கவிதை: தேர்ச்சி!
துரை. சண்முகம்

தேவை இல்லாத
விசயத்தில்
மூக்கை நுழைப்பதில்லை
மரம்கொத்தி.
அவசியமின்றி
துள்ளுவதில்லை
கெளுத்தி.
எறும்பும் கூட
ஒரு எட்டு
சும்மா நடப்பதில்லை.
அடைகாப்பு சுகத்தில்
அப்படியே குஞ்சுகள்
முட்டைக்குள்
கிடப்பதில்லை.
வாழும்
அவசியமும்
வளர்ச்சியின்
அவசியமும்
நீளும்
பரிணாமத்தில்..
மீண்டும்
குரங்காகவா
குடும்பம் நடத்தமுடியும்?
போராடும் வர்க்கங்கள்
வர்க்கப் போராட்டத்தில்
உலகை இணைக்கிறது!
'குட்டிச்சுவர் ஜனநாயகம்'
மீட்க!
அரசின்
பாவ மூட்டை சுமக்கும் கழுதைகள்
அங்கங்கே கனைக்கிறது.
புறந்தள்ளி
தேர்ச்சி கொள்!
முன்னேறிய
உற்பத்தி உறவில்
போராடும் வர்க்கத்தின்
சிந்தனையில்
சேர்ந்து.
- துரை. சண்முகம்