இந்திய இராணுவத்திற்கு உயர்தர ஏவுகணைகளை வழங்கவுள்ள ரிலையன்ஸ் - ரூ.10,000 கோடி லாபம் எதிர்பார்ப்பு

லங்காசிறி நியூஸ்

இந்திய இராணுவத்திற்கு உயர்தர ஏவுகணைகளை வழங்கவுள்ள ரிலையன்ஸ் - ரூ.10,000 கோடி லாபம் எதிர்பார்ப்பு

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் இந்திய இராணுவத்திற்கு உயர்தர ஏவுகணைகளை வழங்கவுள்ளது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் (Reliance Defence) நிறுவனம், ஜேர்மனியின் டீல் டிஃபென்ஸ் (Diehl Defence) நிறுவனத்துடன் இணைந்து இந்திய இராணுவத்திற்கான வல்கானோ 155 ஏவுகணைகள் (Vulcano 155mm Precision Guided Munitions) உற்பத்தி செய்ய உள்ளது.

இந்த ஒப்பந்தம் ரூ.10,000 கோடி வருவாயை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஏவுகணைகள் Laser மற்றும் GPS வழி நடத்தப்படும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன.

இவை 10 வினாடிகளுக்குள் இலக்கைத் தாக்கும் திறன் கொண்டவை. மேலும், எதிரியின் இலக்கு தடங்கல் தொழில்நுட்பங்களுக்கு எதிராகவும் செயல்படும்.

இந்திய அரசின் Make In India திட்டத்தின் கீழ், இந்த ஏவுகணைகளின் உற்பத்தியில் 50 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் டிஃபென்ஸ், மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் ஒரு புதிய ஆயுதத் தொழிற்சாலையை அமைக்கிறது. இங்கு ஆண்டுக்கு 2 லட்சம் பீரங்கி குண்டுகள், 10,000 டன் வெடிபொருட்கள் மற்றும் 2,000 டன் தூண்டு பொருட்கள் தயாரிக்கப்படும்.

இந்த ஒப்பந்தம், இந்தியாவின் தற்காப்பு ஏற்றுமதியை ரூ.50,000 கோடிக்கு உயர்த்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- லங்காசிறி நியூஸ்

https://news.lankasri.com/article/reliance-to-make-vulcano-ammo-for-indian-army-1749636812

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு