பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்தல்

விசுவல் கேப்பிடலிஸ்ட் - தமிழில்: வெண்பா

பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்தல்

பகுதி 1
2024-ஆம் ஆண்டின் உலகளாவிய பாதுகாப்புச் செலவினங்கள்

மத்திய கிழக்கு, உக்ரைன் மற்றும் உலகின் பிற பகுதிகளில் தொடர்ந்து நிகழும் பல மோதல்களால், கடந்த பத்தாண்டுகளாக உலகளாவிய பாதுகாப்புச் செலவினம் அதிகரித்து வருகிறது.

பாதுகாப்புத்துறையில் முதலீடு செய்தல் (Investing in Defense) என்ற மூன்று பகுதிகளைக் கொண்ட தொடரின் முதல் பகுதியாக, Visual Capitalist நிறுவனம் Global X ETFs உடன் இணைந்து உலகளாவிய பாதுகாப்புச் செலவினத்தினை ஆராய்ந்துள்ளோம்.

2024-இல் உலகப் பாதுகாப்புச் செலவினம்

உலக அளவில், செலவினம் 2023-இல் 2.2 டிரில்லியன் டாலரில் இருந்து 2024-இல் 2.5 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

சர்வதேச யுத்தத்தந்திர ஆய்வு நிறுவன (International Institute for Strategic Studies) தரவுகளைப் பயன்படுத்தி, பிராந்தியவாரியாக உலகளாவிய செலவினங்களைப் பிரித்துக்காட்டும் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வட அமெரிக்கா குறிப்பிடத்தக்க அளவில் முன்னிலை வகிக்கிறது.

பிராந்திய பாதுகாப்புச் செலவினம்

பிராந்தியம் (Region)

பாதுகாப்புச் செலவினம் (Defense Spending)

வட அமெரிக்கா (North America)

$995 பில்லியன்

ஆசியா (Asia)

$534 பில்லியன்

ஐரோப்பா (Europe)

$457 பில்லியன்

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா (Middle-East and North-Africa)

$209 பில்லியன்

ரஷ்யா-யுரேசியா (Russia-Eurasia)

$184 பில்லியன்

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் (Latin America & The Caribbean)

$59 பில்லியன்

சஹாரா துணை ஆப்பிரிக்கா (Sub-Saharan Africa)

$19 பில்லியன்

2024-இல் கனடாவின் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு 10% அதிகரித்து, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.2% ஆக இருந்தபோதிலும், வட அமெரிக்காவின் மொத்த செலவினமான $995 பில்லியனில் பெரும்பகுதி அமெரிக்காவிலிருந்து வந்ததுதான்.

ஆசியா வட அமெரிக்காவிற்கு அடுத்து உள்ளது. இந்த பிராந்தியம் 2024-இல் $534 பில்லியன் செலவிட்டது, இதில் சீனா அதிகபட்சமாக $235 பில்லியனை வழங்குகிறது.

பாதுகாப்புத் தொழில்நுட்பத்தின் பங்கு

நடந்து வரும் மோதல்கள் உலகளாவிய பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை கணிசமாக பாதித்தாலும், போரில் தொழில்நுட்பத்தின் அதிகரிப்பும் முக்கிய பங்களித்துள்ளது.

பல நாடுகள் இப்போது சிறப்பான பாதுகாப்புத் திட்டங்களில் (specialized defense solutions) அதிகமாக முதலீடு செய்வதன் மூலம் தங்கள் படைகளை நவீனமயமாக்க முயல்கின்றன. இவற்றில் சென்சார்கள், இணையப் பாதுகாப்புத் திட்டங்கள் (cybersecurity solutions), செயற்கை நுண்ணறிவு சிப்கள் (artificial intelligence chips) போன்ற அதிமுக்கிய வன்பொருட்களும் அடங்கும்.

முதலீட்டாளர்களுக்கான வாய்ப்பு

பாதுகாப்புத் துறை முதலீட்டாளர்களுக்கு பல்துறை வாய்ப்புகளை வழங்குகிறது. வழக்கமான சந்தை சுழற்சிகளுக்கு அப்பாற்பட்ட காரணிகள் பெரும்பாலும் செலவினங்களை அதிகரித்து வந்தாலும், பாதுகாப்புத் தொழில்நுட்பம் தனித்துவமான வாய்ப்புகளை வழங்குகிறது.

பாதுகாப்புத் தொழில்நுட்பம், பெருந்தரவு (big data), செயற்கை நுண்ணறிவு (AI), ரோபாட்டிக்ஸ் (robotics), எரிபொருள் அமைப்புகள், விமானங்கள் உட்பட பல்வேறு பரந்த துறைகளை உள்ளடக்கியுள்ளது.

Global X Defense Technology SHLD ETF ஆனது, பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை உருவாக்கும் அல்லது அதனால் பயனடையும் வணிகங்களில் முதலீடு செய்ய முயல்கிறது.

பாதுகாப்புத்துறையில் முதலீடு செய்தல் என்ற தொடரின் இரண்டாம் பகுதியில், நேட்டோ (NATO) பாதுகாப்புத் தொழில்நுட்பத்திற்கு ஒதுக்கியுள்ள நிதி ஒதுக்கீட்டைப் பற்றி நாம் ஆராய்வோம்.

https://www.visualcapitalist.com/sp/gx03-global-defense-spending-in-2024/

==============================================================

பகுதி -2
நேட்டோ பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்காக எவ்வளவு செலவிடுகிறது?

நவீன இராணுவங்களில் பாதுகாப்பு தொழில்நுட்பம் பாரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சென்சார்கள், ரேடார், நெட்வொர்க்கிங், செயற்கை நுண்ணறிவு உட்பட சிறப்பு வாய்ந்த மற்றும் மேம்பட்ட நுட்பங்கள் இன்றைய போர்க்களங்களில் சாதாரணமாகக் காணப்படுகின்றன. பாதுகாப்பு துறையில் முதலீடு (Investing in Defense) என்ற தொடரின் இரண்டாவது பகுதியான இதில், நேட்டோவின் பாதுகாப்பு தொழில்நுட்ப செலவினத்தை ஆராயந்துள்ளோம்.

2014 வேல்ஸ் உச்சி மாநாடு

நியூபோர்ட், வேல்ஸில் நடந்த நேட்டோவின் 2014 உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்ட பல விஷயங்களில், கூட்டணி நாடுகள் தங்கள் பட்ஜெட்டில் குறைந்தது 20% புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கும் கொள்முதல் செய்வதற்கும் செலவிட ஒப்புக்கொண்டன.

ஒவ்வொரு நாட்டின் 2024 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புத் துறை பட்ஜெட்டை ஆய்வு செய்வதன் மூலம், ஒவ்வொரு நேட்டோ நாடும் பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்காக செலவிடும் தொகையை நாம் மதிப்பிட முடியும். நேட்டோ நாடுகள் தங்கள் வேல்ஸ் உச்சி மாநாட்டு உறுதிமொழியைத் துல்லியமாக நிறைவேற்றியிருந்தால், இந்த கூட்டு அமைப்பு 2024 ஆம் ஆண்டில் பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்காக சுமார் $290 பில்லியன் செலவழித்திருக்கும்—இது 2019 ஐ விட 30% அதிகமாகும்.

நாடுகளின் அடிப்படையில் அதன் விவரம் இதோ:

நாடு

பாதுகாப்பு தொழில்நுட்ப செலவு (Defense Tech Spend)

அமெரிக்கா

$193.6B

ஜெர்மனி

$17.2B

ஐக்கிய இராச்சியம்

$16.2B

பிரான்ஸ்

$12.8B

இத்தாலி

$7.0B

போலந்து

$5.6B

கனடா

$5.4B

நெதர்லாந்து

$4.7B

ஸ்பெயின்

$3.9B

துருக்கி (Türkiye)

$2.9B

ஸ்வீடன்

$2.5B

நார்வே

$2.0B

ருமேனியா

$1.8B

பெல்ஜியம்

$1.7B

கிரீஸ்

$1.6B

பின்லாந்து

$1.4B

செக்கியா (Czechia)

$1.3B

ஹங்கேரி

$1.1B

டென்மார்க்

$1.1B

போர்ச்சுகல்

$0.6B

ஸ்லோவாக்கியா

$0.6B

லிதுவேனியா

$0.5B

பல்கேரியா

$0.5B

எஸ்டோனியா

$0.3B

லாட்வியா

$0.3B

குரோஷியா

$0.3B

ஸ்லோவேனியா

$0.2B

லக்ஸம்பர்க்

$0.1B

அல்பேனியா

$0.1B

வடக்கு மாசிடோனியா

$0.1B

மாண்டினீக்ரோ

$0.1B

ஐஸ்லாந்து

$0.01B

இந்த செலவினத்தில் அமெரிக்கா முன்னிலை வகிப்பதோடு இந்த தொழில்நுட்ப செலவில் 66% பங்களித்துள்ளது.

பாதுகாப்பில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம்

நவீன நெட்வொர்க்குகள் இன்றைய போர்க்களங்களை இயக்குகின்றன. இராணுவங்கள் டிரோன்கள், சென்சார்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற மேம்பட்ட இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன. இதன் விளைவாக, பல்வேறு துறைகளில் பரவியுள்ள இந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கான செலவினத்தை அரசுகள் அதிகரித்து வருகின்றன. அவை தொழில்துறை மற்றும் ரோபாட்டிக்ஸ் முதல் இணையப் பாதுகாப்பு (cybersecurity) மற்றும் மிகை யதார்த்தம் (augmented reality) வரை அனைத்தையும் உள்ளடக்கியது.

மாறுபட்ட சந்தை வாய்ப்பு 

பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதன் மூலம், முதலீட்டாளர்கள் தனித்துவமான சந்தை வாய்ப்பைப் பெறுகிறார்கள். பொருளாதார சுழற்சிகளில் இருந்து பெரும்பாலும் துண்டிக்கப்பட்ட நிலையில், அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் இந்த தொழில்நுட்பங்களை அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன. இது முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்க பல்தரப்பு நன்மைகளை வழங்குகிறது. குளோபல் எக்ஸ் எஸ்ஹெச்எல்டி ஈடிஎஃப் (Global X SHLD ETF) முதலீட்டாளர்களுக்கு, பாதுகாப்புத்துறை தொழில்நுட்ப பயன்பாட்டால் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பெரிய தரவு (big data) துறைகளை உள்ளடக்கிய நிறுவனங்களுக்கும் நல்ல வாய்ப்பை வழங்குகிறது.

பாதுகாப்பு துறையில் முதலீடு (Investing in Defense) என்ற தொடரின் மூன்றாவது மற்றும் இறுதியான பகுதியில், அமெரிக்க பாதுகாப்புத் துறை (U.S. Department of Defense) பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்காக எவ்வளவு செலவிடுகிறது என்பதை காண்போம்.

https://www.visualcapitalist.com/sp/gx03-mapped-how-much-does-nato-spend-on-defense-technology/

=============================================================================

பகுதி 3
அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் தொழில்நுட்பச் செலவினம்: 2020 மற்றும் 2026

அமெரிக்கப் பாதுகாப்புத் துறை (DoD), அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு உத்தியின் (U.S. National Security Strategy) பகுதியாக, அமெரிக்க இராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளையும் நவீனமயமாக்கவும், நவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்யவும், 384 பில்லியன் டாலர் அளவுக்கு ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'பாதுகாப்பில் முதலீடு செய்தல்' (Investing in Defense) தொடரின் மூன்றாம் பகுதிக்காக, விசுவல் கேபிடலிஸ்ட் (Visual Capitalist) ஆனது குளோபல் எக்ஸ் ஈடிஎஃப்ஸ் (Global X ETFs) உடன் கூட்டு சேர்ந்து, அமெரிக்கப் பாதுகாப்புத் தொழில்நுட்பச் செலவினம் மற்றும் 2020 முதல் அதன் பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வை வழங்கியுள்ளது.

மேம்பட்ட தொழில்நுட்பத்தின் தேவை

அமெரிக்கப் பாதுகாப்புத் துறை (DoD), ஒவ்வொரு ஆண்டும் கையகப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிடுகிறது. 2020 உடன் ஒப்பிட்டு 2026 ஆம் ஆண்டிற்கான அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் திட்ட வாரியான செலவின விவரத்தைக் காட்டும் ஒரு அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

திட்டம்

நிதியாண்டு 2020

நிதியாண்டு 2026 (கோரப்பட்டது)

 

வான்வழி மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் (Aviation and Related Systems)

57.7

68.3

கட்டளை, கட்டுப்பாடு, தகவல் தொடர்பு, கணினிகள் மற்றும் புலனாய்வு (C4I) அமைப்புகள்

10.2

23.2

தரைப் படை அமைப்புகள் (Ground Systems)

14.6

11.6

ஏவுகணைத் தடுப்புத் திட்டங்கள் (Missile Defense Programs)

11.6

40.2

ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்கள் (Missiles and Munitions)

21.6

35.7

கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் அமைப்புகள் (Shipbuilding and Maritime Systems)

34.7

65.0

விண்வெளி அமைப்புகள் (Space Based Systems)

11.9

34.0

மொத்தம்

162.3

278.0

2020-ஐ விட 2026-இல் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் (DoD) செலவு 71% அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சிக்கு, அமெரிக்க இராணுவத்தின் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் தேவையே முக்கியக் காரணமாகும். இருப்பினும், DoD சில துறைகளில் மற்ற துறைகளை விட அதிகமாகச் செலவிட்டுள்ளது.

ஏவுகணைத் தடுப்புத் திட்டங்கள் (Missile Defense Programs) 2020 மற்றும் 2026-க்கு இடையில் 247% அதிகரிப்புடன், $11.6 பில்லியனில் இருந்து $40.2 பில்லியனாக உயரக்கூடும்.

தரைப் படை அமைப்புகள் (Ground Systems) மட்டுமே நிதியுதவியில் குறைவைக் காணும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரே பிரிவாகும். 2026-க்கான நிதியாண்டு பட்ஜெட் கோரிக்கை $11.6 பில்லியன் ஆகும், இது 2020-இல் இருந்த $14.6 பில்லியனை ஒப்பிடுகையில் 21% குறைவு ஆகும்.

முதலீடுகளைப் பாதுகாத்தல் 

அமெரிக்கப் பாதுகாப்புத் துறை மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள அரசுகள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், தங்கள் இராணுவங்களைப் புதுப்பிக்கவும் விரும்புகின்றன. பாதுகாப்புத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் மற்றும் உலகளாவிய பல மோதல்கள் காரணமாக, 2024-இல் பாதுகாப்புச் செலவினம் $2.5 டிரில்லியனாக உயர்ந்துள்ளது.

நவீன இராணுவங்களின் தேவைகள் பொதுவாக வழக்கமான பொருளாதாரச் சுழற்சிகளில் இருந்து துண்டிக்கப்படுவதால், பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு வலுவான பல்தரப்பு வாய்ப்புகளை வழங்குகிறது.

குளோபல் எக்ஸ் டிஃபென்ஸ் டெக்னாலஜி ஈடிஎஃப் (Global X Defense Technology ETF) (SHLD, பாதுகாப்புத் தொழில்நுட்பங்களின் உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபடும்ம் நிறுவனங்களில் முதலீடு செய்ய வாய்ப்பை வழங்குகிறது.

இந்த ஈடிஎஃப் (ETF), ரோபோடிக்ஸ் (robotics), விமானம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பெரிய தரவு அமைப்புகள் (big data systems) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.

'பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்தல்' என்ற 3-பகுதிகளின் தொடர், நாடுகளின் பாதுகாப்புச் செலவினத்தையும், பாதுகாப்புத் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும் ஆராய்கிறது. பகுதி ஒன்று உலகளாவிய பாதுகாப்புச் செலவினங்களைப் பற்றியது, பகுதி இரண்டு நேட்டோ (NATO) நாடுகளின் பாதுகாப்புத் தொழில்நுட்பச் செலவுகளை ஆராய்கிறது.

https://www.visualcapitalist.com/sp/gx03-charted-u-s-department-of-defense-technology-spending-2020-vs-2026/

வெண்பா (தமிழில்)

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு