இராமன் பெயரால் காவிகளின் பேய் குரல்

செங்காற்று

இராமன் பெயரால் காவிகளின் பேய் குரல்

கதர் காவியின் கள்ள உறவில்

பாபர் மசூதி தகர்வு!

 

இந்தியாவின் இதயத்தை  கிழித்து

அதன் மதசார்பின்மை விழிகளை

தோண்டி எடுத்து தூர வீசியது

காவி காலி கும்பல்கள்...

 

பாதகர்கள் காலடியில்

பாபர் மசூதி தரைமட்டம்

நாடெங்கும் இரத்த ஓட்டம்

 

இராமனின் பெயரால்

புத்திகள் கருகி

கத்திகள் உருவி

இரத்த பசியார

எங்கும் காவிகளின் பேய் குரல்!

 

அண்டமும் நடுங்கும்

ஆழ்கடலும் எழும்பும்

கண்டங்களெல்லாம்

கரைந்தே மூழ்கும்

கொடுமையோ கொடுமை!

 

தாயின் உறுப்பை கிழித்து

கருவின் சிசுவை பிய்த்து

தெருவில் வீசிய

மாபாதக கொடுமை!

 

நீதிக்காக காத்திருந்த

நீண்ட வழியில்...

இன்றோ!

இடித்தவனுக்கே இடம் சொந்தம்

என்பதே நீதியென

இடியை இறக்கியது

காவி மன்றம்!

 

இதோ!

மதசார்பின்மை

ஜனநாயக மாண்புகளுக்கு

கல்லறை கட்டி விட்டு

அதன்மீது எழுகிறது

ராமனின் கோயில்...

- செங்காற்று 

(முகநூலிலிருந்து)