உழைக்கும் வர்க்க அதிகாரத்தை ஏற்படுத்திக் கொள்ளும் அரசியலை நோக்கி செல்வதன்றி நமக்கு வேறு வழி இல்லை

துரை. சண்முகம்

உழைக்கும் வர்க்க அதிகாரத்தை ஏற்படுத்திக் கொள்ளும் அரசியலை நோக்கி செல்வதன்றி நமக்கு வேறு வழி இல்லை

மனுதர்மத்தின் உயிர் அரசு அதிகாரத்தில் இருக்கிறது. நீங்கள் மிகச் சரியாக மனுதர்மத்தை  அழித்தொழிக்க வேண்டும் எனில் இந்த அரச அதிகாரத்தை எதிர்க்க வேண்டும். அடக்குமுறை சித்தாந்தம் என்ற வகையில் அரசமைப்பு மனுதர்மத்தை பாதுகாக்கிறது. அதனால்தான் ஆள் அம்பு குதிரை படை யானை படை சேனை கொண்ட ஆரிய இனம் அல்லாத தமிழின மன்னர்களும் கூட அதனோடு சமரசம் செய்து கொண்டது.

இந்தக் கண்ணோட்டம் இல்லாத எந்த தத்துவத்தாலும் இந்துத்துவத்தை வெல்வது இயலாது. பார்ப்பனியம் என்று வழக்கில் அழைப்பதும்கூட இந்த அரசமைப்பு அதிகாரத்தோடு உயிர் வாழ்வது. அதன் வெளிப்பாடுகளை வெளியிலிருந்து தாக்குதல் தொடுக்கும் போது சில சீர்திருத்தங்களில் மீண்டும் உயிர்ப்பெறும். அரசு அதிகாரத்திற்கு தேவைப்படும்.

காரணம் உலக அரசியல் பொருளாதார ஒழுங்கமைப்புக்கு உகந்த வளர்ச்சிப் போக்கில் அரசு என்பதே தனியார் மயமாகும்

சூழலில், மீண்டும் பாகுபாடு வேறுபாட்டை நவதாராள மயத்தில் தன்னை தகவமைத்துக் கொள்ளும்.

மீண்டும் மீண்டும் இந்த அரசமைப்பு முறைக்கு மாற்றாக உழைக்கும் வர்க்க அதிகாரத்தை ஏற்படுத்திக் கொள்ளும் அரசியலை நோக்கி செல்வதன்றி நமக்கு வேறு வழி இல்லை. இப்படிப்பட்ட மக்களுக்கான அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலம்தான் பார்ப்பனியத்தை வீழ்த்த முடியும்.

புறநிலை எதார்த்தத்தில் இந்துத்துவ எதிர்ப்பு சக்திகள் எவ்வளவு மோதினாலும் 

ஒரு அளவுக்கு மேல் பிரச்சாரம் செய்யும் நடவடிக்கைகளையே தடை செய்யும் அளவுக்கு புறநிலை ஜனநாயகம் இருப்பதை பார்க்கிறோம். 

பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் எதிர் திசையில் இந்த ஜனநாயகம் இயங்குவதையும் பார்க்கிறோம். இதை புரிய வைப்பதில் இருந்து பிரிக்க முடியாதது இந்துத்துவ மதப் பிற்போக்கு அதிகாரத்துக்கு எதிரான போராட்டமும்.

உண்மையாக ஒடுக்கும் இந்த அதிகாரத்தைப் பற்றி மக்களுக்குப் புரிய வைக்காமல் 

மாற்று அரசியல் சக்தியாக நாம் பொருந்த முடியாது.

இப்போது இருக்கிற நில உடமை சமரசவாத ஜனநாயகத்தை கொண்டு இந்துத்துவ கட்டமைப்பை மாற்றி அமைக்க இயலாது. 

இடைவிடாது கொடுக்கும் தாக்குதல் என்பது மக்கள் சித்தத்தில் செய்யும் வேலை எனும் அளவுக்கு பயன்படும். 

ஆனால் அதற்கும் சரியான அரசியல் சித்தாந்த உள்ளடக்கம் வேண்டும். 

இதை நோக்கிய இடைக்கட்டங்களுக்கான அரசியல் சேர்க்கை இந்த வகையில் அமைவதே, அதாவது சாதிய சமூக அமைப்பை பாதுகாக்கும் அரசமைப்பு உறவுகளை மாற்றி அமைத்து ஒரு ஜனநாயக சட்ட திருத்த அரசமைப்பு முறைகளை ஏற்றுக்கொள்ளும் அரசியல் சக்திகள்தான் உண்மையான ஐக்கிய முன்னணியாக அமைய முடியும்.

     - துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/895505309822933/?rdid=u84RhwF1DmQdkcox

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு