கவிதை: நம்புங்கள் இது சுதந்திர நாடு!
செந்தளம் செய்திப்பிரிவு
இது சுதந்திர நாடு!
உலக பட்டினி குறியீட்டில்
இந்தியா 107வது இடம்!
ஆம்! இது சுதந்திர நாடு!
22 கோடி மக்கள்
உணவின்றி பசியோடு
இரவில் தூங்க செல்கின்றனர்
ஆம் இது சுதந்திர நாடு!
வீடீன்றி பாலத்தின் அடியிலும்
சாலையின் ஓரங்களிலும்
20 லட்சம் இந்தியர்கள்!
தலைநகரில் மட்டும்
50,000 மனிதர்கள்
வானமே கூரையென வாழ்கிறார்கள்
ஆம்! இது சுதந்திரநாடு!
முப்பது நிமிடத்திற்கு
ஒரு விவசாயி
செத்து மடிகிறான்
நம்புங்கள்!
இது! சுதந்திர நாடு!
மசூதியை இடித்து
ராமனுக்கு கோயில் கட்டியதும்
சுதந்திரம்தான்!
ஆஷிபாக்களை வன்புணர்ந்து
வீசி எறிவதும் இங்கு சுதந்திரம்தான்!
தமிழகத்தில் மட்டும்
ஆண்டுக்கு170 ஆணவப் படுகொலைகள்!
தயவுசெய்து நம்புங்கள்
இது சுதந்திர நாடு!
மண்ணோ மலையோ
காடோ களணியோ
எல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கே
சொந்தம்!
சத்தியமாக நம்புங்கள்
இது சுதந்திர நாடு!
வேலை தேடுவதையே
வேலையாக வைத்து
அலைபவர்கள்
இங்கே! 40 கோடி
சொன்னால் நம்புங்கள்
இது சுதந்திர நாடு!
சுதந்திரம் என்று
எழுதினால்கூட
இனி உங்கள்
பேனா முனை உடைக்கப்படலாம்
சத்தியமாக நம்புங்கள்
இதுதான் சுதந்திரநாடு
இந்தாருங்கள்...
கொடியும் குண்டூசியும்!
- செந்தளம் செய்திப்பிரிவு