அதே பழைய சாம்ராஜ்யம் தன் ஆயுதங்களை மீண்டும் கூர் தீட்டுகின்றது - இன்றைய இலக்கு ஈரான்
பூக்கர் ஓமோலே, பொதுச் செயலாளர், கென்ய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - தமிழில்: செம்படையான்
உலக வரலாற்றில் மிகப்பெரும் அபாயம் ஏற்பட்டுள்ள தருணத்தில், கென்யா மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேசுகிறது.
மீண்டும் போர் முரசுகள் அதிர்கின்றன.
சலுகைகள் மானியங்கள் மீண்டும் சுருங்குகின்றன.
அதே பழைய சாம்ராஜ்யம் தன் ஆயுதங்களை மீண்டும் கூர் தீட்டுகின்றது.
இன்றைய இலக்கு ஈரான்.
தந்திரோபாய கோழைத்தனம் ஏதுமின்றி வெளிப்படையாக பேசுவோம். ஈரான் கொடூரமானது என்பதால் அது தாக்குதலுக்கு ஆளாக வில்லை. அது பிற்போக்குத்தனமானது என்பதால் அது தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. தன் மக்களுக்கு எதிராக இருப்பதற்காக ஈரான் தாக்கப்படவில்லை.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன் மண்டியிட மறுத்ததற்காகவே ஈரான் தாக்கப்படுகிறது.
அது தான் குற்றம்.
எப்போதும் அது குற்றம் தான்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஈரான் தேசம் பணிய மறுத்து வந்துள்ளது. தன் எண்ணையை கைமாற்றி விட மறுத்து வந்துள்ளது. வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ் இன் (இஸ்ரேலிய பொருளாதார தலைநகர்) கைப்பாவை அரசாக மாற மறுத்து வந்துள்ளது.
இந்த மறுதலித்தல்களுக்காகஅனுமதிகள், சதிகள், சுற்றி வளைத்தல்கள், மிரட்டல்கள், முடிவுறா பிரச்சாரங்கள் மூலம் ஈரான் தண்டிக்கப் பட்டுள்ளது.
இது அரசு தந்திரம் அல்ல. போர் முற்றுகை.
சலுகைகள் மானியங்கள் என்பவை கொள்கை காரணமானவை அல்ல. அவை ஆயுதங்கள்.
அந்த ஆயுதங்கள் அமைச்சர்களை அல்ல உழைப்பாளர்களை குறி பார்க்கின்றன. தளபதிகளுக்கு பதிலாக குழந்தைகளை குறிபார்க்கின்றன. மாளிகைகளை விடுத்து ஏழைகளை குறி பார்க்கின்றன.
சலுகைகள்/ மானியங்கள் என்றால், மருந்து இல்லா மருத்துவமனைகள், இயந்திரம் இல்லா ஆலைகள், எதிர்காலம் இல்லா இளைஞர்கள், என்று பொருள்.
மானியங்களும் சலுகைகளும் மெல்ல வெடிக்கும் வெடிகுண்டுகள்.
மெல்லக் கொல்லும் நஞ்சு தோல்வி அடையும் பொழுது, வல்லரசு உடனே கொல்லத் தயாராகிறது.
போர்க்கப்பல்கள் தயாராகின்றன. படைத் தளங்கள் விரிவாக்கப் படுகின்றன. போருக்கான உளவியல் காற்றை நிறப்புகின்றன. ஆட்சி மாற்றம் பற்றி வாஷிங்டன் நிர்வாக அரைகள் வெளிப்படையாக விவாதிக்கின்றன.
நாம் பலமுறை பார்த்த அதே திரைக்கதை தான்.
இராக்குக்கு எதிராக இது பயன்படுத்தப் பட்டது. லிபியாவுக்கு எதிராக பயன்படுத்தப் பட்டது. சிரியாவுக்கு எதிராக பயன்படுத்தப் பட்டது. வெனிசுலாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் கொரிய ஜனநாயக மக்களின் குடியசுக்கும் கியூபாவுக்கும் எதிராக பயன்படுத்தப் பட்டு வருகிறது.
மற்றவர்களை விடவும் ஆப்பிரிக்கர்களான நமக்கு இந்த திரைக்கதை நன்கு தெரியும்.
இதற்கு பலியானவர்கள் பலரை நாம் அடக்கம் செய்துள்ளோம்.
நிச்சயமின்மை என்ற பெயரில் காங்கோ சூறையாடப்பட்டது. ஜனநாயகத்தின் பெயரால் லிபியா அழிக்கப்பட்டது. பாதுகாப்பு என்று சொல்லி சோமாலியா இராணுவமயம் ஆக்கப்பட்டது. ஆப்பிரிக்க கண்டம் முழுவதிலும் நமது மக்கள் வயிற்றை இறுக்கிக் கட்டிக் கொண்டு இருக்கும் போது, சர்வதேச நாணய நிதியம் (IMF) தன் கொள்கைகளை உத்தரவுகளாக பிறப்பிக்கின்றது.
கென்யா கூட சுதந்திரமாய் இல்லை.
அன்னிய படைகள் நம் மண்ணில் தளம் அமைத்து உள்ளன. பட்ஜெட் அறிக்கைகள் நம் மக்களைத் தாண்டி ஐ.எம்.எஃப்க்கு பதில் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. நம் தேசத்தின் வளர்ச்சி ஏகாதிபத்தியத்தால் மூச்சுத் திணறுவதால், நம் இளைஞர்கள் புலம் பெயர்கின்றனர்.
எனவே, ஈரான் திணருவதை நாம் எளிதில் புரிந்து கொள்ள இயலும்.
ஈரான் இன் நெருக்கடிகளை, நம் சொந்தத் தொண்டை நெறிக்கப்பட்டது போலவே நாம் அறிய முடியும்.
ஈரானின் வீழ்ச்சி என்பதை, ஈரான் மக்களின் சுதந்திரம் என்று கருதுபவர்கள், ஒன்று அப்பாவிகளாக இருக்க வேண்டும், இல்லையேல் நேர்மை அற்றவர்களாக இருக்க வேண்டும். எப்பொழுது எல்லாம் ஏகாதிபத்தியம் தலையிடுகிறதோ, அப்பொழுது அங்கே சாம்பல் மட்டுமே மிஞ்சும். ஏகாதிபத்தியங்கள் தேசங்களை உருவாக்காது. அது ஜனநாயகத்தை கொண்டு வராது. ஏகாதிபத்தியங்கள் கைப்பாவைகளை மட்டுமே உருவாக்கும்.
ஏகாதிபத்தியம் விடுதலை தராது. ஆதிக்கம் மட்டுமே செய்யும்.
மார்ஸியர்களான நாங்கள் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்பவர்கள்.
ஒரு முக்கிய கேள்வியை முன் வைக்கிறோம்.
பலன் யாருக்கு.
சலுகைகளும் மானியங்களும் யாரை பாதிக்கும்? வால் வீதியையா (அமெரிக்க பங்குச் சந்தை) ஈரானிய தொழிலாளர்களையா? மிரட்டல்கள் ஈரானிய விவசாயிகளுக்கா, பெண்டகனுக்கா? ஆட்சி மாற்றம் உதவப்போவது மக்களுக்கா, அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கா?
பதில், எல்லோருக்கும் தெரிந்தது தான்.
ஆகவே, முதன்மை முரண்பாடு வெளிப்படையாக தெரிகிறது.
ஈரான் சமூகத்தில் உள்ள உள் முரண்பாடுகள் முதன்மை எதிரி அல்ல. அனைத்து நாடுகளிலும் உள்ளது போலவே ஈரானின் உள் முரண்பாடுகள், ஈரான் மக்களால் தீர்க்கப்பட வேண்டியவை.
அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகள் மூலம், வெளியில் இருந்து வரும் ஆக்கிரமிப்பு தான் முதன்மை எதிரி.
மார்க்ஸியர்கள் முதன்மை எதிரியைத் தான் தாக்குவார்கள்.
மறுபுறம், மறைமுகமாக வெளிப்படும் ஏகாதிபத்தியங்களின் கூற்றுகளின் நோக்கம் ஒடுக்கப்பட்டவர்களை நிராயுதபாணி ஆக்குவது தான். ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் சூறையாடுவது தான் வாஷிங்டனின் நோக்கம் என்பதை இது பிரதிபலிக்கிறது.
இந்த மாற்றத்தை நாம் நிராகரிக்கின்றோம். இந்தக் குழப்பங்களை நாம் நிராகரிக்கின்றோம்.
ஈரானின் இறையான்மையோடு, ஐயம் ஏதும் இன்றி உறுதியாக நிற்கிறோம்.
யாரும் சுதந்திரத்தை யார் மீதும் தினிக்க முடியாது என நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
சுய நிர்ணய உரிமையை எந்த அன்னிய ஆக்கிரமிப்பும் அல்லது பொருளாதார நெருக்கடிகளும் வழங்க முடியாது என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
தனக்காக மட்டும் அல்லாது, ஒடுக்கப்பட்ட அனைத்து தேசங்களுக்காகவும், ஈரான் இன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன் பணிய மறுத்து எதிர்த்து நிற்கிறது.
ஈரான் எதிர்த்து நிற்கும் போது. சாம்ராஜ்யம் பலவீனமாகிறது.
ஒரு தேசம் எழுந்து நிற்கும் பொழுது, மற்றவர்கள் தங்களாலும் எழுந்து நிற்க முடியும் என கற்றுக் கொள்கிறார்கள்.
ஈரானின் போராட்டம் நம்முடையதில் இருந்து வேறுபட்டது இல்லை.
இது கென்யாவுடன் தொடர்புடையது.
காங்கோவுடன் தொடர்புடையது.
பாலஸ்தீனத்துடன் தொடர்புடையது.
சுயமரியாதையுடன் வாழவும் போராடவும் செய்யும் ஒவ்வொரு விவசாயியுடனும் தொழிலாளியுடனும் தொடர்புடையது.
சர்வதேசியம் என்பது இரக்கம் கிடையாது. அதற்கு ஒரு இலக்கு உள்ளது.
எனவே, கென்ய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யாகிய நாங்கள் பின்வரும் பிரகடணத்தை அறிவிக்கின்றோம்:
ஈரான் மீதான
அனைத்து சலுகைகள்/மானியங்களையும் நாங்கள் எதிர்க்கிறோம்.
எல்லாவிதமான மிரட்டல்களையும் போர் தயாரிப்புகளையும் நாங்கள் எதிர்க்கிறோம்.
ஈரானின் உள் நாட்டு விவகாரங்களில் எல்லாவிதமான ஏகாதிபத்திய தலையீடுகளையும் நாங்கள் கண்டிக்கின்றோம்.
தங்களது அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் ஈரானிய மக்களின் உரிமைகளை நாங்கள் உயர்த்திப் பிடிக்கிறோம்.
ஏகாதிபத்தியத்தை அதன் அனைத்து அம்சங்களிலும் எதிர்த்து நிற்க கென்ய மற்றும் அனைத்து ஆப்பிரிக்க தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் நாட்டுப் பற்றாளர்களை அழைக்கிறோம்.
ஏகாதிபத்தியங்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளட்டும்.
எந்த எதிர்ப்பும் இன்றி ஆசியாவும் ஆப்பிரிக்காவும் ஆளப்பட்ட காலம் மலையேறி விட்டது.
பணிந்து கிடந்த காலம் போய் விட்டது.
ஒடுக்கப்பட்டவர்கள் எழுந்து நிற்க கற்றுக் கொண்டு விட்டனர்.
கண்ணியம், இறையாண்மை மற்றும் எதிர்ப்பின் அடையாளமாக ஈரான் இன்று இருக்கிறது.
ஈரானின் இறையாண்மையை பாதுகாத்தல் என்பது, கென்யாவின் மரியாதையை காப்பது ஆகும். ஆப்பிரிக்காவின் மரியாதையை காப்பது ஆகும். ஒடுக்கப்பட்ட மனிதத்தின் எதிர்காலத்தை காப்பது ஆகும்.
சரிந்து வீழும் ஏகாதிபத்தியங்களால் வரலாறு உருவாவது இல்லை.
எதிர்த்து நிற்கும் மக்கள் தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள்.
பாட்டாளிவர்க்க சர்வதேசியம் வாழ்க!
ஆப்பிரிக்க மேற்காசிய ஒற்றுமை ஓங்குக!
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக!
இறையாண்மை, கண்ணியம் சோசலிசத்தை நோக்கி முன்னேறுவோம்!
பூக்கர் ஓமோலே, பொதுச் செயலாளர்
கென்ய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
தமிழில்: செம்படையான்