpretation of this letter, I can assure you that were you in a position to contract marriage as from today, it would not happen. My daughter would refuse. I myself should object. You must be a real man before thinking of marriage, and it will mean a long testing time for you and for her.

4. I should like the privacy of this letter to remain between our two selves. I await your answer.

Yours ever, KARL MARX.